Tuesday, January 4, 2011

வாய் விட்டு சிரிங்க..

1)அந்த நீதிபதி அப்பவும் அரசாங்கத்தை எதிர்த்து தீர்ப்பு வழங்க மாட்டார்
ஏன்
அரசாங்கம் அவருக்காக ஹவுசிங் போர்ட் ஃப்ளாட் அல்லாட் பண்ணியிருக்கே

2)கள்ள நோட்டை அடிச்ச நீ எப்படி மாட்டிண்டே
நோட்டுல ரிசர்வ் பேங் கவர்னர் கையெழுத்து போட வேண்டிய இடத்திலே 2ஜி ஸ்பெக்ட்ரம் ன்னு போட்டுட்டேன்

3)தலைவர் போற இடத்துக்கு எல்லாம் ஒரு கட்டு பேப்பர்களை எடுத்துட்டுப் போறாரே
அது அவரது சொத்து கணக்காம்

4)அவன் பகுத்தறிவுவாதின்னு சொன்ன..இவ்வளவு நாள்..பேய், பிசாசு நம்பாதவன் இப்பவெல்லாம் நம்பறானே
அவனுக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு

5)அந்த சுவாமிஜிக் கிட்ட போறவங்க எல்லாம் 'மெய்' மறந்துடுவாங்களாம்..
உடம்பை 'மெய்'யின்னு சொல்ற அளவு உனக்குத் தமிழ்ப் பற்றா

6)போன மாசம் இந்திய அரசியல்ல ஒரு புதுமை நடந்திருக்கே பார்த்தியா
ஆமாம்..புது ஊழல் எதுவும் சொல்லப்படலை

7)கவர்ச்சி நடிகை வீணா நம்ப கட்சியில சேர்ந்ததற்கு சந்தோஷப்பட்ட தலைவர் இப்ப ஏன் வருத்தப் படறார்
அவங்களை மேக்கப் இல்லாம இன்னிக்குத்தான் பார்த்தாராம்

22 comments:

  1. ஜோக்ஸில் 4 சூப்பர் 2 சுமார்

    ReplyDelete
  2. குமுதத்துக்கு அனுப்புங்க

    ReplyDelete
  3. நீங்களே உங்களுக்கு ஓட்டு போடலைன்னா எப்படி? ஹா ஹாஹா

    ReplyDelete
  4. காலத்துக்கு தகுந்த ஜோக்ஸ்....

    ReplyDelete
  5. சிபிஎஸ் சொன்னா சரியா இருக்கும்... நீங்க ஜோக்ஸை ஒரு போஸ்ட்கார்டில் எழுதி குமுதத்துக்கு அனுப்பி வையுங்க...

    ReplyDelete
  6. ரொம்ப நாளைக்கு அப்புறம் நகைச்சுவை பதிவு..

    ReplyDelete
  7. //வருகைக்கும் கருத்திற்கும் நன்றி செந்தில் குமார்.
    என் வலைப்பூவிலிருந்து ஏனோ ஓட்டு போட முடையவில்லை.//

    ReplyDelete
  8. //கே said...
    ஹஹாஹ்//

    நன்றி எல் கே

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Prabhakaran

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்

    ReplyDelete
  11. சிரிக்க வச்சீங்க.நன்றி.விருதுகளுக்கு வாழ்த்துகள் ஐயா !

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி மாதேவி

    ReplyDelete
  13. நன்றி கே.ஆர்.பி.செந்தில்

    ReplyDelete
  14. //சிநேகிதன் அக்பர் said...
    அசத்தல் ஜோக்குகள்//

    நன்றி அக்பர்

    ReplyDelete
  15. //ஹேமா said...
    சிரிக்க வச்சீங்க.நன்றி.விருதுகளுக்கு வாழ்த்துகள் ஐயா !//

    நன்றி ஹேமா

    ReplyDelete