Sunday, December 12, 2010

சங்கமம் நிகழ்ச்சியும்..ஈரோடு பதிவர்களும்..


இரண்டு நபர் இருந்தால் தகராறு இல்லை.மூன்று நபராக ஆகும் போது..தகராறு வருவதற்கான சாத்தியுக்கூறுகள் தோன்றுகின்றன..பலர் கூடும்போது..தகராறு,கோஷ்டி மோதல்,தனித் தனிக் குழுக்கள் என தானாகவே உண்டாகி விடுகின்றன.

இதற்கு பல உதாரணங்களை

சுட்டிக் காட்ட முடியும் என்றாலும்..நான் சுட்டிக் காட்ட விரும்புவது..

வலைப்பதிவர் குழுமம் ஆரம்பிக்க நினைத்து..உண்மைத் தமிழன்,கேபிள் சங்கர்,மணிஜீ ஆகியோர் முயன்றபோது..அதற்கான ஆரம்பக் கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுகள்..தனி குழுமம் அமைக்க இப்போது என்ன தேவை என்று கேட்கப்பட்ட கேள்விகள்..அப்பப்பா..

ஆனால்..

ஈரோடு பதிவர்கள் சென்ற ஆண்டு நடத்திய சங்கமம் ஆரம்ப நிகழ்ச்சியை எவ்வளவு அருமையாக நடத்தினார்கள்.நேரில் செல்லும் வாய்ப்பை நான் இழந்தாலும் அது நடைபெற்ற விதம் பற்றி கேள்விப்பட்ட போது மகிழ்ந்தேன்.கண்டிப்பாக அடுத்த ஆண்டு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என எண்ணினேன்.

இந்த ஆண்டு..டிசம்பர் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள சங்கமம் நிகழ்ச்சியிலும் என்னால் பங்கேற்க முடியாது..என எண்ணி வருத்தப் பட்டாலும்..நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து..நடத்தும் அனைத்து ஈரோடு பதிவர்களையும் பாராட்டுகிறேன்.

நிகழ்ச்சி அருமையாய் நடக்க என் வாழ்த்துகள்..

சம்பந்தப் பட்ட அனைவரையும்..தனித் தனியாய் பெயரிட்டு வாழ்த்த ஆசை..ஆனாலும்..அப்படி சொல்கையில் யார் பெயரேனும் விட்டுப் போய் விட்டால்..அப்பதிவர் மனம் வருந்தக் கூடாது என்ற எண்ணத்தில்..தனித் தனி பெயரிட்டு வாழ்த்தவில்லை.

18 comments:

  1. சென்னையிலும் இதுபோல ஒவ்வொரு வருடமும் நடத்த யாராவது முன்வர வேண்டுமே...

    ReplyDelete
  2. உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.......

    ReplyDelete
  3. உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.......

    ReplyDelete
  4. நாமும் வாழ்த்துவோம்.

    ReplyDelete
  5. வாழ்த்துகளுக்கு நன்றிங்க

    வர முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete
  6. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க அய்யா.. தங்களின் பகிர்வைக் கண்டவுடன்.

    தாங்களும் எங்களுடன் கலந்துகொள்ளவேண்டும் என்பது எங்களின் ஆசை. கூடுமானவரை நிறைவேற்றுங்கள். ஆவலுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. //philosophy prabhakaran said...
    சென்னையிலும் இதுபோல ஒவ்வொரு வருடமும் நடத்த யாராவது முன்வர வேண்டுமே...//

    முன் வந்தாலும் முட்டுக்கட்டை போடுபவர்கள் ஏராளமாய் இருக்கிறார்களே

    ReplyDelete
  8. //வானம்பாடிகள் said...
    ஆமாம் சார். :)//

    வருகைக்கு நன்றி பாலா

    ReplyDelete
  9. //வழிப்போக்கன் - யோகேஷ் said...
    உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்......//

    .

    நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்

    ReplyDelete
  10. // cheena (சீனா) said...
    நல்வாழ்த்துகள்//

    வருகைக்கு நன்றி Cheena sir

    ReplyDelete
  11. //சங்கரியின் செய்திகள்.. said...
    நன்றி சார்.//

    நன்றி சொல்ல வேண்டியது நான் தான்

    ReplyDelete
  12. //தமிழ் உதயம் said...
    நாமும் வாழ்த்துவோம்//


    நன்றி தமிழ் உதயம்

    ReplyDelete
  13. //ஈரோடு கதிர் said...
    வாழ்த்துகளுக்கு நன்றிங்க

    வர முயற்சி செய்யுங்கள்//
    நன்றி கதிர்
    வர இயலாமைக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்

    ReplyDelete
  14. // க.பாலாசி said...
    ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க அய்யா.. தங்களின் பகிர்வைக் கண்டவுடன்.

    தாங்களும் எங்களுடன் கலந்துகொள்ளவேண்டும் என்பது எங்களின் ஆசை. கூடுமானவரை நிறைவேற்றுங்கள். ஆவலுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.//

    கதிருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்

    ReplyDelete