விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என சட்டசபையில் நேற்று கலைஞர் கூறினார்.
பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துக்களை பெரியார்,அண்ணா கருத்துக்களை பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர்.அப்படிப்பட்டவரிடம் நாங்கள் ஏன் விரோதம் பாராட்ட வேண்டும்?விவேகானந்தர்,மூட நம்பிக்கை,ஜாதி வெறியை சாய்த்தவர்.மத வெறிக்கு ஆளாகாதவர்.அவர் இறைச்சி உணவு சாப்பிடுபவர்..புகை பிடிப்பவர்..ஆனால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்றும்,மனம் சுத்தமாக இருந்தால் போதும் என சீர்த்திருத்த நோக்கங்களுடன்
செயல் பட்டவர்(?!)(அன்புமணி கவனிக்க)அப்படிப்பட்டவர் பெயரில் உள்ள மண்டபத்தை இடிப்போமா? என்றார்.ஆனால், நமக்கு ஒரு சிறு சந்தேகம்.. நீங்கள் சொல்லும் அய்யன் திருவள்ளூவர் புலால் உண்பவரிடம் அருளுடைமை
இருக்காது என்கிறாரே..அவர் சீர்திருத்த வாதி இல்லையோ?
1 comment:
இறைச்சி உண்பவன் அரக்கன் என பொய் பிரச்சாரம் பண்ணிய காலம் உண்டு. அதை மனதில் கொண்டே சீர்திருத்தம் என்ற வார்த்தையை கலைஞர் பயன்படுத்தி இருக்கிறார். இறைச்சி உண்பதற்கும் மனசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விவேகானந்தர் கூறியதை எடுத்து காட்டியுள்ளார். அதை வேறு அர்த்தத்தில் எடுத்து கொள்ள வேண்டாம்.
Post a Comment