Sunday, April 6, 2008

ஒகேனக்கல் விவகாரம் ஒரு சிறு அலசல்

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு-கலைஞர்
தமிழ் திரை உலகமே வீறுகொண்டு எழுந்தது.மாபெரும் உண்ணாவிரதம்.
பெங்களூரு தமிழ் பட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
தமிழ்நாட்டு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
வக்கீல்கள் போராட்டம். கன்னடர் நடத்தும் உணவு விடுதிகள் இவ்வளவு நாட்கள் சாப்பாடு போட்டதை மறந்து
அடித்து நொறுக்கப்பட்டன.
முளையிலேயே கிள்ளிவிடவேண்டும் ரஜினி பேச்சு.
ராஜ்குமாரை வீரப்பன் பிடித்து வைத்திருந்த போது உங்கள் கண்ணீர் துடைத்த கலைஞருக்கு தண்ணீர் இல்லையா?வாலி பேச்சு.
இப்படி இந்த பதிவு மூலம் எழுதிக்கொண்டே போகலாம்.
கடைசியில் என்ன நடந்தது?
வழக்கம்போல் தமிழன் வாய் மூடி மௌனியானான்.
கர்நாடகாவில் மீண்டும் நுழைந்த கிருஷ்ணாவிற்கு முதல் வெற்றி.
கலைஞரே!! தமிழனின் பொறுமை எல்லைக்குள்தான் இருக்கிறது என எண்ணி விட்டீர்களா?
தேர்தல் முடிந்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சுமூக தீர்வு ஏற்படும் என எண்ணுகிறீர்களா?
திடீர் என மனம் மாறியதற்கு காங்கிரஸ் கொடுத்த பிரஷரா?
தமிழனை வெட்கி தலை குனிய வைத்து விட்டீர்களே!!

2 comments:

ezhil arasu said...

உங்கள் உண்மையான தமிழ் உணர்வு உங்கள் பதிவில் தெளிவாக தெரிகிறது.இந்த கதையின் (ஆர்ப்பாட்டம்,,உண்ணாவிரதம்,கடைஅடைப்பு,மறியல்,வீரம் கொப்பளிக்கும் வசனங்கள்---கடைசியில் வெள்ளை கொடியுடன் சமாதானம்)முடிவு நாளை(??????) தெரியவரும் போது ............

Kanchana Radhakrishnan said...

நன்றி.