Friday, December 31, 2010

தேர்தல் வருது (கவிதை)





தேர்தல் வருது

தேர்தல் வருது

தண்ணீர் குழாயிலே

தினம் வருது

தெரு விளக்குகள்

அணையாம எரியுது

மின் வெட்டு

மறைஞ்சுப் போச்சு

தார்ச் சாலைகள்

வழவழப் பாயிடுச்சு

ரேஷன்ல அரிசி

புழு இல்லாம கிடைக்குது

விண்ணைத் தொட்ட

விலைவாசியும்

மண்ணைத் தொடப்போகுது

தேர்தல் வருது

தேர்தல் வருது

தெரிஞ்சுப் போச்சு

மாக்களுக்கு

16 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தற்காலிக இனிமைகள்
    வாக்களித்த பின்
    மாயாகும் கொடுமைகள்!

    நல்ல கவிதை.

    ReplyDelete
  3. 2010 முன்னணி வலைப்பதிவுகளில் 9 ஆம் இடம்.

    வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  4. தேர்தல் வரும் போதாவது இதெல்லாம் நடக்குதேன்னு சந்தோஷம் பட வேண்டியதுதான்.

    ReplyDelete
  5. சில நாட்கள் சந்தோசத்திற்கு 5 வருட தண்டனை ....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //ராமலக்ஷ்மி said...
    தற்காலிக இனிமைகள்
    வாக்களித்த பின்
    மாயாகும் கொடுமைகள்!

    நல்ல கவிதை.//

    வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  7. //இராகவன் நைஜிரியா said...
    2010 முன்னணி வலைப்பதிவுகளில் 9 ஆம் இடம்.

    வாழ்த்துகள் ஐயா.//

    நன்றி இராகவன்

    ReplyDelete
  8. //அரசன் said...
    சில நாட்கள் சந்தோசத்திற்கு 5 வருட தண்டனை ....

    வாழ்த்துக்கள்//

    நன்றி அரசன்

    ReplyDelete
  9. கடைசி வார்த்தை சுடுகிறது.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. 'மாக்களுக்கு'...

    ReplyDelete