Saturday, January 29, 2011

விருந்தும்..மீனும்..





ஐந்தாண்டு பதவி வேண்டி

ஐந்து நட்சத்திர ஓட்டலில்

பலவகை மீன்களுடன்

பலமான விருந்து

போதை ஏறியதும்

தட்டில்

தண்ணென கிடந்த

ஒவ்வொரு மீனும்

தமிழக மீனவனாகவும்

கொண்டு வந்த வெயிட்டர்

சிங்கள கடற்படையாயும்

கண்ணுக்குத் தெரிந்தது

தலைவனுக்கு

16 comments:

  1. நறுக் கவிதை நன்று சார்.

    ReplyDelete
  2. மீனிலும் முள் இருக்கும்.

    ReplyDelete
  3. அரசியலில் இருப்பவர்களுக்கும் குத்தவேணும் !

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ராமலஷ்மி

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்

    ReplyDelete
  6. கவிதை சூப்பர் சார்!........
    நறுக்குன்னு இருக்கு!........

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி M.G.ரவிக்குமார்™...,

    ஏதோ எனக்குத் தெரிந்ததை கவிதைங்கிற பேர்ல கிறுக்கியிருக்கேன் அவ்வளவுதான்

    ReplyDelete
  8. கவிதை நறுக்குன்னு இருக்கு.

    ReplyDelete
  9. உணர்வூட்டும் கவிதை.

    ReplyDelete