Monday, April 5, 2010

வாய் விட்டு சிரிங்க..

1) அந்த அலுவலகத்திலே..எல்லோரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்காங்களே...ஏன்?
அங்க லஞ்சம் கொடுத்தா தான் எதுவும் நடக்குமாம்..அதை 'சிம்பாலிக்' கா உணர்த்தறாங்களாம்..லஞ்சம் தலை விரிச்சு ஆடுதுன்னு

2)அம்மா...அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்
ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்..அதுதான்..

3)நாதஸ்வர வித்வான்- (சபா காரியதரிசியிடம்)அடடா...நீங்க சொல்ற தேதிக்கு நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே
சபா காரியதரிசி-ஒத்து வரலேன்னா..பரவாயில்லை..நீங்க வந்தா போதும்

4)என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர்
அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க
பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல

5)நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு..சொல்றாங்க..ஆனா அவர் குரூப் ரத்தம் கிடைக்கலை
அவர் ரத்தம் என்ன குரூப்
ஊழல் குரூப்பாம்

6)அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற
ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!

17 comments:

  1. //3)நாதஸ்வர வித்வான்- (சபா காரியதரிசியிடம்)அடடா...நீங்க சொல்ற தேதிக்கு நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே
    சபா காரியதரிசி-ஒத்து வரலேன்னா..பரவாயில்லை..நீங்க வந்தா போதும்//

    :)

    //6)அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற
    ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!//

    சர்கரை விற்கும் விலைக்கு சர்கரை வேண்டாம் என்போருக்கு தள்ளுபடி செய்யலாம். இங்கே சர்கரை இல்லாத (சீன) காப்பிகளுக்கு 10 பைசா குறைவு தான்.

    ReplyDelete
  2. 3, 4 டாப்புன்னு சொல்லிட்டாரே ஆசான்னு மத்த எதாச்சும் மாத்தி சொல்லலாம்னா..... 3, 4 தான் டாப்பு!

    பிரபாகர்...

    ReplyDelete
  3. இந்த ரெண்டாம் நம்பர் என்னை எதுவும் பாத்து சொல்லலைல?

    ReplyDelete
  4. 4)என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர்
    அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க
    பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல....

    :-)))))

    ReplyDelete
  5. // நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு..சொல்றாங்க..ஆனா அவர் குரூப் ரத்தம் கிடைக்கலை
    அவர் ரத்தம் என்ன குரூப்
    ஊழல் குரூப்பாம் //

    இதுதான் ரொம்ப ஈசியா கிடைக்கும் அப்படின்னு பார்த்தா இதுக்கும் டிமாண்டா..

    எல்லாமே டாப் டக்கர் சாரே..

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி

    கோவி.கண்ணன்

    வானம்பாடிகள்
    பிரபாகர்
    Arun
    மங்குனி அமைச்சர்
    Goma
    இராகவன் நைஜிரியா
    Mathan elango
    அக்பர்

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி மணி (ஆயிரத்தில் ஒருவன்)

    ReplyDelete
  8. சாரி சார் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி சாம்ராஜ்ய ப்ரியன்

    ReplyDelete
  10. இளமுருகன்...நான் வலைப்பூ அரம்பித்தது முதல் வாரம் ஒரு முறை வாய் விட்டு சிரிங்க எழுதி வருகிறேன்..இதுவரை ஏறக்குறைய 700 ஜோக்குகள் எழுதியிருக்கிறேன்..என்னை ஒரளவு முன்னிலைப் படுத்த இதுதான் உதவியது.

    ReplyDelete
  11. அப்ப சரிங்க சார் தமிளிஷ்ல் ஓட்டு போட்டுட்டேன்

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி இளமுருகன்

    ReplyDelete