Saturday, April 3, 2010

அழகிரி தி.மு.க., தலைவர்...?

எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., அவர் இருந்தவரை..ஒரு அசைக்க முடியாத சக்தியாய் இருந்தது..

படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்..என்று சொன்ன கர்மவீரரைக் கூடத் தோற்கடித்த மக்கள்...படுக்கையில் கிடந்த...தொகுதிப் பக்கம் பிரசாரத்திற்கு ஒரு முறைக் கூட வராத இருந்த புரட்சித் தலைவரை வெற்றி பெறச் செய்தனர்..ஏனெனில்..அவரிடம் அகங்காரமோ..தலைக்கனமோ..அளவிற்கு அதிகமான தன்னம்பிக்கையோ இருந்ததில்லை.

அப்படி அவரால் கட்டிக் காக்கப்பட்ட கழகம்..அவர் மறைவிற்குப் பின் உடைந்தது..இரு அணிகளாகப் பிரிந்தது.எம்.ஜி.ஆர்., மனைவியின் பெயரில் ஒரு அணியும்..ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு அணியும் உருவானது.. ஒற்றுமையின்மையாலும்..பதவி ஆசையாலும் பிரிந்த இக்கழகத்தை...புரட்சித்தலைவரால் தொடங்கப்பட்டிருந்தாலும்..அதை எண்ணாது மக்கள் புறக்கணித்தனர்.

மீண்டும்..அது ஒன்றிணைந்ததுமே..மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.

இது..மக்கள் மதிப்பு வைத்தவரால் ஆரம்பிக்கப்பட்ட தாயினும்..ஒற்றுமையில்லையேல் தூக்கி எறியப்படுவர் என்பதை உணர்த்தியது.

இந்த இடுகையை ஏன் இப்போது இடுகிறேன் என்பதற்கான முக்கியக் காரணம் உள்ளது.

சில கருத்து வேறுபாடுகளால்..தி.க., விலிருந்து வெளியேறி தி.மு.க., வை அண்ணா..தன் ஆதரவாளர்களுடன் ஆரம்பித்த போது..அது ஆலமரமாய் தழைத்து..தமிழக அரசியலில் பெரும் இடத்தைப் பிடிக்கும் என்று கூட அரசியல் புரிந்தோர் ஆருடம் கூறியிருக்க முடியாது.

தி.மு.க., பதவிக்கு வந்து..பின் அண்ணா மறைவிற்குப் பின் முதல் கட்டத் தலைவர்களிடையே..சிற்சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்..அவர்கள் ஒற்றுமையாய் இருந்ததால்தான்..கலைஞரால் கழகத்தை கட்டிக்காக்க முடிந்தது.எம்.ஜி.ஆர்., வெளியேற்றத்தை மக்கள் விரும்பாததால்...தி.மு.க., ஆட்சி சில காலம் தமிழகத்தில் இல்லாமல் போனது.அவர் மறைவிற்கு பின்..நான் மேலே கூறிய படிக்கு அ.தி.மு.க., உடைய கலைஞர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

ஆமாம்..இதெல்லாம்..தெரிந்த விஷயம்தானே..இப்போது என்ன என்கிறீர்களா?

தி.மு.க., இப்போது அப்படிப்பட்ட நிலையில் உள்ளது..சமீபத்தில் அழகிரி பத்திரைகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்..'கலைஞரை மட்டுமே தன்னால் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும் 'என்றும்..கழகத் தலைவர் பதவிக்கு போட்டி வந்தால்..தேர்தலில் நின்று வெல்வேன் என்றும் கூறியுள்ளார்.

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..நம்மில்.ஒற்றுமை நீங்கின்...'

மீனுக்காக காத்திருக்கும் கொக்குகள் நம்மை விழுங்க காத்துக் கொண்டிருக்கின்றன..

தி.மு.க., மேல் மட்டக் குழு..இப் பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்...

இன்னும் தேர்தல் வர ஒரு வருடமே உள்ள நிலையிலும்..ராகுல் சமீபத்தில்..'அ.தி.மு.க., உடன் கூட்டா' என்ற கேள்விக்கு..வெறும் சிரிப்பை பதிலாகக் கொடுத்ததையெல்லாம் பார்த்து..சிந்தித்து..அனுபவசாலி கலைஞர் உடனே செயல்படுவார் என்றே தோன்றுகிறது.

(அழகிரி..தி.மு.க., தலைவராகவும்..ஸ்டாலின்..முதல்வராகவும்..கனிமொழி மத்திய அமைச்சராகவும் ஆக வாய்ப்பு உள்ளதாக பட்சி சொல்கிறது)

32 comments:

  1. இதையும் தாங்கும் இதயம் எல்லோருக்கும் இருக்கிறது. பிரதமர் ரேஞ்சுக்கும் எதிர்காலத்தில் மோதுவார்கள் அய்யா!

    பிரபாகர்.

    ReplyDelete
  2. அவ்வளவுதானா சார்:)))

    ReplyDelete
  3. அப்படியா?
    என்னது?
    சொல்லிட்டாங்களா?
    இதுதான் அரசியல் உலகமா?
    சரியா போச்சு.

    ReplyDelete
  4. //பிரபாகர் said...
    இதையும் தாங்கும் இதயம் எல்லோருக்கும் இருக்கிறது. பிரதமர் ரேஞ்சுக்கும் எதிர்காலத்தில் மோதுவார்கள் அய்யா!

    பிரபாகர்.//

    வருகைக்கு நன்றி பிரபா

    ReplyDelete
  5. //வானம்பாடிகள் said...
    அவ்வளவுதானா சார்:)))//

    அவ்வளவுதான்:-)))

    ReplyDelete
  6. //Chitra said...
    அப்படியா?
    என்னது?
    சொல்லிட்டாங்களா? //

    சொன்னது பட்சி..சொல்வது பட்சி.அவ்வளவுதான்

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றிங்க ஐயா!

    ReplyDelete
  8. ஹும்ம்..

    கழகம்/கட்சின்னாலே இப்படித்தான் போல..!

    ReplyDelete
  9. ரொம்ப பீஈல் பண்ண வேண்டாம். அந்த கட்சி நாட்டுக்கு தேவையே இல்லை.

    ReplyDelete
  10. // ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..நம்மில்.ஒற்றுமை நீங்கின்...' //

    இந்த வார்த்தைகள் கட்சிகளுக்கு மட்டுமல்ல... எல்லா இடத்திலும் பொருந்துங்க... ஒற்றுமை என்பது மனதின் அடிதளத்தில் இருந்து வரவேண்டும்... உதட்டில் இருந்து வரக்கூடாது..

    ReplyDelete
  11. //
    'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு//

    யாருக்கு வாழ்வுன்னு சொல்லலியே! கலிஞ்சரு குடும்பத்துக்கு எப்போதும் வால்வுதான். அவனுங்க ஒன்னா இருந்தாலும், தனித்தனியாப் பிரிஞ்சு போயிட்டு அப்புறம் இதயம் இளிக்க கண்கள் பழிக்க ஒன்று கூடி மறுபடியும் நாட்டைக் குட்டிச்சுவராக்குவார்கள். கவலையே படாதீர்கள்!

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. இவங்க ஒற்றுமையா இருந்து தமிழகத்தை காப்பாத்தனும்னு மக்கள் யாரும் கண்ணீர் விடல.இவங்க நாசமா போகணும்னுதான் ஈழத்தமிழன் கண்ணீர் விடுகிறான்...அதற்கு நீதியாக கலைஞர் முதிய வயதில் கண்ணீர் வடிப்பார்

    ReplyDelete
  14. ஹ்ம்ம். இதெல்லாம் அவங்க உள்கட்சி விவகாரம்.. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் விமர்சிக்கக் கூடாது.. ஆனாலும் ஒரு பெரிய இயக்கத்தின் நிலை கேள்விக் குறியாவது வருத்தமானது..

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு.

    என்ன நடக்கப்போவுது என்று பார்ப்போம்.

    ReplyDelete
  16. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
    பழமைபேசி
    ஷங்கர்
    அஹோரி
    இராகவன் நைஜிரியா
    அக்கினிச் சித்தன்
    ஆர்.கே.சதீஷ்குமார்
    SanjaiGandhi™

    அக்பர்

    ReplyDelete
  17. எதுவும் நடக்கும்... மத்தவங்களுக்கு என்ன பதவின்னு சொல்லலையே

    ReplyDelete
  18. அப்போது தி.மு.க. விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேறியது போல கலைஞர் வெளியேறி அ.தி.மு.க. ஆரம்பித்திருந்தால்.............?

    தமிழகம் எப்படி இருந்திருக்கும் !!!

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  19. தமிழகத்தை இரண்டா பிரிக்கப் போறாங்க, மற்ற குடும்ப உறுப்பினர்களின் நெருக்குதலைப் பொருத்து 4, 6 8 ஆகக் கூட பிரிக்கப்படலாம் ன்னு செய்தி உலாவுது தெரியாதா உங்களுக்கு ?
    :)

    ReplyDelete
  20. ஊர் இரண்டு பட்டால்.. கூத்தாடிக்கு கொண்டாட்டம். :P

    ReplyDelete
  21. //பின்னோக்கி said...
    எதுவும் நடக்கும்... மத்தவங்களுக்கு என்ன பதவின்னு சொல்லலையே//

    அதை பொதுக் குழுவும்..செயற்குழுவும் தீர்மானிக்கும்

    ReplyDelete
  22. ///இளமுருகன் said...
    அப்போது தி.மு.க. விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேறியது போல கலைஞர் வெளியேறி அ.தி.மு.க. ஆரம்பித்திருந்தால்.............?

    தமிழகம் எப்படி இருந்திருக்கும் !!!

    இளமுருகன்
    நைஜீரியா///

    எப்படி இருந்திருக்கும் !!!

    ReplyDelete
  23. //கோவி.கண்ணன் said...
    தமிழகத்தை இரண்டா பிரிக்கப் போறாங்க, மற்ற குடும்ப உறுப்பினர்களின் நெருக்குதலைப் பொருத்து 4, 6 8 ஆகக் கூட பிரிக்கப்படலாம் ன்னு செய்தி உலாவுது தெரியாதா உங்களுக்கு ?
    :)//

    சாம் ராஜ்யபிரியனின் பின்னூட்டமே..உங்களுக்கான பதில்

    ReplyDelete
  24. ///சாம்ராஜ்ய ப்ரியன் said...
    ஊர் இரண்டு பட்டால்.. கூத்தாடிக்கு கொண்டாட்டம். :P///

    :-))))

    ReplyDelete
  25. SanjaiGandhi™ said...
    ஹ்ம்ம். இதெல்லாம் அவங்க உள்கட்சி விவகாரம்.. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் விமர்சிக்கக் கூடாது.. ஆனாலும் ஒரு பெரிய இயக்கத்தின் நிலை கேள்விக் குறியாவது வருத்தமானது..
    April 4, 2010 5:58:00 AM PDT//

    அய்யகோ!

    நானும் நொம்ப வருத்தப்படுறேன்!

    இதுக்கெல்லாம் நாம வருத்தப்படனும்னுதான் அவங்க விரும்புறாங்க!
    (:

    ReplyDelete
  26. அப்புரம் டிவிஆர் ஐயா!

    கருணாநிதியை கலைஞர்னு விளிச்சா.

    எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர்னு விளிக்கக் கூடாது!

    விரும்பினால் புரட்சி நடிகர் என்று சொல்லலாம்!

    (:

    ReplyDelete
  27. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
    ஜோதிபாரதி

    ReplyDelete
  28. ///அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    அப்புரம் டிவிஆர் ஐயா!

    கருணாநிதியை கலைஞர்னு விளிச்சா.

    எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர்னு விளிக்கக் கூடாது!

    விரும்பினால் புரட்சி நடிகர் என்று சொல்லலாம்!

    (:///


    அ.தி.மு.க., தோன்றுவதற்கு முன்னால் இருந்து நான் தி.மு.க.,ஆதரவாளனாய் இருந்து வருவதால்..எம்.ஜி.ஆரை., பிரித்துப் பார்ப்பதில்லை.மேலும் கலைஞர் அரசியல் வாழ்வில் செய்த மாபெரும் தவறாய் நான் நினைப்பது..எம்.ஜி.ஆரை., வெளியேற்றியது..

    ReplyDelete
  29. //வித்யா said...
    ஆட்டோ வராது:)//

    வந்தாலும் மீட்டருக்கு மேல கொடுக்க மாட்டேன்

    ReplyDelete
  30. //வந்தாலும் மீட்டருக்கு மேல கொடுக்க மாட்டேன்//
    எதாச்சும் பாத்து செய்ங்க சார். புள்ளகுட்டிக் காரங்க.

    ReplyDelete
  31. ///Vidhoosh(விதூஷ்) said...
    //வந்தாலும் மீட்டருக்கு மேல கொடுக்க மாட்டேன்//
    எதாச்சும் பாத்து செய்ங்க சார். புள்ளகுட்டிக் காரங்க.///

    :))

    ReplyDelete