Showing posts with label ஈரோடு சங்கமம். Show all posts
Showing posts with label ஈரோடு சங்கமம். Show all posts

Friday, December 30, 2011

ஈரோடு விழா--சவால் போட்டி பரிசளிப்பு விழா..மற்றும் நான்



2011....ல்

பதிவுலகிலும்..சில பதிவர்கள் மீதும் ஏற்பட்ட மனக்கசப்பால்..அதிகமாக பதிவுகள் இடாது இருந்தேன்..

பின்னர் நான் பதிவுகள் இட்டாலும்...முன்னைப் போல் இல்லாமல் பதிவர்களிடமிருந்து சற்று விலகியே இருந்தேன்..

இந் நிலையில்...மீண்டும் தேவையில்லா சர்ச்சைகள் ஏற்படுமோ என்ற நிலையில்..அவசியம் உணர்ந்தே இப் பதிவு.

முதலில் ஈரோடு சங்கமம்..நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தும்..சில காரணங்களால் செல்ல இயலவில்லை.ஆனால் அது நடைபெறும் விதம் கண்டு மகிழ்ந்து முன்னர் பதிவுகள் இட்டுள்ளேன்.இந்த ஆண்டும் என்னால் செல்ல இயலவில்லை.

ஆனால்..மிகவும் விமரிசையாக நடந்தது குறித்து மகிழ்ச்சி.சாதாரணமாக...'வீட்டைக் கட்டிப்பாரு..கல்யாணம் பண்ணிப்பாரு' என்று சொல்வார்கள்.ஏனெனில்..வீடு கட்ட ஆரம்பித்தால் பல செலவுகள், தொல்லைகள் என கட்டி முடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.அதே போன்றதுதான் ஒரு கல்யாணத்தை நடத்துவதும்..சத்திரம் பார்ப்பது,நகை வாங்குவது, சாப்பாடு அரேஞ்ச் செய்வது என செலவு கட்டுக்கு அடங்காமல் இழுத்துக் கொண்டிருக்கும்.

கிரகப்பிரவேசத்திற்கு வருபவர்கள்..இந்த அறையை இங்கே வைத்திருக்கலாம், சமையலறை இருட்டாக இருக்கிறது..என்று தன்னால் வீடு கட்ட முடியா இயலாமையாலோ அல்லது சற்று பொறாமையாலோ.. ஏதேனும் சொல்லிவிட்டு செல்வார்கள்.ஆனால் பட்ட கஷ்டம் வீட்டைக் கட்டியவனுக்கேத் தெரியும்.

அதே போல் கல்யாணத்திற்கு வந்துவிட்டு..மாப்பிள்ளை கருப்பு, பொண்ணு குள்ளம், சாப்பாடு சரியில்லை என குறை சொல்வார்கள்.

இதை எல்லாம் பெரிதாய் எடுத்துக் கொண்டால் வீடும் கட்ட முடியாது..வீட்டில் கல்யாணத்தையும் நடத்த முடியாது.

ஈரோடு சங்கமமும் அப்படித்தான்.ஆனால் என்ன..அவர்கள் மூன்று கல்யாணத்தை நடத்திவிட்டார்கள்..அதற்கு அவர்களிடம் இருந்த ஒற்றுமை,கட்டுப்பாடு,பொருள் உதவி எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்..அடேங்கப்பா...என ஆச்சரியப்படவே செய்யும்.

அப்படியே ஏதேனும் சிறு குறையிருந்தாலும்..நடப்பது நம்ம வீட்டு விழா..என்ற நினைப்பு இருந்தால் ஏதும் பெரிதாக தோன்றாது..

ஆகவே குறை சொல்வதை நிறுத்தி,நிறைகளை பாராட்டுங்கள்...

கதிர் குழுவினருக்கு பாராட்டுகள்..

அன்றே..சென்னையில் சவால் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா..

வேண்டுமென்றே அந்த நாளை வைத்தார்கள்...என ஒரு வதந்தையைக் கிளப்பியுள்ளனர்.

இது என்ன நான் பெரியவனா..நீ பெரியவனா..என்று அண்ணன்..தம்பிகளிடையே நடக்கும் வாய்க்கால்..வரப்பு தகராறா..இவர்களுக்குள்...

இரண்டு விழாக்களுமே ..ஒருவர்..ஒருவருக்குத் தெரியாமல் ஒரே நாள் குறித்து விட்ட விழா...ஆகவே கடைசி நேரத்தில் எதையும் கேன்சல் பண்ண முடியாது...என்ற உண்மையை
ப் புரிந்துக் கொண்டு பேசுங்கள்.

ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது..சொல்லி விட்டேன்..அவ்வளவுதான்..

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்