அன்பின் பெயரிலி
வணக்கம்,..
எனது பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி..உங்களது பின்னூட்டம் இதோ...
-///பெயரிலி. said...
நான்தான் நெகட்டீவோ மறையோ அந்த வோட்டினையோ வாக்கினையோ போட்டேன். கருணாநிதி என்றவரை விதந்தோத்தியும் எல்லாமே சாமிநாதையன்னும் ஜகத்நாதனுமே என்றுமே நிறுவவும் முயலுவதிலே இப்படியாவது எதிர்ப்பதிலே ஒரு சிறு உவகை.
தமிழ் என்றால் உங்களுக்கெல்லாமே இப்போது உங்களுக்கான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலாகத்தான் தெரிகின்றது. அண்டை அயலிலே பலருக்கு அப்படியில்லை - உயிராகவும் உயிர்குடிக்கும் தென் திசைக்கா(வ)லனாகவும் தெரிகின்றது.
நீங்கள் உங்கள் பாட்டுக்குப் புத்தகம் வெளியிட்டுப் படத்துக்குப் 'போசு' கொடுத்து மகிழுங்கள். நான் என் பாட்டுக்கு இப்படியாக - போட்டுக்கொ'ல்'கிறேன்//
எனது தேங்காய்..மாங்காய்..பட்டாணி சுண்டல்..(செம்மொழி சிறப்பு சுண்டல்) பதிவில்..அரசியல் கலக்கக் கூடாது என எந்த ஒரு இடத்திலும் கலைஞரையோ..அரசியலையோ எழுதவில்லை.மொழி பற்றி மட்டுமே சிறு குறிப்புகள் அ
ந்த இடுகைகள்..
இலங்கைத் தமிழர் குறித்தும்..அவர்கள் வேதனைகளையும் இந்திய/தமிழக அரசின் மெத்தனம் குறித்தும்..அவற்றைக் கண்டித்தும்..என் இடுகைகளை நீங்கள் படித்திருக்கக் கூடும்..
ஆனால் செம்மொழி மாநாடு என்ற போது அதில் அரசியல் வேண்டாம் என்பதே என் எண்ணம்..
நீங்கள் சொல்லியிருக்கும் என் புத்தகத்தில் கூட..கலைஞரின் திரைப்படங்கள் குறித்துத்தான் எழுதியுள்ளேன்.
இலங்கை பிரச்னையில்..தன் ஆட்சி பறி போகும் என்று தெரிந்தும் IPKF ஐ..வரவேற்கச் செல்லாதவர் கலைஞர்.அப்படிப் பட்டவர் ஏன் இன்று இப்படி நடந்துக்கொள்கிறார்..சற்று சிந்தித்தால்..கலைஞர் பழைய கலைஞராய் நடந்திருந்தால்..காங்கிரஸ் உடன் ஆன கூட்டு முறிந்திருக்கும்..கலைஞர் ஆட்சி கவிழ்ந்திருக்கும்..பின்னர் வரும் ஆட்சி...சற்று ..சிந்தியுங்கள்...
தவிர்த்து..போபால் விஷவாயு வழக்கில்..ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர்..இலட்சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர்..அவர்களுக்கு நியாயம் கிடைத்ததா? வல்லரசு நாட்டிற்கு பயந்து..குற்றவாளியை தப்பிக்க விட்டு..தம் மக்களுக்கு துரோகம் இழைத்த கட்சி..பிற நாட்டு மக்கள் மீது எந்த அளவு அக்கறைக் கொள்ளும்?
இந்தியா மட்டுமல்ல..எந்த நாடும் முதலில் தன் நலனில் அக்கறைக் கொண்டுதான்..பிற நாடுகளுடன் அரசியல்..பொருளாதார உறவுகளை பேணிக்காக்கும்..மேலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மற்ற நாட்டு உள்விவகாரத்தில் தலையிட முடியாது.
இந்தியாவை பொறுத்து வேறு அந்நிய சக்திகள் ஸ்ரீலங்காவில் ஊடுருவியுள்ள நிலையில்..தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..
சமிபத்திய செய்தி ஒன்று சாலைப் பணியாளர்கள் என சீன ராணுவத்தினர் ஸ்ரீலங்காவில் ஊடுருவியுள்ளனர் என்பதாம்..
ஏற்கனவே வட எல்லையில்..பாகிஸ்தான்..சீனா..
தென் எல்லையிலும் அப்படி ஒரு நிலை வந்தால்..சற்றே ..சிந்தியுங்கள்..
கலைஞரை திட்டுவது என்பது..இவ்விஷயத்தில் ..'ஊருக்கு இளைத்தவன்....' என்று சொல்லப்படும் சொலவடையே ஞாபகம் வருகிறது.
உங்கள் மீது எனக்கு பெரும் மதிப்புண்டு..ஆதலால்..உங்களின் நெகடிவ் ஓட்டோ..போஸ் கொடுக்கிறேன்..என்றதோ எனக்கு மனவருத்தத்தைத் தரவில்லை.பின்னூட்டமே மன வருத்தம் ஏற்படுத்தியது.
இந்த இடுகைக்கும் பல நெகடிவ் வாக்குகள் வரக்கூடும்..அதை தவிர்க்க முடியாது..ஆனால்..தனி நபர் தாக்குதல் பின்னூட்டத்தை தவிர்க்கலாம் என்றே பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் பட்டுள்ளன.
நன்றி
அன்புடன்
T V Radhakrishnan