கடந்த இரு வருடங்களாக பல பதிவர்களை தன் வசம் வசீகரிக்க வைத்த கூகுள் பஸ் நேற்று முதல் நிறுத்தப்பட்டது.
இதற்கு காரணம் யார் என்று சற்று ஆராய்ந்தால்...இதற்கான காரணம் 'ஜெ' என்று உடனே சொல்லிவிடலாம்.
பாமர மக்களையும் ..சமீபத்தில் ஜெ அரசு அறிவித்த பஸ் கட்டண உயர்வு பெருமளவு பாதித்துள்ளது.பஸ்ஸில் பயணம் செய்வதைவிட ஷேர் ஆட்டொவில் பயணம் செய்வது கட்டணம் குறைவு என்பது வெள்ளிடைமலை.
பஸ் கட்டணம் ஏறிய நாள் முதல்..கூகுள் பஸ்சில் பயணம் செய்வோர்..கட்டுப்படியாகாமல்..கூகுள் பஸ்சில் பயணம் செய்வதை விட்டு விட்டனர்.தினசரி வருவாய் குறைந்ததால் கூகுள் நிறுவனமும் தான் இயக்கி வந்த பஸ்ஸை விலக்கிக் கொண்டது.
இப்போதாவது 'ஜெ' சந்தோஷம் அடைவாரா?
டிஸ்கி -
தலைவருக்கு கூகுள், பிளஸ், இணையம் இது பற்றியெல்லாம் தெரியாதுன்னு எப்படி சொல்ற
கூகுள் பஸ்ஸை ஏன் நிறுத்திக் கொண்டது என்று நிருபர் ஒருவர் கேட்ட வினாவிற்கு தலைவர் கொடுத்த அறிக்கைதான் மேலே சொன்னது..