Thursday, September 24, 2009

நாங்களும் எழுதுவோம்ல ...

சந்நியாசிகளின்
சரணாலயம்
காவல் நிலையம் !!!!

வேதம் ஓதும் வேதியர்
ஹோமம் வளர்க்கின்றனர்
நற்குணங்களை அதில் இட.,

பிராணிவதைத் தடுப்பு
தலைவனாய்
கசாப்பு காதர்.

சாமியாரைச் சுற்றி
தாய்க்குலங்கள்
குழந்தைப்பேறு வேண்டி!!!

தமிழ் செம்மொழி
பெருமைப்படுகிறான்
தமிழன் ஆங்கிலத்தில்.

இயற்கையை போற்றுவோம்
போதனை செய்தனர்
விறகு வெட்டி கள்.

'திரு'வோடு வாழ்கிறான்
திருவோடு ஏந்தியதால்
தமிழ்க்கவி அவன்.

6 comments:

  1. சார்! ஒரு உதவி.தமிழ்மணம் சர்வர் பிரச்சனையா?

    முகப்பில் “வன்னி மக்களுக்கு
    உதவுகிறார் அம்மாபகவான்” என்ற பதிவு ஆரம்பித்து முடிவில்
    “உயிரைக் குடித்த முத்தம்” என்ற பக்கத்தையேகாட்டிக்கொண்டிருக்கிறதே 7 மணி நேரமாக?

    சொல்லுங்களேன்.

    ReplyDelete
  2. நீங்கள் இப்படி இன்றுதான் பார்க்கிறீர்கள் என எண்ணுகிறேன்..பல நேரங்களில் தமிழ்மணத் திரட்டி இப்படி ஆகியது உண்டு

    ReplyDelete
  3. நன்றி சார்.நானும் பார்த்திருக்கிறேன்.
    முகப்பில் இப்படி என் பதிவை ஒரு நாள் நிற்க வைத்து என்னை ஸ்டார் ஆக்கியது ஒரு முறை.

    ஒரு கவிதை கூட எழுதியிருக்கிறேன்.

    படிக்க:பதிவர் எப்படி -நட்சத்திரம் ஆவது (மார்ச்-23)

    http://raviaditya.blogspot.com/2009/03/blog-post_23.html

    ReplyDelete
  4. unmaiya sollunga neenga kavitha ezuthana piravu thaane thamizhmanathula pirassnai.. :)))

    ReplyDelete
  5. படித்திருக்கிறேன் ரவி..ஏதோ ஒரு பதிவில் கூட ஹைகூ எழுத உங்க பதிவைப் பார்க்க சொன்னதா படிச்சிருக்கேன்..

    ReplyDelete
  6. //அக்னி பார்வை said...
    unmaiya sollunga neenga kavitha ezuthana piravu thaane thamizhmanathula pirassnai.. :)))//

    உண்மையை இப்படி வெளிச்சம் போட்டு காட்டலாமா அக்னி..
    ஏதோ என் கவிதையைக் கண்டு தமிழ்மணமாவது பயப்படுதே!!!

    :-))

    ReplyDelete