Sunday, December 11, 2011

ரஜினி..62..பிறந்த நாள் வாழ்த்துகள்




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று 62வது பிறந்த நாளாகும். இதையொட்டி அவர் கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரா சாமி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். தர்மஸ்தலாவுக்கும் அவர் செல்கிறார்.

இதை அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மந்த்ராலயம் சென்றுள்ளார். அங்குள்ள ராகவேந்திரா சாமி கோவிலில் அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். ரஜினிக்காக சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தர்மஸ்தலாவுக்குச் சென்று அங்கும் சாமி கும்பிடுகிறார்.

முன்னதாக ரஜினிகாந்த்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் தொலைபேசி மூலமும், வாழ்த்துக் கடிதங்கள் மூலமும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

டிஸ்கி - ரஜினி உடல்நிலை தேறி வந்ததும் ஆந்திராவில் உள்ள திருப்பதி சென்று வந்தார்..இப்போது கர்நாடகாவில் உள்ள மந்த்ராலயம் சென்றுள்ளார்.

7 comments:

  1. மனதைத் தொட்ட கலைஞனுக்கு என் வாழ்த்துக்களும் சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. 62 வயதிலும் இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்த நடிகர்.மனம் நிறைந்த வாழ்த்துகள் !

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    Online Works For All

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி
    ♔ம.தி.சுதா♔

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

    ReplyDelete