Thursday, February 14, 2013

ஆதலினால் காதல் செய்வீர்







1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ கத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.

2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.

3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.

4.இரவில் கவிதை

கவிதையான இரவு

கனவில் நிலவு

நிலவு பற்றி கனவு

தனிமையில் சிரிப்பு

சிரிப்பில் தனிமை

இதுதானா காதல்?


5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.


6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.


7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.


8.காதல் என்பது எதுவரை

கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்


9.பறக்கத் தெரியும்

திசை தெரியாது

காதல் ஓர்

இலவம் பஞ்சு


_ கபிலன்


6 comments:

  1. அந்த காலமெல்லாம் எப்போவோ போயாச்சு.....இப்போ எல்லாம் இதை எல்லாம் தாண்டியே போய் விட்டாங்க......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  3. காதல் என்பது எதுவரை ..கல்யாணம் காலம் வரும் வரை ..இது அந்த காலம் !தின 'சிரி ' ஜோக்!TIMEPASS காதலுக்கு தாலி எதுக்கு ?இப்போ இப்படியும் காதல் ;http://jokkaali.blogspot.in/2013/02/timepass.html

    ReplyDelete