Wednesday, February 29, 2012

தங்கக்குடைகள்







மெலிதான இருள்

மெழுகுவர்த்தியின் சன்ன ஒளி

ஹேப்பி பர்த் டே பாடல்

அவனுக்கு பிறந்த நாள்

மெழுகுவர்த்திக்கு இறந்த நாள்


2)கொட்டும் மழையில்

தொப்பலாக நனைகிறாள்

இரு தங்கக் குடைகள்

காதில் நடனமாட..


3)பூக்களைப் பறிக்காதீர்

பூங்காவில் வாசகம்

பெருமூச்சு விடுகிறாள்

பேரிளம் பெண்


4)குளத்தில்

முழு நிலா

குளிரில் நடுங்குகிறது

4 comments:

  1. சூபரு.......


    "நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com"

    ReplyDelete
  2. இரண்டாவதும் நான்காவதும் அருமை.பிடிச்சிருக்கு ஐயா.தொடருங்கள் !

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ஹேமா

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி kannan

    ReplyDelete