Friday, September 14, 2012

டீசல் விலை உயர்வு...தலைவர்கள் கருத்து...(நகைச்சுவை)




மன்மோகன் சிங்- இது குறித்து நான் மௌனமாய் இருப்பதற்குக் காரணம்..என் மௌனம் ஆயிரம் பதிலுக்கு சமம் என்பதால் தான்.

சிதம்பரம் - மக்கள் ஐஸ்கிரீம் விலை உயர்ந்தால் மௌனமாய் உள்ளனர்.பிஸ்ஸா விலை உயர்ந்தால் மௌனமாய் ஏற்றுக் கொள்கின்றனர்.டீசல் உயர்ந்தால் ஏன் கத்துகிறார்கள்? என்றே புரியவில்லை.

கலைஞர்- தி.மு.க., இந்த உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறது.ஆனால் இது விஷயமாக மைய அரசைக் கண்டிக்காது

ஜெயலலிதா- டீசல் விலை உயர்வை நான் முதலிலேயே கண்டித்தேன்.கருணாநிதி இப்போது கண்டிப்பது போல கபட நாடகம் ஆடுகிறார்.

ராமதாஸ்- இந்த விலை உயர்வுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்.அடுத்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணியின்றி பா.ம.க., ஆட்சியைப் பிடிக்கும்

விஜய்காந்த்- ஜெ வும் கலைஞரும் தமிழகத்தைக் கெடுத்ததோடு இல்லாமல்..இப்போது பாரதத்தையே கெடுக்க சூழ்ச்சி செய்கிறார்கள்.இதை நான் முறியெடுப்பேன்.திமுக, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தேமுதிக புறக்கணிக்கும்

அத்வானி - இந்த விலை உயர்வால் பாராளுமன்றத்திற்கு முன்னதாக தேர்தல் வர வாய்ப்பிருக்கு.

சுப்ரமணியசுவாமி- இந்த உயர்வுக்கு காரணம் சோனியாவும் சிதம்பரமும் தான்.அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.கூடிய விரைவில் இவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்.

வைகோ- கன்யாகுமரியிலிருந்து..தூத்துக்குடி வரை இந்த உயர்வைக் கண்டித்து மதிமுக போராட்டம் நடத்தும்.

கம்யூனிஸ்ட்கள்- இந்த உயர்வை கண்டிக்கிறோம்.முதல்வரை மரியாதை நிமித்தம் சந்திக்க உள்ளோம்.


8 comments:

  1. என்ன சொல்வது இதை..யாராவது ஒருத்தர் நல்லவங்களா இருந்து இத சொன்னா ஒத்துக்கலாம்....எல்லாமே இப்படித்தான்ன.... நிஜமாகவே நகைசுவையாக தான் இருக்கிறது....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. ஹா... ஹா... இப்படித்தான் சொல்வார்கள்...

    (மன்மோகன் சிங்..., சுப்ரமணியசுவாமி..., கம்யூனிஸ்ட்கள்...)

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  4. ஹி ஹி ஹி.. ராமதாஸ் & சுப்ரமணியசுவாமி செம செம! :D

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி வரலாற்று சுவடுகள்

    ReplyDelete
  6. super comments and welcome the true lines.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி n.k.senthil nathan mks

    ReplyDelete