Tuesday, September 6, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)




பாபர் போஸ்துமஸ் கைதா..ஏன்ன சொல்ற
ஆமாம்..அவர் மன்னரா இருந்தப்போ பாபர் மசூதி இருக்கிற நிலத்தை அபகரிச்சதா புகார் வந்துள்ளதாம்

2) பேட்டா கடையில்- இந்த செருப்பு 99,999 ரூபா99 பைசான்னு போட்டிருக்கே
  கடைக்காரர்-ஆமாங்க..தனி விமானத்திலே மும்பையிலிருந்து வந்த செருப்பு

3)தலைவர் இப்ப எங்கே இருக்கார்..
 கடைசி நிலவரப்படி சேலத்தில...நாளைக்கு பாளையம்கோட்டைப் போனாலும் போவார்

4)என் கணவர் பிரதமர் போல இருக்கார்
  என்ன சொல்ற
  எது சொன்னாலும்..எது நடந்தாலும் மௌனமாகவே இருக்கார்

5)மனைவி-ப்ளீஸ் சிட் டௌன்..ப்ளீஸ் .சிட் டௌன்..அப்படி சொல்லிக்கிட்டே இருக்கீங்களே ஏன்?
 கணவன்- நாளைக்கு மாதிரி பாராளுமன்றத்தை அலுவலகத்தில் நடத்த இருக்கிறோம்..அதில் நான் சபாநாயகர்..

6)ஆசிரியர்- பாடம் நடத்தறப்போ..உங்க பையன் அப்பப்ப..வெளியே போயிடறான்
 தாய்- அவன் அப்பா மாதிரி
 ஆசிரியர்- என்ன சொல்றீங்க..அவன் அப்பா யார்
 தாய்-எதிர்க் கட்சித் தலைவர்

7)ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ., க்களை எல்லாம்..அசையாச் சொத்துக் கணக்கில் காட்டியிருக்காங்களாம்

8)எதிர் கட்சித் தலைவர்-அண்ணா சமாதியில் மரியாதை செலுத்த வந்த நம்மை ஆளும் கட்சியினர்..அவமதித்துள்ளனர்.அண்ணா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் சமாதியை அவர்களை தொட விட்டு இருப்பாரா?

9 comments:

  1. சிரித்தேன்
    இரசித்தேன்

    நல்ல நகைச்சுவைத் தொகுப்பு.

    ReplyDelete
  2. தலைவர் இப்ப எங்கே இருக்கார்..
    கடைசி நிலவரப்படி சேலத்தில...நாளைக்கு பாளையம்கோட்டைப் போனாலும் போவார்//

    ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியல....

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    நண்டு @நொரண்டு

    ReplyDelete
  5. மிகவும் நல்ல நகைச்சுவைத் தொகுப்பு.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete