Thursday, December 5, 2013

சிவராமனின் கவசம்..




நண்பர் பைத்தியக்காரர் சிவராமின் 'கர்ணனின் கவசம்' அமானுஷ்யத் தொடர்..குங்குமத்தில் தொடராக வந்து இந்த வாரத்துடன் நிறைவுபெறுகிறது.

என்ன ஒரு இடியாப்பச் சிக்கல் கதை..

எந்த ஒரு தொடரிலும்,  அந்தந்த பாத்திரங்களை நினைவு வைத்திருக்க முடிந்த நம்மால்...இந்தத் தொடரில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் நினைவு கூற முடியுமா? என்பது சந்தேகமே...

ஒரு வாரம் படிக்கும் போதே...முந்தைய சில வாரத்து புத்தகம் எடுத்து, மீண்டும் பழைய அத்தியாயத்தை நினைவில் கொண்டுவர வேண்டி இருந்தது.

இதையெல்லாம், பல வேலைகளிடையே, நினைவில் நிறுத்தி மிக அற்புதத் தொடரை அளித்த சிவராமன் பாராட்டுக்குரியவர்.

அவரிடம் ஒரே ஒரு கேள்வி..

முழுத் தொடரையும் முதலிலேயே எழுதி விட்டாரா? அல்லது...அந்தந்த வாரத்திற்கான சினாப்சிசை முதலிலேயே குறித்துக் கொண்டு எழுதினாரா?

நான் ஒரு துணுக்கு எழுதி இருந்தேன் முன் ஒருமுறை..

ஒரு மெகாசீரியல் இயக்குநரைச் சுற்றி..ஒரே காகிதக் குப்பைகள்..அவர் என்ன செய்கிறார்..

தன் தொடரில் எந்தெந்த பாத்திரங்களை எங்கு விட்டார் எனத் தேடிக்கொண்டிருக்கிறார் என..

அந்த துணுக்கு இப்போது ஞாபகம் வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு அற்புதத் தொடரை அளித்ததுடன் மட்டுமல்லாது, இத் தொடரால் பிற சில வாரப்பத்திரிகைகளும் தொடர்கதைகளை வெளியிடும் போக்கை மீண்டும் ஆரம்பிக்க காரணமாய் இருந்த சிவராமனுக்கு மீண்டும் பாராட்டுகள்.

ஹேட்ஸ் ஆஃப் சிவராமன்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிவராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

கே.என்.சிவராமன் said...

ரொம்ப நன்றி டிவிஆர் சார்... இப்பத்தான் உங்க போஸ்டை படிச்சேன்.

உங்க கேள்விக்கான பதில், வாரா வாரம்தான் அத்தியாயங்களை, அதுவும் இறுதி நேரத்துலதான் எழுதினேன்.

முதல் வாசகர்களாகவும், ஒரு வகையில் தொடரின் இணையாசிரியர்களாகவும் நண்பர்கள் நரேனும், யுவகிருஷ்ணாவும் இருந்ததால் என்னால் கரை சேர முடிந்தது. இவங்க இரண்டு பேரும் என்னை திரும்பத் திரும்ப பல அத்தியாயங்களை எழுத வைச்சாங்க. அதனாலதான் நீங்க பாராட்டற இடத்துல என்னால நிற்க முடியுது.

Anonymous said...

அப்போ விரைவில் சின்னத் திரையில் நெடுந்தொடராய் வரும் போலிருக்கே.

---

mohamedali jinnah said...

சிவராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Karthikeyanks said...

super post,fanatastic

by

jothida express

www.supertamilan.blogspot.in

Karthikeyanks said...

super post,fanatastic

by

jothida express

www.supertamilan.blogspot.in