Tuesday, November 13, 2012

துப்பாக்கி - எதிர்பார்ப்புகளே ஏமாற்றம் தருகின்றன....




 இளையதளபதி விஜய்..மற்றும் முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வந்துள்ள படம் துப்பாக்கி.

இப்படம் ஆரம்பித்த நாள் முதல்..வெளியாகும் நாள் வரை சந்தித்த சோதனைகள் எவ்வளவு?

படத்தலைப்பிற்காக இப்படம் பட்ட பாடு எவ்வளவு?

சென்சாரில் கூட ரீரிகார்டிங் சரியாக அமையாத அவசரத்தில்...தவணை கேட்டதாக வேறு செய்திகள் வந்தன.

படவெளியீடு தேதி வேறு..தள்ளிப் போனது.வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு இதனால் நஷ்டம் என்று வேறு செய்தி.

இவ்வளவையும் மீறி..இந்தாண்டு பெரும் பொருள் செலவில் வெளியான..சகுனி,மாற்றான்,தாண்டவம்,பில்லா 2, ஆகிய படங்களும்
வசூலில் வெற்றி என்றாலும்..தோல்வி படங்களாக அமைந்தன.துப்பாக்கியும் அப்படித்தான் ஆகப்போகிறது என ரசிகர்களிடையே வதந்தி வேறு.

எல்லாவற்றையும் தாண்டி விஜய் வெற்றி பெற்றுள்ளார்..என வரும் ரிபோர்ட்டுகள் தெரிவிக்கின்றன.

இதற்குக் காரணம்..மற்ற படங்கள் எதிர்ப்பார்ப்பு இருந்தது..அதனால் ஏமாற்றம் ஏற்பட்டது.

அந்த ஏமாற்றம்..இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பை குறைத்தது.

அதுவே..இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையானது எனலாம்.

வாழ்த்துகள் விஜய்.., முருகதாஸ்.

(டிஸ்கி- எச்சரிக்கை - படம் வியாழன் அன்று பார்க்கிறேன்...அதற்கு பின் என் விமரிசனம் )

6 comments:

  1. படம் பார்க்கணும் நானும்..உங்க இடுகை எதுவோ வாசிக்க சொன்னீர்கள் என் பதிவில் வந்து அது எங்கே இருக்கிறதுராதக்ருஷ்ணன் சார் திரும்ப சுட்டி அளிக்க இயலுமா நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ஷைலஜா..
    இந்த இடுகையை வாசிக்கவும்.அப்பா பற்றி..

    http://www.tvrk.blogspot.com/2012/07/blog-post_08.html

    ReplyDelete
  3. படம் உண்மையிலேயே நன்று... நன்றி...

    ReplyDelete