Thursday, October 15, 2009

தீபாவளி நல்வாழ்த்துகள்


தீபாவளி ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டத்தை..வெள்ளை மாளிகையில் வேத மந்திரங்கள் பின்னணியில் ஒபாமா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இது செய்தி.

தீபம் என்றால் ஒளி..ஆவளி என்றால் வரிசை..வரிசை..வரிசையாய் விளக்கேற்றி..இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையென தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர்..நரகாசுரன் என்னும் அரக்கனை கொன்ற போது..அவன் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்ற கேட்ட வரத்திற்கேற்ப தீபாவளி கொண்டாடப்படுவதாக கதை உண்டு.

ராமாயணத்தில்..ராமர்..ராவணனை அழித்து விட்டு..தன் வனவாசத்தை முடித்து..மனைவி சீதை,தம்பி லட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாள்..மக்கள் விளக்கேற்றி..மகிழ்ச்சி அடைந்தனராம்.அதுவே தீபாவளி என்றும் கதை உண்டு.

ராமாவதாரத்திற்குப்பின்னர் தான் கிருஷ்ணாவதாரம்..அதனால் ராமர் காலத்தில் தீபாவளியே கிடையாது என்பாரும் உண்டு.

ஸ்கந்தபுராணப்படி..சக்தியின் கேதார விரதம் முடிந்து, சிவன் சக்தியை தன்னில் பாதியாக்கி அர்த்தநாரீஸ்வரர் ஆன தினம் என்றும் சொல்லப்படுகிறது.

1577ல் தங்கக்கோவிலுக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கியதால்..இந்த நாளை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து..சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

எது எப்படியோ..

பண்டிகை தினம் என்றாலே...மகிழ்ச்சியும்..கொண்டட்டமும் தானே!

அனைத்து பதிவர்கள், திரட்டிகள்,பின்னூட்டாதிபதிகள் அனைவருக்கும்..என் தீபாவளி நல்வாழ்த்துகள்.

வாழ்க..வளர்க

13 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நன்றி
    சின்ன அம்மிணி
    நசரேயன்

    ReplyDelete
  5. //goma said...
    நன்றி நன்றி//

    நன்றி Goma

    ReplyDelete
  6. தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. //வானம்பாடிகள் said...
    தீபாவளி நல்வாழ்த்துகள்//

    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  8. குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //மங்களூர் சிவா said...
    குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.//

    நன்றி சிவா

    ReplyDelete
  10. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் டி வி ஆர் சார்! :)

    ReplyDelete
  11. //வருண் said...
    உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் டி வி ஆர் சார்! :)//

    நன்றி வருண்

    ReplyDelete