Tuesday, April 14, 2009

ஐ.டி. ஊழியர்கள் இனி டீ..காஃபி குடிக்கக்கூடாது

சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக...ஐ.டி., நிறுவனங்கள் பல சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இது தொடர்பாக ஒரு பெரிய நிறுவனம்...தனது ஊழியர்களுக்கு ஒரு இ மெயில் அனுப்பியுள்ளதாம்.அதில்...அந்நிறுவனம் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளையும்...அதனால் செலவுகளை குறைக்க எடுத்துள்ள சிக்கன நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளதாம்.அதன்படி...

மே மாதம் ஒன்றாம் தேதி முதல்...ஊழியர்களுக்கு பணியின் போது வழங்கி வரும் டீ, காஃபி போன்றவை நிறுத்தப்படுமாம்.

வீட்டில் இருந்து அலுவலக பணியில் ஈடுபடுவோர்க்கு..இன்டெர்னெட் கட்டணத்தை இதுவரை நிறுவனம் வழங்கி வந்ததாம்.அதுவும் இனி ரத்து செய்யப்படுமாம்.அக்கட்டணத்தை இனி ஊழியரே செலுத்த வேண்டுமாம்...

தவிர...இனி அவர்கள் பெற்றுவரும் பல் வேறு சலுகைகளும் ..பல கட்டங்களில் ...படிப்படியாக குறைக்கப்படுமாம்.

இப்படி தகவல்களை அனுப்பியுள்ளது...சாதாரண நிறுவனம் இல்லை...

மிகப்பெரும்..ஐபிஎம் நிறுவனமே..

அட தேவுடா......

34 comments:

  1. //தவிர...இனி அவர்கள் பெற்றுவரும் பல் வேறு சலுகைகளும் ..பல கட்டங்களில் ...படிப்படியாக குறைக்கப்படுமாம்.
    //

    எல்லோரும் கோவணம் அணிந்து வந்தால் அறையில் குளிரூட்டத்தைக் கூட நிறுத்துவிடலாம் என்று எவரும் பரிந்துரை செய்யாதிருந்தால் சரி.

    சி.எஸ்.ஜெ ஒரு பாட்டு பாடுவார்.

    கொடுத்தவனே பரித்துக் கொண்டாண்டி...
    :)

    ReplyDelete
  2. ரெசஷன் நேரத்தில் எல்லோருக்குமே கெடுபிடி இருக்கத்தான் செய்யும்.... என்ன செய்யுறது?

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    கோவி
    தமிழினி
    பிரேம்குமார்

    ReplyDelete
  4. உன்மை இப்படியா அப்பட்டமா ஒத்துகிறது ஹா ஹ அருமை தலைவா ;)

    ReplyDelete
  5. வேலையை விட்டுத் தூக்காமல் இருந்தால் பெரிய விசயமாக்கும்.

    எல்லோரும் வயித்துல ஈரத்துணியைக் கட்டிக்கினு கீறாங்க.

    எப்போ என்ன நடக்குமோ.

    தினமும் அலுவலகம் செல்வதையே ஒரு சவாலாகச் செய்கிறார்கள்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி
    Suresh
    தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  7. சார்,

    இன்னைக்கு financila times பாருங்க

    //Wipro had offered a monthly salary of Rs 24,000 to the 2007-08 campus recruits. These candidates will be put on a twomonth training and during this period they will be paid a stipend of Rs 15,000 a month. However, candidates who will not find projects to be deployed on soon after the training will be put on an extended training period for a monthly stipend of Rs 6,000. //

    என்ன கொடுமை சார் இது.

    ஒத்துக் கொண்ட சம்பளத்தில் நாலில் ஒரு பங்கு?

    ReplyDelete
  8. மே மாதம் ஒன்றாம் தேதி முதல்...ஊழியர்களுக்கு பணியின் போது வழங்கி வரும் டீ, காஃபி போன்றவை நிறுத்தப்படுமாம்.


    தேதி மே 1 தொழிலாளர்கள் தினம்
    சலுகைகள் பறிக்கபடுகிற தினமா மாறுதா

    ReplyDelete
  9. உண்மையை சொல்ல போனால், இந்த நிறுவனுங்களுக்கேல்லாம் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

    பொருளாதார மந்தநிலையை ஒரு சாக்காக வைத்து அடிமைகளின் சலுகைகளை பறிக்கிறார்கள்.

    ReplyDelete
  10. இதில் தவறொன்றும் இல்லை, நாலு பேரின் சம்பளத்தை குறைத்து இன்னும் ஒருவர் வேலையை காப்பாற்றினால் கூட சரிதான்.

    எல்லாமே தேவைக்கேற்றார்போலத்தானே.

    உங்கள் நாடக கம்பெனியாக நினைத்து பாருங்கள் புரியும்.

    ReplyDelete
  11. ஒரு ஏற்றம் இருந்தால் அதற்க்கு ஒரு இஅறக்கம் நிச்சயம், ஒரு இறக்கம் என்றால் ஒரு ஏற்றம் நிச்சயம் இது நாம் பயன் படுத்தும் பொருளாதார கொள்கையில் அடிப்படை தான்...

    சீக்கிரம் இன்ந்த நிலமை மாறி மீண்டும் ஐடி துறையினர் முறையான சம்பளம் பெற்று மீண்டும் குறந்திருக்கும் விலைவாசிகளை ஏற்றிவிடுவார்கள்.....

    ReplyDelete
  12. Not only in IBM......everywhere same cross cutting..;(

    ReplyDelete
  13. //புன்னகை said...
    தேதி மே 1 தொழிலாளர்கள் தினம்
    சலுகைகள் பறிக்கபடுகிற தினமா மாறுதா//

    :-((((

    ReplyDelete
  14. /// வடகரை வேலன் said...
    சார்,

    இன்னைக்கு financila times பாருங்க

    //Wipro had offered a monthly salary of Rs 24,000 to the 2007-08 campus recruits. These candidates will be put on a twomonth training and during this period they will be paid a stipend of Rs 15,000 a month. However, candidates who will not find projects to be deployed on soon after the training will be put on an extended training period for a monthly stipend of Rs 6,000. //

    என்ன கொடுமை சார் இது.

    ஒத்துக் கொண்ட சம்பளத்தில் நாலில் ஒரு பங்கு?///

    இதைவிட மோசமான விஷயம்..2007-08 ல் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுத்துவிட்டு...இன்னும் அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இருக்கின்றன சில நிறுவனங்கள்

    ReplyDelete
  15. ////Joe said...
    உண்மையை சொல்ல போனால், இந்த நிறுவனுங்களுக்கேல்லாம் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

    பொருளாதார மந்தநிலையை ஒரு சாக்காக வைத்து அடிமைகளின் சலுகைகளை பறிக்கிறார்கள்.///

    நீங்கள் சொல்வதுதான் உண்மை

    ReplyDelete
  16. ///குடுகுடுப்பை said...
    உங்கள் நாடக கம்பெனியாக நினைத்து பாருங்கள் புரியும்.///

    சாப்பாட்டிற்கு என் நாடகக் குழுவை நம்பி யாரும் இல்லை....ஆனால் சாப்பாட்டிற்கான தொழில் பற்றிதான் பதிவு.

    ReplyDelete
  17. ///அக்னி பார்வை said...
    மீண்டும் குறந்திருக்கும் விலைவாசிகளை ஏற்றிவிடுவார்கள்///

    விலைவாசி குறைந்திருக்கிறதா?

    சிதம்பரத்தின் பணவீக்க புள்ளிவிவரத்தை நம்புபவரா நீங்கள்?

    :-)))))

    ReplyDelete
  18. தல, இனிமேல் குடிநீரை வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும், இனி பஸ், கேப் மெல்லாம் கிடையாது, வீட்டில் ஜாக்கிங் ஆரம்பித்து அலுவலகம் வரை ஓடி வர வேண்டும்... இப்படியான சட்டங்களை நாங்கள் போடுவோம்.

    ReplyDelete
  19. எனக்கு காலையில இட்லி தோசை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கலன்னா உடம்புக்கு ஆகாது:)ஏதோ சுகாதாரக் காவலர் ஆயிட்டீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன்!

    ReplyDelete
  20. ////தலைவர் said...
    தல, இனிமேல் குடிநீரை வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும், இனி பஸ், கேப் மெல்லாம் கிடையாது, வீட்டில் ஜாக்கிங் ஆரம்பித்து அலுவலகம் வரை ஓடி வர வேண்டும்... இப்படியான சட்டங்களை நாங்கள் போடுவோம்.///

    :-))))

    ReplyDelete
  21. ///ராஜ நடராஜன் said...
    எனக்கு காலையில இட்லி தோசை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கலன்னா உடம்புக்கு ஆகாது:)ஏதோ சுகாதாரக் காவலர் ஆயிட்டீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன்!///

    ஆஹா...இட்லி...தோசையும் கூட சாப்பிடக்கூடாதுன்னு சொல்லலாம் இல்லை? நன்றி

    ReplyDelete
  22. ///முரளிகண்ணன் said...
    பாவம்///

    வருகைக்கு நன்றி முரளி

    ReplyDelete
  23. காபி, டீ குடிக்கலேன்னாகூட பரவாயில்லை. பீர் குடிக்கலாமா கூடாதா? அதை சொல்லுங்க.

    ReplyDelete
  24. ///ச்சின்னப் பையன் said...
    காபி, டீ குடிக்கலேன்னாகூட பரவாயில்லை. பீர் குடிக்கலாமா கூடாதா? அதை சொல்லுங்க///


    சத்யா...நல்லா தெம்புல இருக்காப் போல இருக்கு...

    ReplyDelete
  25. ')) said...

    ///குடுகுடுப்பை said...
    உங்கள் நாடக கம்பெனியாக நினைத்து பாருங்கள் புரியும்.///

    சாப்பாட்டிற்கு என் நாடகக் குழுவை நம்பி யாரும் இல்லை....ஆனால் சாப்பாட்டிற்கான தொழில் பற்றிதான் பதிவு.
    //

    ஒரு தொழில் நடத்துபவன் தேவையிருந்தால் தானே ஆள் எடுப்பான்.நான் நாடகக் கம்பெனி பற்றி குறிப்பிட்டது, நடிகர் தேவையில்லை என்றால் தேவையில்லைதானே.

    ReplyDelete
  26. மிகப்பெரிய நிறுவனமான் பெல் லேப்ஸ் இன்றைக்கு இல்லவே இல்லை. காரணம் வியாபாரம் இல்லை , அவர்கள் லே ஆப் செய்யாமல் என்ன செய்ய முடியும்.

    ReplyDelete
  27. //Pasungili said...
    Not only in IBM......everywhere same cross cutting..;(//

    வருகைக்கு நன்றி Pasungili

    ReplyDelete
  28. குடுகுடுப்பை நீங்கள் சொல்வதை எல்லாம் ஒப்புக்கொள்கிறேன்...ஆனாலும் சில பெரிய நிறுவனங்கள் இந்த சந்தர்ப்பத்தை எக்ஸ்ப்லாய்ட் (சாதகமாக) செய்துக் கொள்கிறார்கள் என்பது நூறு சதவிகித உண்மை

    ReplyDelete
  29. வருகைக்கு நன்றி
    மங்களூர் சிவா
    அன்புடன் அருணா

    ReplyDelete
  30. என் மனதில் தோன்றியதை எழுதினால் உங்கள் பதிவு குருசேஷ்திரம் ஆகி விடும்.

    அதனால் விடு ஜூட் :) :) :)

    ReplyDelete
  31. அதனால் என்ன...நீங்கள் தனிப்பதிவு ஒன்று இடுங்கள்...ஆரோக்யமான விவாதம் நன்றுதானே டாக்டர்

    ReplyDelete