Showing posts with label கற்பனை பேட்டி. Show all posts
Showing posts with label கற்பனை பேட்டி. Show all posts

Tuesday, December 21, 2010

முதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி

கேள்வி- உங்கள் முன் யானையைப் போல் ஊழல் இருப்பதாகச் சொல்லப்படும்போது..அதற்கான பதிலை நீங்கள் இதுவரை சொல்லவில்லையே

பதில்- யானை அளவு ஊழல் என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள் என நினைத்தேன்..இப்போது என் அந்த நாள் நண்பர் ;கோ' அவர்கள் பத்திரிகையில் இப்படி எழுதிவிட்டதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டேன்..மலையளவு ஊழல் என்றால் மக்களால் நம்ப முடியும்..யானை அளவு என்றால் அதை நிரூபிக்கத் தயாரா..அப்படி நிரூபித்தால்..அவர்கள் மீது..

கேள்வி- அவர்கள் மீது என்றால்..

பதில்- உங்கள் ஆசை எனக்குப் புரிகிறது..ஆனால் நான் சொல்வது ஊழல் என குற்றச்சாட்டை சுமத்துபவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுப்பேன்..

கேள்வி- அப்போது யானை..

பதில்_யானை..யானை..என்கிறீர்கள் எனக்கு பூனைதான் தெரிகிறது.

கேள்வி- ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து ..

பதில்- எழுபத்தாறாயிரம் என சரியாகக் கூறுங்கள்.பா.ஜ.க.,வினரே அந்த அளவு ஊழல் நடந்திருக்காது என்றும் 30000 கோடி தான் நடந்திருக்கும் என்று சொல்லியுள்ளார்களே

கேள்வி- அப்போது 30000 கோடி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா..

பதில்_ அதை நீங்கள் தான் சொல்கிறீர்கள்

கேள்வி- தலித் நிலங்களையே ஏமாற்றி வாங்கியிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு..

பதில்- குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தலித் என்பதால்..வேறு சாதியைச் சேர்ந்தவர்களை தலித் ஆக்கியுள்ளனர் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பத்திரிகையாளர்கள்

கேள்வி_ அப்போ..மற்றவரிடம் நிலம் ஏமாற்றப்பட்டுள்ளது..என்பதை..

பதில்-அதை நான் சொல்லவில்லை நீங்கள் தான் சொல்கிறீர்கள்

கேள்வி  - அமைச்சர் ராஜாவீட்டில் சி.பி.ஐ., ரெய்ட் பற்றி

பதில்- இது சர்வசாதாரணமாக நடப்பது..இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்..

கேள்வி-அமைச்சர் ஆக தயாநிதி மாறன் 600 கோடி..

பதில்- அது பாட்டியையும் பேரனையும் கேட்க வேண்டிய கேள்வி

கேள்வி-காங்கிரஸ் உடன் ஆன கூட்டணி..

பதில்- நாங்கள் கழற்றிவிட மாட்டோம்..அதற்கான நேரமும் அல்ல இது..

கேள்வி- அப்படி ஒருவேளை அவர்கள் கழற்றிவிட்டால்..

பதில்- அதை நீங்கள் தான் சொல்கிறீர்கள்..அவர்கள் சொல்லட்டும்

கேள்வி- ராகுல் தமிழகம் வருவதாக உள்ளதே..உங்களை சந்திப்பாரா..

பதில்- தவறான கேள்வி..அவர் இப்போது தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்.இப்போது அவர் சென்னை வரமாட்டார் என எண்ணுகிறேன்.வந்தால் எனக்கு தெரிவிக்கவும்

கேள்வி- இளங்கோவன் பற்றி..

பதில்- கண்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை..தியாகச் செம்மல்..சொக்கத்தங்கம் சோனியா அம்மையாரை மட்டுமே காங்கிரஸாக நினைக்கிறேன்


கேள்வி- கடைசியாக ஒரு கேள்வி..உங்கள் குடும்பமே திரையுலகை ஆட்டிப்படைப்பதாக...

பதில்- என் குடும்பத்தைச் சேர்ந்தோர் கொடிகட்டி திரையுலகில் பிராகாசிப்பதால் இந்தக் கேள்வி கேட்கிறீர்கள்..இதையே..ரஜினி,கமல் ஆகியோரிடம் கேட்க முடியுமா