Wednesday, January 19, 2011

கோழைகள் (கவிதை)

காதலித்தான்
காதலித்தாள்
மணமுடித்தான்
ஒருமுழ கயிற்றை
மூன்று முடிச்சுடன்
கழுத்தில் கட்டி
வேறோருத்தியை.
கோழை
இவள் தழுவினாள்..
மூன்று முழக் கயிற்றையும்
ஒரு முடிச்சையும்
நன்றிகெட்ட
நம்பிக்கைத் துரோகிக்காக!!

12 comments:

  1. இது காமத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட காதலா இருக்கும்.... ஆனா அவள் அவன சட்டையை பிடிச்சிருக்கணும்.

    ReplyDelete
  2. இதற்கு பெயர் காதலே இல்லை.
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/2010-2011.html

    ReplyDelete
  3. காதல் என்ற பெயரில் துரோகம்.

    ReplyDelete
  4. கோழை. சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  5. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி சி. கருணாகரசு

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி Sakthistudycentre

    ReplyDelete
  7. இப்படியும் சில காதல் கருமாதியில் !

    உங்கள் ”மீன்” கவிதை
    உயிரோசையில் வாசித்தேன்.வாழ்த்துகள் ஐயா !

    ReplyDelete
  8. //ஹேமா said...
    இப்படியும் சில காதல் கருமாதியில் !

    உங்கள் ”மீன்” கவிதை
    உயிரோசையில் வாசித்தேன்.வாழ்த்துகள் ஐயா !//



    உங்க கவிதையும் 'சொல்லா சாபமா' படித்தேன் உயிரோசையில்.வாழ்த்துகள்

    ReplyDelete
  9. எந்த ஒரு கஷ்டமும் ,இறைவன் நமக்கு தராத வரை ,
    நாமும் வீரர்கள்தான்.

    மூன்றுமுழக்கயிறு ஒரு முடிச்சுக்கு வரும் முடிவு ,கண நேரத்தில் உருவானது.அவராலும் தவிர்க்க முடியாத முடிவு,யாராலும் தடுக்க இயலாத விதி.

    ReplyDelete
  10. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி goma

    ReplyDelete