1.நேற்று கச்சேரியிலே பாகவதர் அமிர்தவர்ஷினி ராகம் பாடினதுமே மழை வந்ததாமே!
ஆமாம்..பாகவதர் வாயைத் திறந்ததுமே..முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவங்க
மேலே எல்லாம் மழைச்சாரல்.
2.உன்னோட கணவர் இன்னிசைக் கச்சேரியில் 'ட்ரம்ஸ்'வாசிப்பார்னு சொன்னே..ஆன வீட்ல
ஒரு சத்தத்தையும் காணுமே..
'ட்ரம்ஸ்'எல்லாம் திருப்பிப் போட்டு தண்ணீர் பிடிச்சு வைச்சிருக்கேன்.
3.கடம் வித்வான் வரலியேன்னு கிரிக்கட் ஆடறவனை அழைச்சுண்டுப் போனது
தப்பாப் போச்சு
ஏன்? என்னவாச்சு?
கடத்தைத் தூக்கிப்போட்டு பிடிக்கிறேன்னுட்டு..தூக்கிப்போட்டு பிடிக்காம கோட்டைவிட்டுட்டான்.
4.நேற்று என் பையன் எதிரில்..வாசல் கதவு 'கீரிச்..கீரிச்' நுசத்தம் போட்டப்போ எண்ணை போட்டது
தப்பாப் போச்சு.
ஏன் அப்படி?
இன்று நான் வயலின் வாசிச்சு முடிந்ததும்..என் வயலினுக்கு எண்ணை போட ஆரம்பிச்சுட்டான்.
5.போன வாரம்தான் உங்க குழந்தைக்கு காது குத்தறோம்னு விடுமுறை கேட்டீங்க..இப்ப திரும்ப
விடுமுறை கேட்கறீங்களே?
போன வாரம் ஒரு காதுதான் குத்தினோம்..இப்போ இன்னொரு காதை குத்த்ப்போறோம்.
2 comments:
நகைச்சுவை எங்கிருந்தாலும் அதைத்தேடிப்பிடித்து, ரசித்து, பிறரையும் ரசிக்கவைக்கும் நான், உங்கள் தளத்தை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்!
- கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு.
(ஆசிரியர்-தஞ்சாவூர் மகிழ்வோர் மன்றத்தின் வெளியீடான 'மகிழ்ச்சி" நகைச்சுவை இதழ்)
வருகை புரிந்தமைக்கு நன்றி..கிரிஜாமணாளன் அவர்களே
Post a Comment