Friday, January 22, 2010

தர்மம்


அந்தணர்க்கு

ஆடை, தட்சணை

நுனிவாழை இலையில்

சோறு..பொரியல்..கூட்டு

வடை பாயாசம் என

தந்தையின் திதி

செய்து முடித்து

சாப்பிடுகையில்

அம்மா பசிக்குது

சாமி தருமம் - என

வாசலில் ஒலிக்கும் குரலை

விரட்டுகிறான்

இடது கையால்

போ..போ..என

29 comments:

  1. உண்மையான வரிகள்..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. காகத்தின் வடிவில், முன்னோர் வருகிறார்கள் என்று நம்புகிறோம் .
    அவர்கள் மனித வடிவிலும் வரலாம் என்று நம்ப மறுக்கிறோம்

    ReplyDelete
  4. கவிதை சிந்தனைக் கருத்துடன் அழகு.

    ReplyDelete
  5. உண்மைதான் .....இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்......

    இல்லாத காக்கையை தேடி, கூவி அழைத்து சோறு போடுபவன், அருகி நடக்கும் பட்டினிசாவை தடுக்க முனைவதில்லை

    வேடிக்கை மனிதர்கள்

    ReplyDelete
  6. //Sangkavi said...
    நல்ல வரிகள்...//

    நன்றி Sangkavi

    ReplyDelete
  7. //வெற்றி said...
    உண்மையான வரிகள்..//

    நன்றி வெற்றி

    ReplyDelete
  8. //goma said...
    காகத்தின் வடிவில், முன்னோர் வருகிறார்கள் என்று நம்புகிறோம் .
    அவர்கள் மனித வடிவிலும் வரலாம் என்று நம்ப மறுக்கிறோம்//

    முன்னோர் வருகிறார்களோ இல்லையோ..பசியால் வாடுபவர் பசியை தீர்ப்பது போன்ற புண்ணியச் செயல் வேறு ஏது?

    ReplyDelete
  9. //மாதேவி said...
    கவிதை சிந்தனைக் கருத்துடன் அழகு.//



    நன்றி மாதேவி

    ReplyDelete
  10. இந்த கடமைகளை செய்து முடிக்கும் போது அவனுக்கு பசிக்கிறதோ ?

    ReplyDelete
  11. இருக்காங்க சார் இப்படியும்:((

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete
  13. வாழ்க்கையில் இப்படியும் சிலர் கடமைக்காக.

    ReplyDelete
  14. நிதர்சனம். சமூகத்தில் நிறைய உண்டு இவர்களின் (அ)தர்மம்.

    ReplyDelete
  15. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அருமை அருமை ..//

    நன்றி Starjan

    ReplyDelete
  16. //பின்னோக்கி said...
    இந்த கடமைகளை செய்து முடிக்கும் போது அவனுக்கு பசிக்கிறதோ ?//

    :))))

    ReplyDelete
  17. //வானம்பாடிகள் said...
    இருக்காங்க சார் இப்படியும்:((//

    அப்படிப்பட்டவர்களை என்ன செய்யலாம்

    ReplyDelete
  18. //அக்பர் said...
    வாழ்க்கையில் இப்படியும் சிலர் கடமைக்காக.//

    வருகைக்கு நன்றி அக்பர்

    ReplyDelete
  19. //S.A. நவாஸுதீன் said...
    நிதர்சனம். சமூகத்தில் நிறைய உண்டு இவர்களின் (அ)தர்மம்.//

    தர்மம் ????

    ReplyDelete
  20. //ஈரோடு கதிர் said...
    அதர்மம்//

    ஆம்

    ReplyDelete
  21. வலது கையால் கலைத்தால் ஒட்டியிருக்கும் உணவு உதிர்ந்துவிடுமாம்.அதனால்தானாம் இடது கையால கலைப்பான் கஞ்சன்.நல்ல கவிதை.

    ReplyDelete
  22. இருக்கும் கொஞ்சத்தைப் பரிமாறி இருக்கலாம்.

    என்ன தர்மமோ!

    ReplyDelete
  23. வருகைக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன்

    ReplyDelete