Thursday, July 8, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1) நான் புத்தகங்களை யாருக்கும் ஓசி கொடுக்கறதில்லைங்கற கொள்கையை உடையவன்..
நானும் அப்படித்தான்...ஆனால்..ஒரு சின்ன மாற்றம்..நான் புத்தகங்களை ஓசில தான் படிக்கணும்ங்கற கொள்கையை உடையவன்

2)அந்த அதிகாரி லஞ்சம் வாங்கறப்போ..அதிகாரிகள் கிட்ட மாட்டிக்கிட்டார்
அப்புறம்..
பத்தாயிரம் லஞ்சம் கொடுத்து தப்பிச்சுக்கிட்டார்

3)நம்ம தலைவர் அவர் பையனை அரசியல்ல நுழைக்க முயற்சி பண்றார்
அதுல என்ன தப்பு..நீ கூடத்தான் உன் வியாபாரத்திலே உன் பையனை சேர்த்துண்டு இருக்கே

4)டாக்டர் என்னை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஆகச்சொல்றார்னு நினைக்கிறேன்
எப்ப்டிச் சொல்ற
என் உடல்நிலைக்கு நான் நிறைய நடக்கணுமாம்..எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஆனா..சட்டசபைல இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்யலாமே

5)உங்க மிஸ் என்னை மக்கு ன்னு சொன்னாங்களா? எப்போ
நேத்து நீ செஞ்சுக் கொடுத்த ஹோம் ஒர்க்கைப் பார்த்து..'மக்கு' ஹோம் ஒர்க்கை தப்பு தப்பாய் செஞ்சிருக்குன்னு சொன்னாங்க

6) உன்னோட ஆஃபீஸ் ஸ்டெனோ சுத்தத் தங்கம்னு எப்படிச் சொல்ற
உரசிப் பார்த்துட்டுத்தான்

7)இந்தாங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்..இன்னிலேயிருந்து நம்ம ஆஃபீஸ்ல உங்களுக்கு வேலை...எதாவது சந்தேகம் இருந்தாக் கேளுங்க..
நான் வி.ஆர்.எஸ்.,ல போகமுடியுமா சார்

10 comments:

  1. நல்ல ரசனையான நகைச்சுவை ஐயா ..

    ReplyDelete
  2. அருமையான நகைச்சுவைகள்..

    ReplyDelete
  3. மக்கு..சிரிச்சேன் !

    ReplyDelete
  4. விஆர் எஸ் நக்கல் சூப்பர்ப்:)

    ReplyDelete
  5. நான் இதுவரை படிக்காத ஜோக்ஸ். நன்றி.

    ReplyDelete
  6. //நம்ம தலைவர் அவர் பையனை அரசியல்ல நுழைக்க முயற்சி பண்றார்
    அதுல என்ன தப்பு..நீ கூடத்தான் உன் வியாபாரத்திலே உன் பையனை சேர்த்துண்டு இருக்கே//இது நகைச்சுவையா ?


    எல்லாம் அமர்க்களம் !

    ReplyDelete
  7. //உன்னோட ஆஃபீஸ் ஸ்டெனோ சுத்தத் தங்கம்னு எப்படிச் சொல்ற
    உரசிப் பார்த்துட்டுத்தான்/


    :)

    அடப்பாவிகளா!

    ReplyDelete
  8. வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றி

    ReplyDelete