Thursday, January 14, 2010

என்டர் தட்டா கவிதைகள்

என் ஆணவத்தை
அடக்குகிறது
உன் மௌனம்

2)உன் முகம்
நாணத்தால் சிவக்கையில்
பிறக்கின்றன ஆயிரம் கவிதைகள்

3)முதலும் முடிவும் தெரியா
சிக்கல் விழுந்த நூல்கண்டு
வாழ்க்கை

4) நிர்வாணமாய்
நின்று கொண்டிருக்கின்றன
இலையுதிர்கால மரங்கள்

5)நிமிடத்திற்கு நிமிடம்
உரு மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி மேகங்கள்

6)முதியோர் இல்லத்தில் தாயிடம்
விடைபெறுகையில்
பார்த்துப் போ என்கிறாள்

7) தாங்க இயலா வேதனை
துக்கம்
உடல்வலி
மனவலி
அனைத்தும் போக்கும்
மந்திரச் சொல்
அம்மா.

20 comments:

  1. முதியோர் இல்லத்தில் தாயிடம்
    விடைபெறுகையில்
    பார்த்துப் போ என்கிறாள்....
    அதுதான் அம்மா

    ReplyDelete
  2. ...............அம்மா...............


    எல்லாவற்றிற்குமான மைய்யம்.

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  4. 3,5 மற்றும் அம்மா அருமை.

    ReplyDelete
  5. மனதில் அடாவடியாய் எண்டர் ஆகும் கவிதைகள்:)

    ReplyDelete
  6. //பலா பட்டறை said...
    ...............அம்மா...............


    எல்லாவற்றிற்குமான மைய்யம்.//

    நன்றி பலா பட்டறை

    ReplyDelete
  7. அடிக்கடி தட்டுங்க.

    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  8. //திகழ் said...
    நன்றாக இருக்கிறது//

    நன்றி திகழ்

    ReplyDelete
  9. //பின்னோக்கி said...
    3,5 மற்றும் அம்மா அருமை.//

    வருகைக்கு நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  10. //வானம்பாடிகள் said...
    மனதில் அடாவடியாய் எண்டர் ஆகும் கவிதைகள்:)..

    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  11. //butterfly Surya said...
    அடிக்கடி தட்டுங்க.

    நல்லாயிருக்கு.//

    நன்றி butterfly Surya

    ReplyDelete
  12. மிகவும் சிறப்பாக இருக்கிறது அத்தனை கவிதைகளும்.

    அனைத்தையும் வெகுவாக ரசித்தேன்.

    ReplyDelete
  13. aaraam nambar kavithai..

    azhak kooda seiyalaam..

    (sorry,tvr!..translation not workking)

    ReplyDelete
  14. //வெ.இராதாகிருஷ்ணன் said...
    மிகவும் சிறப்பாக இருக்கிறது அத்தனை கவிதைகளும்.

    அனைத்தையும் வெகுவாக ரசித்தேன்//

    நன்றி வெ.இராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  15. // இய‌ற்கை said...
    nice:-)//


    நன்றி இய‌ற்கை

    ReplyDelete
  16. //பா.ராஜாராம் said...
    aaraam nambar kavithai..

    azhak kooda seiyalaam..

    (sorry,tvr!..translation not workking)//

    வருகைக்கு நன்றி பா.ரா.

    ReplyDelete