Saturday, December 18, 2010

மரம் (கவிதை)

மரத்தினடி கொத்தும்

மரங்கொத்திகள்

கிளைக்கு கிளை தாவும்

குரங்கினங்கள்

கூடுகட்டி முட்டையிட்டு

வம்சம் காக்கும் புள்ளினங்கள்

பூத்திருக்கும் பூக்களின்

மகரந்தம் சுவைக்கும் வண்டினங்கள்

அசைந்து கொடுப்பதில்லை

மரம்

16 comments:

  1. மன்னிக்கவும் ஆங்காங்கே குறியீடுகள் இட்டால் படிப்பவர்கள் எவ்வகையில் அக்கவிதையை உற்றுநோக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  2. இனிய எளிய நடையில் பொதிந்த கருத்துக்கள்.. பார்க்கும் கண்ணோடத்தில் வேறுபடலாம்..

    ReplyDelete
  3. மரம் எல்லோரையும் வாழவைக்கிறது ..

    ReplyDelete
  4. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தம் தோன்றுவது கவிதையின் வெற்றிதானே!
    வருகைக்கு நன்றிதம்பி கூர்மதியன்

    ReplyDelete
  5. //கே.ஆர்.பி.செந்தில் said...
    மரம் எல்லோரையும் வாழவைக்கிறது ..//

    நன்றி கே.ஆர்.பி.செந்தில்

    ReplyDelete
  6. நல்ல கவிதை,, குறியீடுகள் இல்லாததால், தவறான அர்த்தத்தில் கவிதை நீள்கிறது

    ReplyDelete
  7. மனிதனை விட உயர்ந்தது மரம் !

    ReplyDelete