Thursday, October 17, 2013

கொள்ளுத்தாத்தா வழியில் பேரன்....



சாதாரணமாக...தாத்தாக்குரிய சில குணாதிசியங்கள்..பேரனுக்கும் சில ஏற்படும் எனப்படுவது இயற்கையிலேயே அமைந்தது.

அப்படி ஒன்று, இன்று கொள்ளுத்தாத்தா வழியில் பேரனுக்கும் வந்துள்ளது.

பாரதப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது, தி.மு.க., பற்றி நேரு ஒருசமயத்தில், "நான்சென்ஸ்" என்று கமெண்ட் அடித்தார்.

அதை அப்படியே கிண்டல் செய்து, கலைஞர் கதை வசனம் எழுதிய 'திரும்பிப்பார்' படத்தில், சிவாஜி கணேசன் பாத்திரம், நேருவைப்போல கறுப்புக்கண்ணாடி அணிந்து, 'நான்சென்ஸ்' என்று அடிக்கடி கூறுவது போல படைத்திருந்தார் கலைஞர்.

இன்று....

நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல், தன் கட்சி கொண்டுவர இருந்த அவசரச் சட்டத்தையே கடைசி நிமிடம் வரை வாளாயிருந்துவிட்டு, பின்.."நான்சென்ஸ்' என்றுள்ளார்.

இதை கலைஞர் எழுதிய அன்றைய வசனத்துடன் மனம் ஒப்பிடுகிறது.ஆனால் இன்று இதை நையாண்டி செய்பவர் யாருமில்லை.

தாத்தா வழியில் பேரன் சென்றது..சரியான வாரிசு அரசியல் என்பது இதுதான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறது....!

vijayan said...

non-sense என்று நேரு சொன்னதை ஏதோ கெட்ட வார்த்தை என்று தம்பிகள் அர்த்தம் பண்ணிக்கொண்டு சேரன் செங்குட்டுவன் கனக விசயர் தலைமேல் கல்சுமக்க செய்ததுபோல்,நேருவின் தலை மேல் கல் ஏற்றுவோம் என்று ஊருக்கு ஊர் comedy பண்ணியது இப்போதும் நினைவில் இருக்கிறது.

ராஜி said...

தொடரட்டும்...,

”தளிர் சுரேஷ்” said...

அட! புதிய தகவல்! நன்றி!