Showing posts with label வள்ளுவரும்...இன்பத்துப்பாலும். Show all posts
Showing posts with label வள்ளுவரும்...இன்பத்துப்பாலும். Show all posts

Saturday, November 28, 2015

வள்ளுவரும்...இன்பத்துப்பாலும்



உனதழகு

வாட்டுது
என்னை

வண்ண
மயிலாள்

உனைக்
காணின்

மயங்கா
மனமும்

மயங்கிடும்
எனில்

நான்
எம்மாட்டு

இது
சாதாரணன் எழுதுவது...

இதைத்தான்
வள்ளுவன் இன்பத்துப் பாலில் முதல் அதிகாரமான தகை அணங்குறுத்தல் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்லியுள்ளார்.


அணங்குகொல் ஆய்மயில்  கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

(எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ!! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்)