Thursday, January 13, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (14-1-11)

ரஜினி நடிக்கும் சுல்தான் தெ வாரியர் படத்திற்கு ஹரா என்ற பெயர் வைத்தார்கள்.ஹரா சமஸ்கிருத பெயர்..வரிவிலக்கு கிடைக்காது என்பதால் படத்தின் பெயரை 'ராணா' என மாற்றலாமா என யோசித்து வருகிறார்களாம்.(.என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கட்டும்..ரஜினி ராசிப்படி படம் பாபா ஆகாமல் இருந்தா சரி என்கிறார் ஒரு ரசிகர்)

2)சமீபத்தில் பேராசிரியர் அன்பழகனின் 88ஆவது பிறந்தநாள் வாழ்த்தில் கலைஞர்..அன்பழகன் 88 வயது இளைஞராகவே இருக்கிறார் என்றார்.,(ஒருவேளை கழகத்தின் இளைஞர் பாசறைத் தலைவராக அன்பழகனை நியமிக்கும் எண்ணம் கலைஞருக்கு இருக்கிறதோ..-என்கிறார் ஸ்டாலின்)

3)ஸ்ரீலங்கா அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைப் போரில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 1,46,679 பேர் என சொல்லப் படுகிறது...(இந்தியா விரைவில் ஸ்ரீலங்காவிற்கு இது சம்பந்தமாக உதவக்கூடும்)

4)சிக்கன் 65 என்கிறோமே அப்படியென்றால் என்ன தெரியுமா..ஒரு கறிக்கோழி முழுதுமாக வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்ளும் நாட்கள் 65ஆம்.(சுருக்கமாகச் சொல்வதானால் அந்த்க் கோழியின் ஆயுள் 65 நாட்களே)

5)என வாழ்க்கையில் பலவேறு நிலையில் உறுதுணையாக இருந்து வழிகாட்டியாய் திகழ்ந்தது திருக்குறள் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு பள்ளிவிழாவில் தெரிவித்துள்ளார்..(அவர் பள்ளியில் கூடத் தெரிவிப்பார்)

6)தரமணி சாலை ராஜீவ் காந்தி சாலை ஆனது.அரசு பொது மருத்துவ மனை ராஜீவ் காந்தி மருத்துவ மனை ஆகப் போகிறது.அது போல ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நகர் எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்கிறார் ஒரு காங்கிரஸ் ஊழியர்.(கூட்டணிக்குப் பின் இது பற்றி முடிவெடுக்கப் படலாம்)

7) தனித்து நின்றால் 50 இடங்களில் வெல்வோம் என்றுள்ளார் மருத்துவர். (கூட்டணியில் சேர்ந்தால் அந்த அளவு கூட தொகுதிகள் கிடைக்காதே..நாமே தனித்து நின்றால் என்ன..என்கிறார் ஒரு அப்பாவி பா.ம.க., தொண்டர்.

8)புத்தகக் காட்சிக்கு

சென்றிட வேண்டும்

அலமாரியில்

அடைபடாது

சிறிது இடம்

உள்ளது

10 comments:

  1. .ரஜினி ராசிப்படி படம் பாபா ஆகாமல் இருந்தா சரி என்கிறார் ஒரு ரசிகர்

    .....ரஜினி ராசிப்படி படம் "பாஷா" ஆகாதா?

    ReplyDelete
  2. கவிதைதான் பிடிச்சிருக்கு.உங்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. //இந்தியா விரைவில் ஸ்ரீலங்காவிற்கு இது சம்பந்தமாக உதவக்கூடும்//
    Powerful lines.....

    ReplyDelete
  4. ஓகே ரைட்டு விடுங்க

    ReplyDelete
  5. /(இந்தியா விரைவில் ஸ்ரீலங்காவிற்கு இது சம்பந்தமாக உதவக்கூடும்) /

    இதுலயுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:(

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சித்ரா..
    கடந்த சில வருடங்களில்..ரஜினிக்கு ஒரு ஹிட் படம் வந்ததும்..அடுத்து கிட்டத்தட்ட அவரே தயாரிக்கும் படம் தோல்வியடைகிறது.
    அதையே மெல்லிய நகைச்சுவையுடன் கூறினேன் (பாபா, குசேலர்)

    ReplyDelete
  7. //ஹேமா said...
    கவிதைதான் பிடிச்சிருக்கு.உங்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...


    ஹேமாவிற்கு கவிதை பிடிக்காவிட்டால் வேறு யாருக்குப் பிடிக்கப் போகிறது.
    நன்றி ஹேமா..
    பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி நாகசுப்ரமணியன்

    ReplyDelete
  9. //விக்கி உலகம் said...
    ஓகே ரைட்டு விடுங்க//

    விக்கி சொன்னப் பிறகு அப்பீல் ஏது..
    டபுள் ரைட்டு

    ReplyDelete
  10. //வானம்பாடிகள் said...
    /(இந்தியா விரைவில் ஸ்ரீலங்காவிற்கு இது சம்பந்தமாக உதவக்கூடும்) /

    இதுலயுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:(//
    வானம்பாடிகள் said...
    /(இந்தியா விரைவில் ஸ்ரீலங்காவிற்கு இது சம்பந்தமாக உதவக்கூடும்) /


    வருகைக்கு நன்றி Bala

    ReplyDelete