Tuesday, August 26, 2008

ஆனந்தம்

மஞ்சள் நீராட்டு
குங்குமப்பொட்டு
கழுத்தில்மாலை
ஆட்டிற்க்கோ ஆனந்தம்
விவரம் புரியாததால்
நேர்த்திக்கடன் ஆண்டவனுக்கு
நிறைவேர்றப்போவதால்
பக்தனுக்கோ ஆனந்தம்
தான் படைத்த உயிர்களில்
தன் பெயரைச்சொல்லி
ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்
கண்டிப்பாக
ஆனந்தக்கண்ணீர் அல்ல

6 comments:

  1. //இறைவனுக்கோ கண்ணீர்
    கண்டிப்பாக
    ஆனந்தக்கண்ணீர் அல்ல//

    :(
    சரியாகத்தான் சொல்கிறீர்கள் !

    கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்கிறார்களே !

    ReplyDelete
  2. சொல்வது,சொன்னது யார் ...நாம்தானே!!
    தன் ஊண் பெருக்கற்கு தான் பிறிதூண் உண்பான் எங்கனம் ஆளும் அருள்..
    என்று கூடத்தான் பொய்யாமொழி புலவர் கூறியுள்ளார்.
    வருகைக்கு நன்றி கோவி சார்..

    ReplyDelete
  3. இரண்டு நாளா காணுமே..வெளியூர் பொயிட்டீங்களோன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்...
    நன்றி

    ReplyDelete
  4. கருத்து நல்லாருக்கு.! ஆனா கவுஜதான்...

    ReplyDelete
  5. //கருத்து நல்லாருக்கு.! ஆனா கவுஜதான்...//

    ருகைக்கு நன்றி தாமிரா

    ReplyDelete