Sunday, January 2, 2011

அஞ்சாநெஞ்சனுடன் உண்மைத்தமிழன் சந்திப்பு

உண்மைத்தமிழன் (த் இருப்பதை கவனிக்கவும்) மதுரை செல்லத் தீர்மானித்தார்.

அங்குச் சென்று அஞ்சா நெஞ்சனைச் சந்தித்து தனக்கு பதிவர்களாலும், வேண்டாத சிலராலும் இழைக்கப் படும் அநீதிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.இனி அவர்கள் சந்திப்பு

உ.த- வணக்கம்

அ.நெ-வணக்கம்..நீங்க

உ.த- என்னை உண்மைத் தமிழன்னு சொல்லுவாங்க..

அ.நெ- எங்களுக்குத் தெரியாமல் உண்மை பேசியா..(பக்கத்தில் ஒருவர் அவர் காதில் முணுமுணுக்கிறார்).ஓகோ..நீங்க தான் இணையத்தில 'தாத்தா..தாத்தா..'ன்னு

எழுதறவரா

உ.த- அது வேற..இப்போ சந்திக்க வந்தது வேற விஷயங்கள்

அ.நெ- என்ன விஷயம்..

உ.த- என் பதிவுக்கு சிலர் எதிர்த்து ஓட்டுப் போட்டுறாங்க....நமக்கு விழாத ஓட்டுகளை..நமக்கு எதிரான ஓட்டுகளை நமக்கு ஆதரவாக மாற்றுவது எப்படி? ன்னு யோசனை செய்தேன்..உடனே..இடைத் தேர்தல்கள் ஞாபகம் வந்தது..உங்க ஞாபகமும் வந்தது..

அ,நெ_ ஏன்..சிவகங்கை ஞாபகம் வரலியா

உ.த- மதுரை பக்கம்..சிவகங்கைன்னா தில்லிப் போகணுமே

அ.நெ- சரி..சரி..இப்போ உங்க எதிர்ப்பு ஓட்டை உங்களுக்கு சாதகமாக்க..(அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, காதில் ஏதோ சொல்கிறார்)

உ.த- அப்படியா..நன்றிங்க..அப்பறம் நம்மளுக்கு ஆதரவு ஓட்டை அதிகரிக்கணும்னா

அ.நெ-அதுக்கும் வழியிருக்கு (காதில் சொல்கிறார்)

உ.த- ரொம்ப நன்றிங்க..நான் வரேன்..

அ.நெ- நான் சொன்ன இந்த ரகசியங்களுக்கு குருதட்சணை கிடையாதா?

உ.த- என்னவேணும்னாலும் சொல்லுங்க..என் அப்பன் முருகன் மூலமா ஏற்பாடு பண்ணிடறேன்

அ,நெ-தேர்தல் சமயத்திலே சொல்லியனுப்பறேன்..பத்து தொகுதிகளுக்கு அழைச்சிட்டுப் போவேன்.அங்கெல்லாம் நம்ம ஆளுக்கு ஓட்டுப் போட்டுடணும்.

உ.த- இல்லேன்னா.. அல்லது இந்த ரகசியத்தை அம்மாகிட்ட சொல்லிட்டா

அ.நெ-கையிருக்க வேண்டிய இடத்திலே..கால் இருக்கும்..

(உ.த., பதற்றத்துடன் ஓட்டமெடுக்கிறார்)

26 comments:

  1. என்னாச்சி புத்தாண்டு ஆரம்பிச்ச உடனே சனி பகவான் கண்ண தெறக்க எதோ பதிவு போட்டிருக்கீங்களோ!?

    ReplyDelete
  2. அப்பா..ராஜேந்திரன் வந்தாச்சு..நன்றி

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி விக்கி உலகம்

    ReplyDelete
  4. //
    நமக்கு விழாத ஓட்டுகளை..நமக்கு எதிரான ஓட்டுகளை நமக்கு ஆதரவாக மாற்றுவது எப்படி? ன்னு யோசனை செய்தேன்..உடனே..இடைத் தேர்தல்கள் ஞாபகம் வந்தது..உங்க ஞாபகமும் வந்தது..
    //
    ஹா ஹா........

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்

    ReplyDelete
  6. சின்ன தாத்தா..

    ஏன் சுருக்கிட்டீங்க..? இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்..!

    நாடக எழுத்தாளர்களுக்கு மட்டுமே இப்படி ரத்தினச்சுருக்கமாக நெத்தியடி அடிப்பது கை வந்த கலை..

    "கை இருக்க வேண்டிய இடத்துல கால் இருக்கும்"

    வெகுவாக ரசித்தேன்.. மிக்க நன்றி..!

    ReplyDelete
  7. // (த் இருப்பதை கவனிக்கவும்) //

    செம நக்கல்...

    ReplyDelete
  8. @ உண்மைத்தமிழன்
    // ஏன் சுருக்கிட்டீங்க..? இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்..! //

    உங்க அளவுக்கு யாராவது எழுத முடியுமா தலைவரே... :)))

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி Philosophy Prabhakaran

    ReplyDelete
  10. //Philosophy Prabhakaran said...
    @ உண்மைத்தமிழன்
    // ஏன் சுருக்கிட்டீங்க..? இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்..! //

    உங்க அளவுக்கு யாராவது எழுத முடியுமா தலைவரே... :)))//

    :))))

    ReplyDelete
  11. கடந்த ஆண்டு டாப் டென்னில் 9 ஆம் இடம் பெற்றதற்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. ஹி.ஹி.ஹி............. அஞ்சா நெஞ்சன நேர்ல பாக்குற அளவுக்கு உண்மைத்தமிழன் சாருக்கு பழக்கமா ??? யப்பா ......... மங்கு எஸ்கேப்

    ReplyDelete
  13. கலக்கல் அய்யா த் மிக ரசித்தேன்... சுருங்க அழகாய்...

    பிரபாகர்...

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி எல் கே

    ReplyDelete
  15. //கோவி.கண்ணன் said...
    கடந்த ஆண்டு டாப் டென்னில் 9 ஆம் இடம் பெற்றதற்கு நல்வாழ்த்துகள்.//

    நன்றி கோவி

    ReplyDelete
  16. //கோவி.கண்ணன் said...
    கடந்த ஆண்டு டாப் டென்னில் 9 ஆம் இடம் பெற்றதற்கு நல்வாழ்த்துகள்.//

    நன்றி கோவி

    ReplyDelete
  17. //மங்குனி அமைச்சர் said...
    ஹி.ஹி.ஹி............. அஞ்சா நெஞ்சன நேர்ல பாக்குற அளவுக்கு உண்மைத்தமிழன் சாருக்கு பழக்கமா ??? யப்பா ......... மங்கு எஸ்கேப்

    //

    :))))

    ReplyDelete
  18. //பிரபாகர் said...
    கலக்கல் அய்யா த் மிக ரசித்தேன்... சுருங்க அழகாய்...

    பிரபாகர்.....//



    நன்றி பிரபா

    ReplyDelete
  19. we r coming to close . in tamilmanam iam 11th place , u r 9th place.. congrats

    ReplyDelete
  20. // சி.பி.செந்தில்குமார் said...
    we r coming to close . in tamilmanam iam 11th place , u r 9th place.. congrats//

    முன்னேறுங்கள்...முன்னேறவேண்டியவர் நீங்கள்
    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  21. //சி.பி.செந்தில்குமார் said...
    25 vada//

    நன்றி

    ReplyDelete