தமிழ்த் திரையுலகில் பல் வேறு காலகட்டங்களில் பல்வேறு கதாநாயகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம் கே ராதா, ரஞ்சன் போன்றவர்களுக்குப் பின் திரையுலகின் பொற்காலமான 50- 60-70 களில் மூவேந்தர்களாக எம் ஜி ராமச்சந்திரன், சிவாஜி கனேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் இருந்தனர்
இவர்கள் மூவரும் நூற்றுக் கணக்கான் படங்களில் நடித்தனர்..வெற்றிக் கொடி நாட்டியவர்கள் இவர்கள்
இவர்களுடன், எஸ் எஸ் ராஜேந்திரன்,முத்துராமன் போன்றோரும் அடுத்தக் கட்டத்தில் இருந்தனர். த்னியாக கதாநாயகர்களாகவும்..மற்றவர்களுடன் சேர்ந்து துணைப்பாத்திரங்களிலும் நடித்து வந்தனர்
அடுத்த காலகட்டம்..
ஜெயஷங்கர், ரவிசந்திரன் சிவகுமார் போன்றவர்கள் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று நடித்தனர்.ஸ்மால் பட்ஜெட் படங்கள் என இவர்களின் படங்கள் குறிப்பிடப்பட்டன. .தயாரிப்பாளர்களுக்கும் ஓரளவு லாபத்தை ஈட்டிக் கொடுத்தனர்.குறிப்பாக ஜெயஷங்கர், வெள்ளிக்கிழமை நாயகன் என்றே குறிப்பிடுவார்கள்.அந்தளவு படங்கள் வெளிவந்தன
இடைபட்ட காலத்தில் வந்து பெரும் நட்சந்திர அந்தஸ்தைப் பெற்றவர்கள் சூபர் ஸ்டாரும், உலக நாயகனும்..இவர்களும் ஒரு கட்டத்தில் வருடத்திற்கு ஓரு படங்கள் என நிறுத்திக் கொண்டனர்
தொடர்ந்து, வி்ஜய், அஜீத், சூர்யா போன்றவர்கள் திரையுலகை ஆண்டு வந்தார்கள்..வருகிறார்கள்..இவர்கள் நடிப்பும்..ஆண்டுக்கு ஓருரு படங்கள் என்றாயிற்று
தவிர்த்து, இவர்களின் படங்கள் வணிக ரீதியான படங்களாகவும்., கிட்டத்தட்ட ஒரே கதையமைப்புக் கொண்ட படங்களாகவும் இருக்கின்றன
இந்நிலையில், வந்தவர்களில் விஜய் சேதுபதி குறிப்பித்தக்கவர்.இவர் படங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்டவையாக அமைந்தவை.மக்க்ள் அதற்காகவே அவரை விரும்ப ஆரம்பித்தனர்.இவர் நடித்தப் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு லாபத்தையும் ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.ஏதேனும் தோல்விபடங்கள் என குறிப்பிடப்பட்டாலும், வசூலில் தோல்வி என்று கூற முடியாதவையாக அமைந்த்ன.
நீண்ட காலத்திற்குப் பிறகு..ஒரு கதாநாயகன் ஒரே ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த சாதனையை இவர் புரிந்துள்ளார்.
அடுத்த பதிவிலிருந்து..இவர் நடித்த மாறுபட்டப் படங்கள் குறித்து பார்ப்போம்
No comments:
Post a Comment