Sunday, February 6, 2011

தேர்தலில் நிற்கப் போகிறேன் நான்....



தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் வருவது அனைவரும் அறிந்ததே.அத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் நான் நிற்கலாமா? என்று யோசனை.

முதலில்..நான் நீண்ட நாள் தி.மு.க., ஆதரவாளன் என்ற முறையில் தி.மு.க., விடம் தொகுதியைக் கேட்க எண்ணம்.

அதற்கு நான் விண்ணப்பித்ததும்..கலைஞரிடம் நேரிடை பேட்டி இருக்கும்.

அப்போது..மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற என் நோக்கை..கலைஞர் கண்டிப்பாக பாராட்டுவார் என்றே தோன்றுகிறது.பின்னர் என்னால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று கேட்பார்..ஐந்து கோடிகள் வரை செலவு செய்ய முடியும் என்பேன்.

அப்படியெனில்..என்னால் எளிதாக வென்றிட முடியும் என அத்தொகுதி எனக்கே ஒதுக்கப்படும் என்றே தோன்றுகிறது.

ஆமாம்..ஐந்து கோடிக்கு எங்கே போவேன்..என்கிறீர்களா..

ஏதோ ஒரு புண்ணியவான் என் மின்னஞ்சல் ஐ.டி., 10லட்சம் பவுண்ட் வென்றிருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளாரே.அந்த மின்னஞ்சல் கீழே..

அந்தப் பணம் கைக்கு வந்ததும்..விரிவாக முடிவெடுப்பேன்..


Reply
WILLIAM E PEARSALL

show details 11:04 AM (20 hours ago)



fromWILLIAM E PEARSALL

to

dateSat, Feb 5, 2011 at 11:04 AM

subjectYour Mail Id has won £1,000,000.00 in The British Tobacco Promo for claims send your:

signed-bysbcglobal.net



hide details 11:04 AM (20 hours ago)







Name....

Sex......

Home Address.........................



18 comments:

  1. உங்களுக்கு வாழ்த்துக்கள் சீக்கிரம் அந்தப்பணம் வந்த உடனே சுயேட்சையா நில்லுங்க ஹி ஹி

    ReplyDelete
  2. இதுக்கே வா.!!! அப்ப நான் அமெரிக்க ஜனாதிபதிக்கு நிக்க போறன்..

    ReplyDelete
  3. அந்த பணம் வந்து சேரும்போது உங்க டெப்பாசிட்டே போயிருக்கும்.

    ReplyDelete
  4. எனக்கும் 13 கோடி கிடைக்க இருக்கிறது...

    ReplyDelete
  5. சுப்பிரமணியன் சாமிக்கு போட்டாலும் போடுவேனே தவிர சத்தியமா நான் உமக்கு ஓட்டு போட மாட்டேன்.....

    ReplyDelete
  6. சார் இது மாதிரி எல்லோரும் கிளம்பிட்டா லட்சம் தொகுதி இருந்த கூட காணாதே! :)

    ReplyDelete
  7. பணத்தை எடுத்து செலவழிக்கத் தெரில உங்களுக்கு....உங்களுக்கும் அரசியல் ஆசை !

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி விக்கிஉலகம்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் தம்பிகூர்மதியன்

    ReplyDelete
  10. //கே. ஆர்.விஜயன் said...
    அந்த பணம் வந்து சேரும்போது உங்க டெப்பாசிட்டே போயிருக்கும்...//

    :)))

    ReplyDelete
  11. //goma said...
    எனக்கும் 13 கோடி கிடைக்க இருக்கிறது...

    //

    அப்போ கோமா...மயிலை தொகுதிக்கு விண்ணப்பிக்கவும்

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  13. //MANO நாஞ்சில் மனோ said...
    சுப்பிரமணியன் சாமிக்கு போட்டாலும் போடுவேனே தவிர சத்தியமா நான் உமக்கு ஓட்டு போட மாட்டேன்.....//

    அதற்கான காரணத்தை நான்..நான் மட்டுமே அறிவேன்

    ReplyDelete
  14. //சிநேகிதன் அக்பர் said...
    சார் இது மாதிரி எல்லோரும் கிளம்பிட்டா லட்சம் தொகுதி இருந்த கூட காணாதே! :)..

    தொகுதிகளை உண்டாக்கிடுவோம் அக்பர்:))

    ReplyDelete
  15. //ஹேமா said...
    பணத்தை எடுத்து செலவழிக்கத் தெரில உங்களுக்கு....உங்களுக்கும் அரசியல் ஆசை !//

    நல்லவன் என்று இப்போது என்னை நான்கு பேர் சொல்கிறார்களே! அதை மாற்ற வேண்டாமா

    ReplyDelete
  16. //Philosophy Prabhakaran said...
    விளங்கிடும்...//

    :)))

    ReplyDelete