Showing posts with label வேண்டுகோள். Show all posts
Showing posts with label வேண்டுகோள். Show all posts

Tuesday, June 1, 2010

நான் விடை பெறுகிறேன் சந்தனமுல்லைக்கு வேண்டுகோளுடன்..

இணைய தளம்..

அவரவர்கள் எழுத்து ஆர்வத்தைத் தீர்க்கும் அற்புதமான தளம்..

நட்பு வட்டத்தைப் பெருக்கும் தளம்..

நல்லெழுத்துக்களுக்கு..நண்பர்கள் பின்னூட்டத்தை அளித்து நமக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இடம்

சமீப காலமாக ஊடகங்களால் கவனிக்கப்பட்டு..தகுதியுள்ளவர்களின் படைப்பை தங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கும் சக்தி படைத்த இடம்..

திரைப்பட விமரிசனங்களைக் கண்டு..தயாரிப்பாளர்களும்..இயக்குநர்களும் நம் படத்திற்கு இணையத்தில் விமரிசனம் எப்படியுள்ளது என ஆர்வத்தை உண்டாக்கிய இடம்..

மேலே சொன்னவைதான் ஒவ்வொருவரையும் வலைப்பூ ஆரம்பித்து தங்கள் திறமையைக் காட்டச்சொன்னது..இதற்கு தமிழ்மணம்,தமிலீஷ்,திரட்டி,தமிழ்வெளி போன்ற திரட்டிகள் செயல்பட்டன.
ஆனால்..சமீப காலங்களில் அதன் போக்கு சற்று கவலையைத் தந்துள்ளது..

காரணம்..ஒருவேளை எல்லோரும் அறிவாளியாய் இருப்பதால் இருக்குமோ?

சமீபத்திய பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் சாதித்த போதும் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை அனைவராலும் உணரமுடிகிறது..போதும் விசிறியது..பதிவர்களே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்..

இதனால் நர்சிமிற்கு நான் சப்போர்ட் செய்வதாக எண்ண வேண்டாம்.அவரின் சர்ச்சைக்குரிய இடுகை கண்டனத்திற்கு உரியது..அதை எழுதியதற்கு கடந்த நான்கு நாட்களாக அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டார்.

சந்தனமுல்லையைப் பொறுத்தவரை..அவரின் ..மொழிபெயர்ப்பு திறமையைக் கண்டும்..எழுத்துத் திறமையைக் கண்டும் வியந்தவன் நான்.நர்சிமின் மன்னிப்பை அவர் ஏற்பார் என்றே எண்ணுகிறேன்..

முல்லை..ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கேட்கிறேன்..இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி ஒரு பதிவிடுங்கள்..அது உங்களால் மட்டுமே முடியும்..

இனி..

ஜாதிப்பிரச்னை..தனி நபர்த் தாக்குதல் ஆகியவை மலிந்துவிட்ட இணையதளம் எனக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது..ஆகவே தமிழா..தமிழா..வலைப்பூ இனி இயங்காது என அறிவித்துக் கொள்கிறேன்..

இது நாள் வரை எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.