Monday, December 6, 2010

பிரதமர் பதவி விலகுவாரா?





காமன்வெல்த் போட்டிகள் 70000 கோடி ஊழல்

ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்

உச்சநீதிமன்றம் கேள்வி

பாராளுமன்றம் முடக்கம்



இவை எல்லாம் வருத்தம் அளித்தாலும்...பாராளுமன்றம் முடக்கம் பற்றி சில விஷயங்களை நாம் கவனித்தே ஆக வேண்டும்.



ஸ்பெக்ட்ரம் ஊழல் நம் நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு.இவ்வளவு பெரிய ஊழலில் மொத்த பணமும் ஊழல் செய்தாற்போன்று தோன்றும் நிலையில்..இது நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புத் தானே தவிர..இந்த பணத்திற்கான கமிஷன் பெறப்பட்ட தொகையே அன்பளிப்பு அல்லது லஞ்சமாக பெறப்பட்டது.எனலாம்.அது எவ்வளவு என காண வேண்டும்.நீரா வே தனக்கு 60 கோடி கிடத்தது என்று சொல்லியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில்..நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு பற்றி பார்ப்போம்.. 1லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பில் நம் நாட்டு வெளிநாட்டுக் கடன் முழுதும் அடைத்து விடலாம் என்கிறார்கள்.இது எவ்வளவு பெரிய விஷயம்.அதுவும் ஒரு பொருளாதார நிபுணர் பிரதமராக இருக்கையில்..நாட்டுக் கடன்களை அடைக்க சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கையில்..அதை தவறவிட்டது நியாயமா?

நான் சொன்னேன்..சம்பந்தப்பட்ட அமைச்சர்/அமைச்சகம் கேட்கவில்லை என பிரதமர் தரப்பில் சொல்வது கேலிக்குரியது அல்லவா?

அப்படியெனில்..உங்கள் மந்திரிசபை/மந்திரிகள் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லையெனில் நீங்கள் செயலிழந்த பிரதமர் என்பது உறுதியாகவில்லையா?நிர்வாகத் திறமையற்றவர் என நினைக்கத் தோன்றுகிறதே..

இனியும் அரசியல் சாக்கடையில் ஊறிய அரசியல்வாதிகள் போல பதவியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பதவியில் நீடிக்க வேண்டுமா?



உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கண்டனம்,வரலாறு காணா இரு பெரும் ஊழல்கள், உங்கள் ஆட்சியில்..

இனியும் நீங்கள் நீடிப்பது சரியா?

உங்கள் மனசாட்சி பதிலளிக்கட்டும்.

14 comments:

  1. உங்களுக்கென்ன சொல்லிடுவீங்க. இன்னொரு கைப்புள்ளைக்கு எங்க போறது?

    ReplyDelete
  2. ஐயா பலியாட்டின் பலி இப்போதல்ல ... வரும் நாடாளுமன்ற தேர்தல்வரை இவர் தொடர்வார் ...

    ReplyDelete
  3. உங்களுக்கென்ன சொல்லிடுவீங்க. இன்னொரு கைப்புள்ளைக்கு எங்க போறது?
    நித்திலம்
    கைப்புள்ளைக்குக் கூட ,கொஞ்சம் யோசிக்கும் திறன் இருக்குமே...

    ReplyDelete
  4. உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கண்டனம்,வரலாறு காணா இரு பெரும் ஊழல்கள், உங்கள் ஆட்சியில்..

    இனியும் நீங்கள் நீடிப்பது சரியா?


    .....அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....

    ReplyDelete
  5. //வானம்பாடிகள் said...
    உங்களுக்கென்ன சொல்லிடுவீங்க. இன்னொரு கைப்புள்ளைக்கு எங்க போறது?//

    ReplyDelete
  6. //நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    அடக் கடவுளே........//

    :))).

    ReplyDelete
  7. //கே.ஆர்.பி.செந்தில் said...
    ஐயா பலியாட்டின் பலி இப்போதல்ல ... வரும் நாடாளுமன்ற தேர்தல்வரை இவர் தொடர்வார் ...//

    தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

    ReplyDelete
  8. //goma said...
    உங்களுக்கென்ன சொல்லிடுவீங்க. இன்னொரு கைப்புள்ளைக்கு எங்க போறது?
    நித்திலம்
    கைப்புள்ளைக்குக் கூட ,கொஞ்சம் யோசிக்கும் திறன் இருக்குமே...//

    அதுதானே!!!

    ReplyDelete
  9. /// ஆதிமூலகிருஷ்ணன் said...
    :-)))///

    நன்றி ஆதி

    ReplyDelete
  10. //Chitra said...
    உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கண்டனம்,வரலாறு காணா இரு பெரும் ஊழல்கள், உங்கள் ஆட்சியில்..

    இனியும் நீங்கள் நீடிப்பது சரியா?


    .....அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....//

    :)))

    ReplyDelete
  11. //பிரதமர் பதவி விலகுவாரா? //

    என்னா கேள்வி இது. அவரு தயாரு... ரெடியா ராகுல் தாயாரு?? :-)))

    ReplyDelete
  12. ///ரோஸ்விக் said...
    //பிரதமர் பதவி விலகுவாரா? //

    என்னா கேள்வி இது. அவரு தயாரு... ரெடியா ராகுல் தாயாரு?? :-)))///

    :))))

    ReplyDelete