Showing posts with label இந்தியா - காங்கிரஸ் -அரசியல். Show all posts
Showing posts with label இந்தியா - காங்கிரஸ் -அரசியல். Show all posts

Tuesday, March 13, 2012

காங்கிரஸ் கட்சி ஏன் இப்படி ஆயிற்று...




காங்கிரஸ்..பாரம்பரியம் மிக்க கட்சி.  தன்னலமற்ற..நாட்டு நலன் ஒன்றே குறிக்கோளாக இருந்த கட்சி..காரணம்..அதன் தலைவர்கள்..

அந்த நாள் தலைவர்கள்...எண்ணமெல்லாம்..நாடு..நாடு..நாடு தான்..

ஆகவேதான் ஒரு நூற்றாண்டு கடந்தும் ..அக் கட்சி நாட்டில் நிலைத்து இருக்கிறது..

ஆனால் சமீப காலமாக...என்னவாயிற்று கட்சிக்கு...அதன் தலைவரே (!!) சமிபத்திய உத்தர பிரதேச தேர்தல் முடிவு குறித்து வெளியிட்ட செய்தியில்..'கட்சியில் பல தலைவர்கள் உண்டாகிவிட்டனர்' என்றுள்ளார்., அவர் சொல்லியுள்ளது உண்மை..

பல தலைவர்கள் உண்டாகிவிட்டனர்..இல்லை..இல்லை..பலர் தன்னை தலைவர்களாக எண்ணிவிட்டனர்..அவர்களிடம் தேசப்பற்று காணப்படவில்லை..சுயநலம்தான் காணப்படுகிறது.

ஒரு மத்திய அமைச்சர்...தன் மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே..மக்கள் ஆதரவு பெற..சிறுபான்மையினர் ஒதுக்கீடு குறித்து...தேர்தல் கூட்டத்தில்..விதிமுறைகளை மீறி பேசுகிறார்.இதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டினால்..அவர்கள் அதிகாரம் பற்றியும்...அதனால் தனக்கு ஏற்படும் எந்த  இடரையும் எதிர் கொள்வதாகக் கூறிகிறார்..பின்...பின்வாங்குகிறார்.

அவர் விட்ட இடத்தை..அடுத்து மத்திய அமைச்சர் தொடர்கிறார்...

அக்கட்சியின் தலைவரோ...அவரது வருமான வரி கணக்கை கேட்டால்..அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

இப்படி..பொய், பித்தலாட்டம், சுயநலம், மேலிடத்தின் ஆதரவை பெறலாம் என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து..இவர்கள் பேசுவதை மக்கள் ஆதரிப்பார்கள் என எண்ணுகிறார்கள்.ஆனால் மக்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை.

அடுத்து....

உலக மக்கள் தொகையில்..கிட்டத்தட்ட 1/6 பங்கு மக்கள் தொகையுள்ள நாட்டில்..பிரதம பதவி வகிப்பவர்...தன் நாட்டில் என்ன நடந்தாலும்...மௌனியாய் இருக்கிறார்.தன் நாட்டு மக்கள் நலனை விட..அடுத்த சிறு நாடுகள் பற்றி கவலைப் படுகிறார்..அவர்களுக்கு பயப்படுகிறார்.

1962 சீன யுத்தமும், 1965 பாகிஸ்தானுடன் யுத்தமும், பங்களாதேசை மீட்டு அந்த மக்களிடம் ஒப்படைத்த தீரமும் கொண்ட தலைவர்கள் இருந்த கட்சி..இன்று தன் நாட்டு வம்சாவளி மக்களுக்கு ஆதரவாக பேசக்கூட இன்று பயப்படுகிறது...

இதே போக்கு நீடிக்குமேயாயின்...நாட்டில் ஒருமைப்பாடும் சீர்குலையும்...நாட்டு எதிர்காலம் கேள்விக் குறியாகும்...

இழந்த வீரத்தையும்..தீரத்தையும் ..மக்கள் நலப் போக்கையும் காங்கிரஸ் மீண்டும் பெற வேண்டும்...அது நடக்குமா?

பொறுத்திருப்பது தான் இந்தியன் குணமாயிற்றே! பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுமை கடலிலும் பெரிதுதான்...அந்த கடல் அதை விழுங்காத வரை...