Sunday, August 10, 2008

கமல் அவசர கதை ஆலோசனை

தனக்குப் பிடித்த இயக்குனர்கள்,எழுத்தாளர்களை அழைத்து கமல் அடுத்த பட கதை ஆலோசனை செய்தார். அதன் விவரம்.

கமல்- ரவிகுமார்,மௌலி,சுந்தர் சி.,கிரெசி மோகன்,மதன்,சுஜாதா..sorry., அவர் மறைஞ்சுட்டார்ங்கிறதை மறந்துட்டேன்.உங்களை எல்லாம் ஏன்
வரச்சொன்னேன்னா..என்னோட மர்மயோகி வர 2 வருஷம் ஆகும்.குறுகிய காலத்தயாரிப்பான குசேலன் சரியா ஓடல்லை.,அதனால்..
உடனே என் படம் ஒன்னு வரணும்.உங்ககிட்ட யாரிடம் எனக்கான கதை இருக்கு..

(எல்லோரும் ஒன்றாக கையைத் தூக்க..)

கமல்- ஒவ்வொருத்தரா..முதல்லே ரவிகுமார்..உங்க கதையைச் சொல்லுங்க

ரவிகுமார்-ஜக்குபாய் ன்னு ஒரு கதை இருக்கு

கமல்-அதுதான் ரஜினி நடிக்கறதா..இருந்து..இப்ப..சரத் நடிக்கிறாரே

ரவி- இது வேற ஜக்குபாய்..அது வேற ஜக்குபாய்..இதுல எதிர்காலத்தைக் காட்டக்கூடிய ஒரு கருவி..வில்லன்கள் கிட்ட கிடைக்கிறது.
அதைத் தெரிஞ்சுக்கிட்டா..பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டுடுமே என்று கதாநாயகன்..அதைக் கடத்தி அழிக்கப் பார்க்கிறான்.
அவனுடன் சேர்ந்து..அசினும் ஓடிக்கிட்டே இருக்காங்க..நம்ம வையாபுரி,சார்லி. இவங்கைள் காமடியனா போட்டுடுவோம்.

(சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)

கமல்- உங்களோட சேர்ந்தா..படம் முடிய 2 வருஷம் ஆகுமே..

ரவி- குறுகிய காலத் தயாரிப்புன்னு சொல்றீங்க..அதனால 730நாள்ல முடிச்சுடலாம்.

கமல்-கதைல..தசாவதார சாயல் இருக்கே

ரவி-திரைக்கதையிலே எல்லாம் மாறிடும்..மொத்தம் 12 கேரக்டர்ஸ்..எல்லாத்தையும் நீங்களேக் கூடச்செய்யாலாம்.நான் மட்டும்
ஒரு பாடல்ல வந்து பூமிக்கும்..வானத்துக்கும் குதிச்சுடறேன்.

கமல்- உங்க கிட்ட அப்புறம் வர்றேன்..கிரேசி..உங்ககிட்ட ஏதாவது...


கிரேசி-இருக்கே...இருக்கே...முஹம்மது ஜான் சுந்தர பாண்டியன்னு ஒரு கதை.நாலு ரோலும் நீங்க பண்ணாலாம்..அதுலே சுந்தர் ரோல்
ஒரு சமயல்காரான்...ஐ..மீன்...

கமல்-யூ மீன்..என்னன்னு புரிஞ்சுப் போச்சு.. மௌலி நீங்க..

மௌலி- கிரேசி..சொன்ன கதையையே எடுத்திடலாம்...வேணும்னா..டைடில..ஹரி சந்திரமதின்னு மாத்திடலாம்.(கமல் மௌனமாயிருக்க)
இல்லேன்னா..சங்கரதாஸ் uvve சாமி ன்னு வைச்சுப்போம்

கமல்-அது என்ன நடுவே uvve

மௌலி-அது சங்கரதாஸ் உவ்வே வாந்தி சத்தம் சுவாமி உங்க பேரு...பிண்ணனி இசையே வேண்டாம்..திருப்பாவையை ஓட விட்டுடலாம்.

கமல்- சுந்தர் உங்க கிட்ட

சுந்தர்-நான் இப்ப நடிப்பிலே பிஸி..உங்க கதை அன்பே சிவம் மாதிரி எதாவது இருந்தா..நான் டைரக்ட் பண்ணிடறேன்..

(ரவி முணுமுணுக்கிறார்-நோவாம நோம்பு கும்பிடப் பார்க்கிறார்)

கமல்-மதன் நீங்க

மதன்-டூ..டூ..டூ..டூன்னு(two to two to) ன்னு படப்பேரு..ஹீரோ...ஒரு விபத்திலே..மூக்கு கோணிடுது..அப்பறம்..பீஹார்ல வெள்ளத்திலே மாட்டிக்கிறான்..இப்படி
போகுது கதை...

கமல்-அன்பே சிவம் மாதிரி தெரியுதே

சுந்தர்-அப்போ..நானே..டைரக்ட் பண்ணிடறேன்

மதன்-அதனால் என்ன..படப்பேரை 'வாழ்க வளர்க'ன்னு வைச்சுப்போம்

(ஃபோன் அடிக்க..கமல் பேசுகிறார்)

கமல்-நாம கதை டிஸ்கஸ் பண்றது தெரிஞ்சு..தயாரிப்பாளர்கள்..ஏ.எம்.ரத்னம்,ஆஸ்கர் ரவி,செவென்த் சேனல் மாணிக்கம் எள்ளாம் எங்கேயோ ஓடிட்டார்களாம்.
முதல்லே அவங்களை கண்டுபிடிப்போம் வாங்க..

(அனைவரும் விரைகின்றனர்)

13 comments:

  1. \\கமல்-நாம கதை டிஸ்கஸ் பண்றது தெரிஞ்சு..தயாரிப்பாளர்கள்..ஏ.எம்.ரத்னம்,ஆஸ்கர் ரவி,செவென்த் சேனல் மாணிக்கம் எள்ளாம் எங்கேயோ ஓடிட்டார்களாம்.
    முதல்லே அவங்களை கண்டுபிடிப்போம் வாங்க..
    \\
    Ha hA ha Ha ha ha ha ha

    ReplyDelete
  2. ஹாஹா... போட்டுத் தாக்குங்க...:-)))

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி முரளி கண்ணன்

    ReplyDelete
  4. //ஹாஹா... போட்டுத் தாக்குங்க...:-)))//

    இப்படியே உசுப்பேத்திக்கிட்டு இருங்க

    ReplyDelete
  5. //சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)//

    கலக்கல் !

    ReplyDelete
  6. //சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)

    கலக்கல் !//

    கோவிசார்..பாராட்டுதலுக்கு நன்றி

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. ஆஹா நீங்களுமா??
    ம்ம்ம் சூப்பராயிருக்கு.
    கலக்குங்க.
    இன்னும் எதிர்பார்க்கும்
    சுபாஷ்

    ReplyDelete
  9. அருமை..அருமை..

    ReplyDelete