Friday, June 29, 2012

சகுனி வெற்றி படமா..?




சகுனி படம் வெளியாவதற்கு முன் அதற்கு கொடுக்கப்பட்ட பில்டப் எவ்வளவு...

வழக்கம் போல விஜய் டிவி அதில் சம்பந்தப் பட்டவர்களை, தங்கள் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் சொன்னது என்ன..அப்படி பங்கேற்ற கலைஞர்கள் படத்தை ஆகா..ஓகோ என்று சொன்னதென்ன..

கடைசில் படம்..பத்தோடு ..பதினொன்றாக....

ம்ஹூம்..பதினொன்று என்று சொல்லக் கூட மனமில்லை..

மிகவும் சராசரியான அரைவேக்காடு பணம்..

ரயில்வே மேம்பாலம் கட்ட தங்கள் வீடு இடிபடும் என அதைக்காக்க சென்னை வந்து அரசியல்வாதிகளை சந்திக்க மூயன்று, கடைசியில் தானே அரசியலில் நுழையும்  காட்சிகள்... தன் கல்யாண மண்டபம் மேம்பாலம் அமைக்க இடிக்கப்பட்ட ஒருவரை சுட்டிக்காட்டவில்லை என்பதை நம்ப வேண்டும்..

இப்படி..ஆங்காங்கே..நடைபெறும், நடைபெற்ற அரசியல் செய்திகளை திரட்டி கொடுக்க முயன்றுள்ளவருக்கு..முக்கியமாக மேயர் பதவி அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என தெரியாமல் போனதேன்.

ஊருக்கே சாப்பாடு போட்டு தன் சொத்துகளை இழந்த குடும்பம், மக்களுக்கு உதவ வரும் மேம்பாலத்திற்கு தன் வீட்டைத் தர மறுக்குமா...வேறு இடமில்லை என வாதாடினாலும்..அரசு இழப்பீடு தொகை கொடுக்குமே..

அரசியலில் ஈடுபடுவது, அரசை பிடிப்பது என எல்லாம் இலகுவாக நடப்பதைப் பார்த்தால்...2001,2006,2011 ஆகிய ஆண்டுகளில் நான் தான் முதல்வர் என்று சொல்லிவந்த அரசியல் தலைவர்கள் 2016ல் முதல்வராக வேண்டும் என்றால் கமலை (கார்த்தி) பிடித்துக் கொள்ளுங்கள்.

எந்த லாஜிக்கும் இல்லாமல், படம் பார்ப்பவர் காதுகளிலெல்லாம் பூவை சுற்றி அனுப்பும் இப்படம் வெற்றி படமா..

1154 திரையரங்குகளில் வெளியாகி இன்னும் சில நாட்கள் ஓடப்போகும் இப்படம் வசூலில் வெற்றி அடைந்திருக்கும்..ஆனால்...தரத்தில்..

வழக்குஎண்..சென்னையில் மூன்றே திரையரங்குகளில் சில காட்சிகளே ஓடிக்கொண்டிருக்கிறது..அப்படியாயின்..அது தோல்வி படமா..கண்டிப்பாக இல்லை

படத்தின் வெற்றி வசூலை வைத்து கணக்கிடப்படுவதில்லை எனில் சகுனி ஒரு தோல்விப்படமே  



Thursday, June 28, 2012

பேருந்து ஓட்டுநர்கள்....




எனக்கு முற் பிறப்பு...அடுத்த பிறப்பு ஆகியவைகளில் நம்பிக்கையில்லை..ஆயினும் அப்படி ஒன்று இருந்தால்...(எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கையில்லை..இருந்தாலும் என் ஜாதகம் அப்படி..என கலைஞர் சொல்வது போல அல்ல நான் இப்படி சொல்வது..கமல், கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்பது போல)..சென்ற பிறவியில் அதிக பாவம் செய்தவர்களாய் இருந்தால்தான் இப்பிறவியில் பேருந்து ஓட்டுநர்களாக இருப்பார்கள் என்பேன்.

சென்னை போன்ற நகரில்..போக்குவரத்து நெரிசல், மெட்ரோ ரயிலுக்கான பணி என ஆங்காங்கே சுருங்கிய சாலைகள்..இதில்..கிட்டத்தட்ட 65 பயணிகள் பயணம் செய்ய வேண்டிய பேருந்தில்..100க்கும் மேல் பயணம்.. ஒரே டிரிப் என்றாலும் ஓகே..

ஆனால் காலை 5 மணி அளவில் துவங்கும் பணி..மாலை 2 மணி யளவில் முடிவு பெறுகிறது.(சில தடங்களில் முழு நாளும் வேல..அடுத்த நாள் ஓய்வு).உணவு ..கிடைக்கும் இடைவேளையில் முடித்துக் கொள்ளவேண்டும்.கொளுத்தும் வெயிலில் ..பேருந்தின் எஞ்சினிலிருந்து வெளியாகும் வெப்பம் வேறு...ஒரு டிரிப் என்றாலே தாவு தீர்ந்திடும்..ஆனால் இவர்கள் நாலு ஐந்து டிரிப்கள் அடிக்க வேண்டும்.

இடையில் பயணிகளுடன் சண்டையையும் சமாளிக்க வேண்டும்...

ஒருநாள் இப்படி பணி செய்தாலே..உலகே வெறுத்துவிடும்..

எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்குத்தான்..

இதனிடையே..காலையில் வேலைக்குக் கிளம்பினால்..மாலை வீடு வந்து சேர்வது நிச்சயமில்லை..

ஓட்டுநர்கள்..அலைபேசியில் பேசியதால் தான் விபத்து என..ஒரு விபத்து எனில் உடனே சொல்லப்படும் கருத்து..ஆனால் விசாரணையில் விபத்துக்கான காரணம் வேறாய் இருக்கும்.

அண்ணா மேம்பால விபத்தும்..காரணம் இதையேத்தான் சொல்கிறது..அதே நேரத்தில்..சௌகரியமாக அமர்ந்து வண்டியை ஓட்ட வேண்டியவர் இருக்கை ..நழுவிவிடாமல் இருக்க கயிறு போட்டு கட்டப்பட்டிருந்ததை மறந்துவிடுகிறோம்.

ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா? அது முக்கியமில்லையா...

இதனால்..நான் ஓட்டுநர்களை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம்..

அவர்கள் பணிச்சுமையை உணர்ந்து...அவர்கள் மீதும் சிறிதேனும் பரிதாபப் படுங்கள்..

விபத்துகளுக்கான காரணத்தை..எடுத்தேன்..கவுத்தேன் பாணியில்...ஓட்டுநர்தான் விபத்துக்கான காரணம் என உடனடியாக பழியை அவர் மீது சுமத்துவதை தவிருங்கள்.

ஓட்டுநர்களும், வண்டியை எடுக்கையில்..பயணிக்கும் அனைத்து பயணிகள் உயிரும் அவர் கையில் உள்ளது என்பதை உணர வேண்டும்.

ஆமாம்..சமீபத்திய விபத்தில்..நடத்துனரை கைது செய்ய ..அவர் என்ன செய்தார்?


Thursday, June 21, 2012

காணாமல் போன அமைச்சர்கள்...




அம்மா கோட நாடு போனதும்..அமைச்சர்கள் 32 பேரை காணவில்லை.இவர்கள் எங்கு போய் இருப்பார்கள் என சரடு நாளிதழ் புலனாய்வுப் பிரிவு தேடுதலில் இறங்கியது.

அப்போது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து அவர்கள் தில்லியில் முகாம் இட்டுள்ளதாகத் தெரிகிறது.

சரடு நிருபரிடம் ஒரு அமைச்சர் அகப்பட அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.அந்த அமைச்சர் கூறியதிலிருந்து....

'புதுக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில்..எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் டிபாசிட் இழக்க வேண்டும் என விரும்பியதாகவும்..ஆனால் எதிர்த்த வேட்பாளர் டிபாசிட் பெற்றதால் அம்மாவிடம்..அங்கு முகாமிட்டிருந்த அனைத்து அமைச்சர்களும்..அர்ச்சனை பெற்றதாகவும் சொன்னார்.

இந்நிலையில் அம்மா ஊரில் இல்லாத நிலையில்..அம்மாவின் நன்மதிப்பைப் பெற 32 அமைச்சர்களும் தில்லியில் முகாமிட்டுள்ளதாகவும்..குடியரசுத் தேர்தலில் அம்மாவின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டிபாசிட் இழக்க வைத்து..அம்மாவிற்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அமைச்சர்கள் குழு அளிக்கப் போவதாகவும் கூறினார்.

அடடா...இவர்களின் கட்சியின் பற்று..தம்மை மெய்சிலிர்க்க வைத்ததாக சரடு நிருபர் தெரிவிக்கிறார்.

இதனிடையே கலைஞர் தான் ஆதரிக்கும் வேட்பாளர் தோற்றால்..அதற்கான காரணம் என்ன சொல்லலாம் என அறிய செயற்குழு கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய்காந்தோ..தேர்தலை தான் புறக்கணிக்கக் காரணம்..சோனியா தன்னை திராணி இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் எனக் கூறாததே காரணம் என்றார்.
   


Saturday, June 16, 2012

கலாம் என்றால் கலகக்காரரா.....





கலாம் என்றாம் கலகம் என்று பொருள் என்ற முறையில்..அப்துல் கலாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் செய்திகள் பற்றி கேட்ட போது கலைஞர் கூறியுள்ளார்.

கலகம் என்று சொன்னதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது..இஸ்லாமிய சகோதரர்களும் வெகுண்டு எழுகின்றனர்.

ஆனால்..கலைஞர் சொன்னதன் பொருள்...இந்து இதிகாசம்,புராணங்களில் வரும் நாரதரை கலகக்காரர் என கூறுவதுண்டு.அதே சமயம் நாரதர் செய்யும் கலகம் அனைத்தும் நன்மையிலேயே முடியும் என்றும் கூறுவர்.

கலைஞரும் அந்த அர்த்தத்தில்தான் கலாம் என்றால் கலகம் என்று கூறியுள்ளார்..அதாவது அப்துல் கலாமால் நல்லதே நடக்கும் என மக்கள் உணரவேண்டும் என்பதே கலைஞரின் கருத்து..

எப்படி என் சமாளிப்பு....


Thursday, June 14, 2012

ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்த மாயாவதி





முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தான் முதல்வராக இருந்த போது தனது பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநில சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆளும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ரவிதாஸ் மல்ஹோத்ரா முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிரமாண்ட பங்களா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அபிஷேக் மிஸ்ரா கூறுகையில்,

மாயாவதி தான் முதல்வராக இருக்கையில் மால் அவென்யூவில் உள்ள பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார். அதிலும் எலக்ட்ரிக்கல் பணிக்கு மட்டும் ரூ.20.09 லட்சம் செலவு செய்துள்ளார். இது குறித்து இதுவரை எந்த புகாரும் வராததால் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்றார்.

5 ஏக்கரில் அமைந்துள்ள மாயாவதியின் பங்களாவை கட்ட அரசு கஜானாவில் இருந்து ரூ.86 கோடி எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

(தகவல் தட்ஸ்தமிழ்)

டிஸ்கி - இதைப் போய் பிரமாதமா சொல்றாங்க..60 கோடி ஃபோபர்ஸ் ஊழலுக்கு 200 கோடி செலவு செஞ்சு விசாரணைக் கமிஷன் அமைச்சவங்க நாங்க..


Wednesday, June 13, 2012

எஸ்.எம்.எஸ் பரிசு: கொள்ளை லாபம் அடிக்கும் டிவி- செல்போன் நிறுவனங்கள்!




லாட்டரி சீட்டு மோகம் ஒழிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது புதிதாக எஸ்.எம்.எஸ் அனுப்புங்க, பரிசை வெல்லுங்க என்ற கோஷத்துடன் களம் இறங்கியுள்ளன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

மக்களின் பணம் சம்பாதிக்கும் பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எப்படி எல்லாம் நம் பணம் பறிபோகிறது என்பதைப் பற்றி சின்னதாய் ஒரு ரவுண்ட் அப்.

கேம் ஷோவோ, ரியாலிட்டி ஷோ எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் பணத்தை கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

உதாரணமாக கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு கேள்வியை கேட்பார்கள். சரியான விடையை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறுவார்கள். அதை நம்பி உடனே லட்சோப லட்சம் எஸ்.எம்.எஸ்கள் பறக்கும். பரிசு என்னவோ பத்து பேருக்குதான் போகும். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான லாபம் அடித்து வருகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

முன்பெல்லாம் பரிசுக்கு உரிய பதிலை போஸ்ட் கார்டில் எழுத வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் பரிசுக்குரிய விலை அதிகம் கொண்ட போஸ்ட் கார்டு விற்பனைக்கு வந்தது. அது மத்திய அரசின் தபால் துறையின் வருமானத்தை அதிகரித்தது. ஆனால் இன்றைக்கோ எந்த தொலைக்காட்சி என்றாலும் ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர். எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் டோல் ப்ரி சேவையை அறிமுகம் செய்யலாமே?.

நன்றி - தட்ஸ்தமிழ்

Sunday, June 10, 2012

வெளிநாட்டில் பதுக்கியுள்ளது அனைத்தும் கறுப்பு பணமல்ல...-நிதி அமைச்சர்..




சட்டத்துக்கு முரணான செல்வத்தை வெளிநாடுகளில் பதுக்கிவைத்தால், அது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு 37 நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அந்த நாடுகள் விவரங்களைத் தரட்டும். அதன் பின்னர் அது கறுப்புப் பணமா? இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

அந்த பணம் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியப் பணத்தின் மதிப்பை அளவிட சிறிது காலமாகும்.

மத்திய அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன. உணவுப் பொருள்களுக்கும் பெட்ரோல் பொருள்களுக்கும் மத்திய அரசு அதிக அளவில் மானியம் தர வேண்டியிருப்பதால், மாநில அரசுகள் கேட்கும் அளவுக்கெல்லாம் நிதிதர முடியவில்லை என்றார் அவர்.

கறுப்புப் பணம் தொடர்பாக அண்மையில் மக்களவையில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். 97 பக்கம் கொண்ட அந்த வெள்ளை அறிக்கையில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பெயர் எதுவும் குறிக்கப்படவில்லை.

டிஸ்கி - ஜனாதிபதிக்கான வேட்பாளர் தயார்..சிங்க்..சாங்க்..


Thursday, June 7, 2012

காந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் 50 பேர் பட்டியலில் ரஜினி!


தேசப் பிதா என கொண்டாடப்படும் காந்தியடிகளுக்குப் பிறகு இந்தியாவின் மிகச் சிறந்த மனிதர் யார் (Greatest Indian after Mahatma Gandhi)?
இந்தத் தலைப்பில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி வருகிறது ஹிஸ்டரி மற்றும் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிகள். அவுட்லுக் பத்திரிகை ஆதரவுடன் இந்த வாக்கெடுப்பு நடக்கிறது.


தலைவர்களின் சர்வதேச புகழ், மக்கள் மீதான அவர்களின் தாக்கம், உதாரணத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

பிபிசியின் வாக்கெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் இதில் 50 இந்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, அன்னை தெரசா, அன்னை இந்திரா காந்தி, என தலைவர்களும் மனித நேய மாந்தர்களும் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு நபரும் தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி 10 தலைவர்களை வரிசைப்படுத்தலாம். அதாவது 10 வாக்குகளை அளிக்கலாம். இதுவரை 215332 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், இப்போது 12வது இடத்தில் உள்ளார் ரஜினி. முதலிடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளார். வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறிக் கொண்டிருக்கும்.

(தகவல் தட்ஸ்தமிழ்)