Wednesday, July 8, 2009

வாய் விட்டு சிரியுங்க..(ஹோட்டல் ஜோக்ஸ்)

1.அந்த ஹோட்டல் முதலாளி முன்னால ரேஷன் கடையில இருந்தார்னு எப்படி சொல்ற
போர்டுல..இன்றைய இருப்பு 20 இட்லி,30 பூரி,15 தோசை..25 வடைன்னு எழுதியிருக்காரே

2.அந்த ஹோட்டல் முதலாளியை ஏன் கைது பண்ணிட்டாங்க
ஆடிக்கழிவுன்னு போட்டாராம்..சாப்பிட்டவங்க எல்லாம் கழிஞ்சுக்கிட்டே இருக்காங்களாம்..

3.அந்த ஹோட்டலுக்குப் போனால் தகாத உறவெல்லாம் ஏற்படுமா? எப்படி?
இட்லிக்கு கிழங்கும்..பூரிக்கு வடகறியும் கொடுப்பாங்க

4. அந்த ஹோட்டல்ல இரண்டு இட்லி சாப்பிட்டா இரண்டு இட்லி இலவசமா தருவாங்களாம்
ஏன் அப்படி
ஸ்டாக் கிளியரன்ஸாம்

5.அந்த ஹோட்டல்ல காசு இல்லாம சாப்பிட்டா அரைச்ச மாவையே அரைக்க சொல்லுவாங்களாம்
ஏன்
அந்த ஹோட்டல் முதலாளி முன்னால மெகா சீரியல் தயாரிப்பாளராம்

6.அந்த டாக்டர் முன்னால ஹோட்டல் வைச்சிருந்தார்னு எப்படி சொல்ற
கிளினிக் வெளியே போர்டுல பெரும் வியாதியஸ்தர்கள் உள்ளே வரக் கூடாதுன்னு போட்டிருக்காரே!

12 comments:

  1. அந்த ஹோட்டல்ல இரண்டு இட்லி சாப்பிட்டா இரண்டு இட்லி இலவசமா தருவாங்களாம்
    ஏன் அப்படி
    ஸ்டாக் கிளியரன்ஸாம்///////


    suuuupppeerrr-))))))))))))

    ReplyDelete
  2. //அந்த ஹோட்டலுக்குப் போனால் தகாத உறவெல்லாம் ஏற்படுமா? எப்படி?
    இட்லிக்கு கிழங்கும்..பூரிக்கு வடகறியும் கொடுப்பாங்க//

    அப்படின்னா? நான் சின்ன பைய்யங்க.. ஒன்னும் புரியல

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி இயற்கை

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    கலையரசன்
    சிவா
    மணிகண்டன்

    ReplyDelete
  5. பதிவில ஹோட்டல் வாசனை தூக்கலா இருக்கு..

    ஸ்டாக் கிளியரன்ஸ் நல்லாருக்கு.. ;-))

    ReplyDelete
  6. SuuuuuuuuuuuuuuppppppppppRRRRRRRRRRRR

    ReplyDelete
  7. எல்லாமே நகைச்"சுவை"யா இருக்கு.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி
    நாஞ்சில் நாதம்
    goma
    விக்னேஷ்வரி

    ReplyDelete