இரு நண்பர்களிடையே நடந்த உரையாடல்..
'என்ன.. கோவிந்தன்..உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?'
'வரப்போறவ பொறுமையில் பூமாதேவியாய் இருக்கணும்..என்னா..என் பையன் கோபக்காரன்.
அழகிலே மஹாலட்சுமியாய் இருக்கணும்..என்னா...என் பையன் சுமார் ரகம்தான்..வர்றவ அழகா இருந்தா பிறக்கப்போற குழந்தயும் அழகா இருக்கும்.
அமுது படைப்பதில் அன்னை போல இருக்கணும்..என் மகனுக்கு அடுப்பு கூட பத்த வைக்கத்தெரியாது.
இல்லறநுகர்ச்சியில் கணிகை போல...அப்போதானே வீட்டோட கிடப்பான்...வெளியே சாப்பிடத்தோனாது..
ஆலோசனை சொல்றதிலே அமைச்சராய் இருக்கணும்.இவன் படிப்பு 10வது தான்.பொண்ணு குறஞ்சது டிகிரி முடிச்சிருந்தா வசதியாய் இருக்கும்.
பணிவிடை செய்யறதுலே தாதியாய் ...புருஷனுக்கு அடங்கி ..அவனையும் வீட்டு பொறுப்புகளையும் கவனிச்சுண்டு..வேலைக்கும் போய் வரணும்..ஏன்னா எங்க வீட்டிலே வேலைக்காரி கிடையாது.இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருந்தா பாருங்க'
ஆமாம் உங்க பையன் என்ன பண்றான்?
ஊதாரியாய் சுற்றிண்டு இருக்கான்..ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும்.
பெண்களே இப்போது பதிவின் தலைப்பை இன்னொரு முறை படியுங்கள்.
3 comments:
/// ஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது நீங்கள் தான் ///
talaipou nalairoukou
//kanchana Radhakrishnan has left a new comment on your post "எப்போதான் நிறுத்துவானுங்களோ.......!":
pl.visit my following page
http://tvrk.blogspot.com/2008/03/blog-post_12.html //
இராதாகிருஷ்ணன் ஐயா,
இந்த பதிவை படித்துக் கொண்டிருக்கும் போது உங்களுடைய பின்னூட்டம் வந்தது. என்ன ஒரு ஒற்றுமையான நிகழ்வு !!!
:)
//ஆமாம் உங்க பையன் என்ன பண்றான்?
ஊதாரியாய் சுற்றிண்டு இருக்கான்..ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும்.
//
இராதா கிருஷ்ணன் ஐயா,
நீங்கள் எழுதி இருப்பது உண்மையிலேயே நடப்பது தான், தன்னால் திருத்த முடியாத மகனை இன்னொரு பெண் வந்து திருத்துவாள் என்று நினைக்கிறார்கள், குறிப்பாக ஊதாரிகளின் தாய்மார்கள் தான் அவ்வாறு நினைப்பது, அப்படியே திருமணம் முடித்து வந்தாலும் அந்த பெண்ணை குடும்பமே சேர்ந்து டார்சர் செய்யும். கோபம் அடையும் பெண்ணாக இருந்தால் கொளுத்தியே விட்டுவிடுவாங்க. ஊதாரி என்று தெரிந்தால் பெண்கள் அத்தகைய ஆணை திருமணம் செய்ய முன்வரவே கூடாது. எல்லாம் தெரிஞ்சு தானே கட்டிக் கொண்டாய், வழியில்லாமல் தானே வாக்கப்பட்டாய் என்றெல்லாம் மன அளவிலும் காயப்படுத்துவார்கள்.
:(
Post a Comment