Thursday, June 26, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி தன் மனைவிக் கூப்பிட்டு உடனே கடைக்குப் போய் 6 டம்ளர் வாங்கிவரச் சொன்னார்
மனைவி எதற்கு என்று கேட்க 'டாக்டர் தினமும் என்னை 10டம்ளர் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருக்கார்.
நம்ம வீட்ல 4 டம்ளர் தானே இருக்கு" என்றார்.

2.அண்ணாசாமி-(டாக்டரிடம்)எனக்கு இந்த ஜுரம் எப்படி வந்தது.
டாக்டர்-கொசுவாலேதான்.இந்தாங்க ..கொசு கடிக்காம இருக்க இந்த கிரீமை தடவுங்க
அண்ணாசாமி-அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவா பிடிச்சு இந்த கிரீமை தடவ முடியும்?

3.அமெரிக்க அதிபர் புஷ் பில் லேடனைப் பிடிச்சா 10 லட்சம் பரிசுன்னு அறிவித்தார்.
அண்ணாசாமி உடனே புஷ்ஷை தேடிப்போனார் 'எனக்கு 10லட்சம் தாருங்கள் என்றார்.புஷ்
எதற்கு எனக் கேட்க அண்ணாசாமி'எனக்கு பில் லேடன் ஐ பிடிச்சிருக்கு'என்றார்.

4.அண்ணாசாமி தசாவதாரம் பார்க்க தியேட்டருக்குப் போனார்.டிக்கெட் வாங்கினார்.திரும்ப வந்து
டிக்கெட் வாங்கினார்.கௌண்டர் கிளார்க் 'நீங்க தானே முன்னாலே வாங்கினீங்க என்றார்.
ஆமாம்..ஆனால் உள்ளே நுழையும் போது ஒருத்தன் அந்த டிக்கட்டை வாங்கி பாதியா கிழுச்சிட்டானே என்றார்.

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்.

Monday, June 23, 2008

வாய் விட்டு சிரியுங்க - 15

1.உன்னை நம்பி வநதவனை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தது?
நம்பி வந்தவனைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவனை என்ன செய்ய முடியும்.

2.நம்ம தலைவரை நான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டது தப்பாப் போச்சு
ஏன்? என்ன ஆச்சு
என்னய்யா ஏதோ நூல் வெளியீடுன்னு சொல்லிட்டு கையிலே புத்தகம் ஒன்னைக் கொடுத்து
வெளியிடச் சொல்றியேன்னு கோபப்பட்டார்

3.தயாரிப்பாளர்-(கவர்ச்சி நடிகையிடம்)வயதான கிராமத்து கிழவியை மையமா வைச்சு ஒரு படம் எடுக்கிறோம்
யாருக்கும் எந்த மேக்கப்பும் கிடையாது..நீங்க நடிச்சா தத்ரூபமாயிருக்கும்.

4.உங்க ஆஃபீசிலே வேலை செய்யற சாஃப்ட்வேர் எஞ்சினீயர் தங்கம் உண்மையிலேயே பத்தரை மாற்று தங்கம் னு
எப்படி சொல்றே
உரசி பார்த்துட்டேனே

5. இன்னயிலேயிருந்து நம்ம கம்பனிலே உங்களை அப்பாயிண்ட் பண்றேன்..உங்களுக்கு எதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க..
நான் VRS ல போகமுடியுமா...சார்

6.உன்னோட நண்பன் அண்டப்புளுகு ன்னு எப்படி சொல்ற
ஹாஸ்பிடல்லே ஆபரேஷன் தியேட்டர்ல புரஜக்டர் ஆபரேட்டராய் இருக்கேன் னு சொல்றான்

Sunday, June 22, 2008

வாய் விட்டு சிரியுங்க - 14

1.நம்ப தலைவரோட வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது
பழக்க தோஷத்திலே வேட்பு மனுவுக்கு பதிலாக முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துட்டாராம்.

2.வேலைக்காரி- அம்மா..வர..வர..உம் புருஷன் செய்ய்யறது நல்லா இல்லை ..சொல்லிட்டேன்
பெண்-(பதட்டத்துடன்) அப்படி என்ன செஞ்சார்
வேலைக்காரி- இன்னிக்கு சாம்பார்லே உப்போ காரமோ இல்லை

3.நண்பன்-(தன் நண்பனிடம்) கடன் கேட்டா இல்லைன்னு சொல்லிட்டே..என்னைப்பற்றி இப்போ
உனக்குத் தெரியாது..நீ accident ஆகி hospital ல இருக்கும்போதுதான் உயிர் காப்பான் தோழன்னு
என்னைப் புரிஞ்சுப்ப...

4.போன வாரம் செத்தது..நீயா..இல்ல உன் அண்ணனா?
ம்...நீ அண்ணன்னு சொன்னது என்னையா இல்ல என் தம்பியையா?
???!!!!

5.அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்?
மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம்
கொடுத்துட்டு போறான்.

6.என்னை யாராவது முட்டாள்..மடையன்னு திட்டினா..நீ தாண்டா அதுன்னு மனசுலே நினைச்சுக்கிட்டு 'வரட்டுமா'
அப்பிடின்னு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்
அப்போ நான் வரட்டுமா...
???!!!!

Thursday, June 19, 2008

-கக்கன்-

கக்கன்.தமிழக அமைச்சராய் இருந்தவர் காங்கிரஸ் ஆட்சியில்.
அமைச்சராய் இருந்தும்,தனக்கெனவோ, தன் மனைவிக்கென்றோ,மகன்களுக்காகவோ
எதையும் சேர்க்காதவர்.கடைசிவரை எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.
ஒருசமயம்..நான்..Ice House பஸ் நிறுத்தத்தில் இருந்து31A பஸ்ஸில் பாரிஸ் செல்ல ஏறினேன்.
உட்கார இடமில்லை.நின்றுக்கொண்டிருந்தேன்.என் பின்னால் நின்றுந்த ஒருவர் 'தம்பி..கொஞ்சம்
இடம் விடுங்க..அடுத்த ஸ்டாப்பிங்கில் நான் இறங்கணும் என்றார்.சற்றே இடங்கொடுக்க நகன்ற நான்..
அந்த பெரியவரை ஏறிட்டேன்.என்ன ஆச்சர்யம்..கக்கன் அவர்கள்தான் அது.
நான் கண்ட உண்மை நிகழ்ச்சி இது. உடல்நலக்குறைவின்போதும் பஸ்சில் சென்ற மஹாமனிதன் இவர்.
எப்போதும் போல இப்படிப்பட்டவர்களை மறப்பதுதானே நம் வழக்கம்.
இன்று இந்ந நிகழ்ச்சி என் ஞாபகத்துக்கு வருகிறது ....அவர் எங்கே?
எம்.எல்.ஏ.க்களுக்கு வீடு கட்ட நிலம் வேண்டும்,சம்பள்த்தை உயர்த்தவேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கைகள்
வைக்கும் இன்றைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எங்கே?
கக்கன் போன்றவர்கள் இன்று எங்கே? கஹா கயே வோ லோக்? வேர் ஆர் தே? எங்கே போனார்கள் அவர்கள்?

வாய் விட்டு சிரியுங்கள் - 13

 


1.ஆசிரியர்- திரவ பொருளுக்கு ஒரு உதாரணம் சொல்
மாணவன்- இருட்டு சார்...இராத்திரியிலே கரண்ட் கட்டாச்சுன்னா அடுத்த நாள் பேப்பர்ல'ஊரே இருளில் மூழ்கியது'
என்று போடறாங்களே!!

2.நான் ஒரு திரில்லான கதை எழுதி இருக்கேன்..ஆனா அதை முடிக்கத்தான் முடியலை
ஏன்?
குற்றவாளி யார்னு என்னாலே கூட கண்டுபிடிக்க முடியலை.

3.அதோ போறாரே..அவர் தீவிர காங்கிரஸ்காரர்னு நினைக்கிறேன்.
எப்படி சொல்ற
அவர் பொண்ணு சோனியா இருக்கு..கேட்டா என் தலைவி ஞாபகமா அப்பிடியே இருக்கட்டும்னு சொல்றார்

4.தமிழ் டீச்சரை லவ் பண்ணினது தப்பாப்போச்சு
ஏன்
லவ் லெட்டர் எழுதினா.. அதில் எழுத்துப் பிழை,சந்திப்பிழைன்னு ஏதாவது தப்பு கண்டுபிடிச்சுக்கொண்டே
இருக்கா..

5.அப்பா-நேற்று கணக்கு ஹோம் ஒர்க்கை என்னை போடச்சொன்னே..இன்னிக்கு நீயே போடறே
மகன்- யார் போட்டா என்ன..இரண்டு பேரும் தப்பாத்தானே போடப்போறோம்.

6.என் மனைவி ஒரு தேவதை
நீ அதிர்ஷ்டக்காரன்..என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கா

Wednesday, June 18, 2008

அதிமுக வுடன் கூட்டுப் பற்றி அன்புமணி

மத்திய அமைச்சர் அன்புமணி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்..திமுக உடன் உறவு முறிந்தது பற்றியும்,தமிழக அரசியல் நிலை
குறித்தும் சோனியாவிடம் விளக்கியதாகக் கூறினார்.கூட்டணிகட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என சோனியா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
திமுக உடன் மீண்டும் சமரசம் ஆகும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அதை திமுக விடம் கேளுங்கள் என்றார்.
அதிமுக உடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு'அரசியலில் எதுவும் நடக்கலாம்'என்றார்..மேலும் அதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது என்றார்.அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
இதனிடையே..பா.ம.க.வை பி.ஜே,பி.க்கு அழைத்து திருநாவுக்கரசு சந்துலே சிந்து பாடி இருக்கிறார்.

Tuesday, June 17, 2008

வாய் விட்டு சிரியுங்க - 12

பொண்ணு வேலைக்கும் போகணும்,நல்லாவும் சமைக்கத் தெரியணும்...இப்படி இரண்டும் சேர்ந்த பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்
தனித்தனியா கிடைச்சாலும் ..இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்.

2.என்ன சப்பாத்தி பண்ணியிருக்கே..முதல் சப்பாத்தி சாப்பிட்டேன்..இரண்டாவது மெல்லவே முடியலை..
அது சப்பாத்தி இல்ல...பேப்பர் பிளேட்..அதிலேதான் சப்பாத்தியை போட்டுக் கொடுத்தேன்

3.உனக்கு பின்னாலே சீட்ல வேலை செய்யறவர் பின்னழகை ரசிப்பார்னு சொல்றியே..நீ ஒண்ணும் சொல்ல மாட்டியா?
அவர் குண்டூசியின் அழகை ரசிப்பதை தடுக்க நான் யார்?

4.என்ன டாக்டர்..வலது கால்லே ஆபரேஷன் பண்றதுக்கு பதிலா..இடது கால்லே பண்ணிட்டீங்களே
அப்படியா? சரி..என் ஃபீஸ் ல 50% டிஸ்கவுண்ட் பண்ணிடறேன்.

5.நம்ம பையன் 50 பைசா காசை முழுங்கிட்டான்.டாக்டர் கிட்ட உடனே போகணும்
சரி..டாக்டர் கிட்ட 50 பைசான்னு சொல்லாதே..நம்மை கேவலமா நினைப்பார்.5 ரூபாய் முழுங்கிட்டான்னு சொல்லு.

6.அம்மா- (மகனிடம்) நீ என் கைப்பையிலிருந்து காசு திருடினதை அப்பா கிட்ட சொல்லப் போறேன்
மகன்- சொல்லேன்.நானும் அப்பா பாக்கெட்டிலிருந்து நீ பணம் எடுத்ததை அப்பா கிட்ட சொல்றேன்.

Sunday, June 15, 2008

வாய் விட்டு சிரியுங்க - 11

தயாரிப்பாளர்-(இயக்குநரிடம்)நம்ம படத்திலே கிளைமேக்ஸ் எல்லோரும் நம்பும்படி இருக்கணும்
இயக்குநர்- வில்லன் கார்ல தப்பி ஓடறான்..ஹீரோ ஒரு ரோடு ரோல்லர் ல போய் அவனைப் பிடித்து விடுகிறான்.

2.என் முதலாளி சரியான நன்றி கெட்ட ஜன்மம்..எதெற்கெடுத்தாலும் வள் வள்னு விழறார்
வள் வள்னு விழறவர் எப்படி நன்றி கெட்ட ஜன்மமாய் இருப்பார்.

3.சிறுவன்(வீட்டுக்குவருபவரைப்பார்த்துவிட்டு) அப்பா..இந்த மாமாவிற்கு இரட்டை நாக்குன்னு சொன்னே ஆனா
ஒன்னுதான் இருக்கு

4.நகைச்சுவை எழுத்தாளராக கொடி கட்டி பறந்தீர்கள்..இப்போல்லாம்..நீங்க ஏன் நகைச்சுவை கதை எழுதறதில்லை?
இப்போ எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு

5.டாக்டர்..உங்ககிட்ட வர்ற பேஷண்ட்ஸ் குறைவுதான்..அதுக்காக வர்ற பேஷண்ட்ஸ் எல்லாம்..தன்கூட இன்னொரு
பேஷண்டை கூட்டிக்கிட்டு வரணும்னா எப்படி?

தந்தையர் தினம்

மனிதனாக பிறந்த அனைவரும் தனது தாய்,தந்தையருக்கு நன்றி உள்ளவராக இருக்க வேண்டும்.
நம் கடைமைகளை செய்ய வேண்டும்."அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" அவர்கள் உயிருடன் இருக்கும்
காலத்தில்..அவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொண்டு ..நம்மால் இயன்ற வசதிகளை செய்து தர வேண்டும்.
அவர்கள் நமக்காக செய்துள்ள தியாகங்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை..அவர்கள் மனம் கோணாமல்..
அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.
நமக்கு எல்லா நாட்களுமே அன்னையர் தினம்
எல்லா நாட்களுமே தந்தையர் தினம்
ஏனெனில் நாம் வாழும் நாட்கள் எல்லாமே அவர்கள் கொடுத்த நாட்கள்

Tuesday, June 10, 2008

மீசைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்

பரங்கியனுக்கு அடிப்பணியா
வீரபாண்டியன் மீசை
கப்பலோட்டிய தமிழனின்
தொங்கு மீசை
மீசையிலும் வெள்ளையனை
அணுகவிடா பாரதி மீசை
அவரது தாசனின்
அடர்த்தி மீசை
பகுத்தறிவு பகலவன்
பெரியாரின் தாடிமீசை
கர்ம வீரன் காமராஜின்
களையான மீசை
திருத்தணி மீட்ட
மாபொசியின்
முறுக்கு மீசை
டிகேசியின் இலக்கிய மீசை
கலைஞரின் தமிழ் மீசை
கருமீசை தெரியா
வைரமுத்துவின் மீசை
வாலியின் தாகூர் மீசைதாடி
தமிழனின் அழகு மீசை
பலவிதம் -அவற்றை ஒப்பிடாதீர்
அறிவிலிகளின்
கரப்பு மீசையுடன்

Sunday, June 8, 2008

நானும்..நடிகவேள் ராதாவும்..ரத்தக்கண்ணீரும்

M.G.R.,சுடப்பட்டதும்..ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகவும் வழக்கு நடந்து ..ராதாவும் தண்டிக்கப்பட்டு
சிறையிலிருந்து வெளிவந்த நேரம்.,ராதா அண்ணாமலைபுரத்தில் அவரது இல்லத்தில் தங்கியிருநதார்.மூட்டுவலியால்
அவதிப்பட்டு வந்தார்.
அந்த சமயத்தில்..எனது சபாவில் அவரது ரத்தக்கண்ணீர் நாடகம் போட்டால் என்ன..என்ற எண்ணம் தோன்ற
அவரை அவரது இல்லத்தில் சந்தித்து தேதி கேட்டேன்.என்னைப்பற்றி விசாரித்தார்.நான் state bankல் வேலை
செய்வதாகவும்..அம்பத்தூரில் 2 வருடங்களாக சபா நடத்திவருவதாயும் கூறினேன்.அவர் உடனே'தம்பி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்களே..என்று சொல்லிவிட்டு 'நீங்க என்ன ஜாதி" என்றார்.
எனக்கோ..இப்படி "பட்" டென்று கேட்கிறாரே..என ஆச்சர்யம்.உடன் சொன்னேன்.சரி என்றவர்..நாடகத்திற்கான
தேதியும் கொடுத்தார்.
ஒரு பெரிய கண்ணை கலரில் வரைந்து..அதிலிருந்து ரத்த நிறத்தில் கண்ணீர்த்துளிகள் வருவதுபோல..பிரமாதமாக
சுவரொட்டி போட்டு அம்பத்தூர் தெருக்களில் ஒட்டினேன்.
நாடகத்தன்று..காலையிலிருந்தே என் வீட்டிற்கு மக்கள் டிக்கட் வாங்க படையெடுத்தனர்.
மாலை...நாடகம் ஆரம்பிக்கும் நேரம் ராதா என்னைகூப்பிட்டு..இடைவேளையில் எனக்கு ஒரு மாலை போடு என்றார்.
நானும் சரி என தலையாட்டிவிட்டு....இவர் மரியாதையை கேட்டு வாங்குகிறாரே என எண்ணிக்கோண்டேன்.
இடைவேளையில்..சபா சார்பில் மாலை அணிவித்தேன்.பின் அவர் பேசினார்..
'M.G.R.,பற்றி குறிப்பிடும்போது மக்கள் கை தட்டினர்.சிவாஜி பற்றி குறிப்பிடும்போது வாளா யிருந்தனர்.ஏன்..இவருக்கு கை தட்டக்கூடாதா..என்றார்..பிறகு என்னைப்பற்றிக் குறிப்பிட்டார்.'இந்த பையன்.(என் ஜாதியை குறிப்பிட்டு) இந்த ஜாதி..ஆனாலும் தைர்யமா என் நாடகம் போடறான்..என்னை தெரிஞ்சவங்கக்கூட இப்போ
என்னைப்பார்க்கிறதை தவிர்க்கும்பொது ........ர ஜாதிப்பையன் தைர்யமா வந்து நாடகம் போடறியான்னு கேட்டான்.
அவனை பாராட்டறேன்னு சொல்லிவிட்டு தன் கழுத்தில் இருந்த நான் போட்ட மாலையை கழட்டி எனக்கு அணிவித்தார்.
என்னைப்பாராட்டத்தான்..இடைவேளையில் மாலை போட சொல்லியிருக்கிறார்.அவரை தப்பாக நினைத்து விட்டோமே என எண்ணினேன்.
பின்..பல சபாக்களில் நாடகம் தொடர்ந்தது.ஆனாலும் சிறையிலிருந்து வந்ததும் முதலில் போடப்பட்டது எனக்குத்தான் என்ற இறுமாப்பு இன்றும் எனக்கு உண்டு.

Saturday, June 7, 2008

வாய் விட்டு சிரியுங்க - 10

சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.

Friday, June 6, 2008

வாய் விட்டு சிரியுங்க - 9

1.எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க
அப்படியா?
ஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதான் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க

2.அந்த படத்தயாரிப்பாளர் நீ கவிஞனே இல்லைன்னு என்னை அவமானப்படுத்திட்டார்
அப்படி என்னாச்ச்
நான் எழுதின கவிதையிலே ஒரு ஆங்கில வார்த்தைக் கூட இல்லையாம்...

3.வாஸ்து சாஸ்திரப்படி என் கணவர் பின்னால இருக்கிற ஜன்னலை முன்னாலே
வைக்க சொல்றார்
செஞ்சுட வேண்டியதுதானே
அவர் சொல்றது என் ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னலை.

4.ஆச்சர்யமா இருக்கே..உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமாச்சு
அது ஒண்ணுமில்ல டாக்டர்..நீங்க கொடுத்த மருந்து எதையும் நான் சாப்பிடலை.

5.நீங்க காபி,டீ எல்லாம் சாப்பிடக்கூடாது
வேறு என்ன சாப்பிடலாம்
எந்த எண்ணையும் கூடாது

6.படத்தோட கதை அங்கங்க தொய்யுதே
அது தொய்யாம சாஞ்சு பிடிக்க வேணும்னா கதாநாயகியா சாயாசிங்க போட்டுடலாம்.

Thursday, June 5, 2008

'சோ' வும்..அவரது கோபமும்

நான் அம்பத்தூரில் சபா நடத்திக் கொண்டிருந்த நேரம்.சமீபத்தில் 1974ல்(டோண்டு சார்..தாக்கம்)எனது சபாவின்
ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு..மேஜர் சுந்தரராஜனின் 'டைகர் தாத்தாச்சாரி'நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா ஹாலிலும்,'சோ'வின் 'யாருக்கும் வெட்கமில்லை' அம்பத்தூரிலும்(சென்னையிலிருந்து அம்பத்தூர்16km தூரம்)ஏற்பாடு செய்திருந்தேன்.முதல் நாள் நாடகம் முடிந்தது.அடுத்த நாள் 'சோ'நாடகம்.
6 மணி அளவில் அம்பத்தூர் வந்த "சோ' வை வரவேற்றேன்.காரிலிருந்து இறங்கிய அவர் என்னைப் பார்த்ததும்
முகத்தை திருப்பிக் கொண்டார்..சிறிது நேரம் கழித்து என்னைகூப்பிட்டு,கோபமாக"சோ உனக்கு கிள்ளுக்கீரையா?"
என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவரே தொடர்ந்தார்'மேஜர் நாடகம் சென்னையில்..என் நாடகம் இவ்வளவு
தொலைவில்"என்றார்.அப்போதுதான் அவர் கோபத்துக்கான காரணம் தெரிந்தது.நான் சொன்னேன்'மேஜருக்கு இங்கு
gate collection இருக்காது..ஆனால் உங்களுக்கு இருக்கும்.அந்த collection ஐ வைத்து என் சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.அதனால்தான்'.அவர் பின் என்னிடம் ஏதும் பேசவில்லை.
நாடகத்திற்கு நல்ல கூட்டம்..நல்ல வசூல்..
நாடகம் முடிந்ததும் என்னை கூப்பிட்டார்.."எவ்வளவு gate collection என்றார்.சொன்னேன்(3000 என்று ஞாபகம்.அது அந்த காலத்தில் பெரிய அமௌண்ட்)'
சென்னையில் போட்டிருந்தால்..இன்னும் அதிகம் இருக்கும்..என்றவர்..தன் நாடகக்குழு நிர்வாகி திரு.ரங்காச்சாரி யை கூப்பிட்டு நம் city rate1000 வாங்கிக்கொள் போதும் என்றார்.(அம்பத்தூருக்கு குழு வந்த செலவே அதிகமிருக்கும்)
சோ விற்கு திடீரென கோபம் வரும்..வந்த வேகத்தில் மறையும் என்று ரங்காச்சாரி என்னிடம் கூறினார்.அவர் சொல்ல மறந்தது சோ பெருந்தன்மையானவர் என்பதை.

Wednesday, June 4, 2008

வாய் விட்டு சிரியுங்க - 8

1.என் மூளையை இன்ஷ்யூர் பண்ணலாம்னு இருக்கேன்
இல்லாததையெல்லாம் இன்ஷ்யூர் பண்ண மாட்டாங்களே

2.அதோ போறாரே அவர் கைலே ஆவி யை வைச்சிருக்கார்
அப்படியா? ஆச்சர்யமாயிருக்கே
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு..நான் சொல்ற ஆவி ஆனந்த விகடன் புத்தகம்

3.பீரோலே நான் பத்திரமா வைச்சிருந்த என் பேன்ட்,ஷர்ட் எல்லாம் காணோம்
நீங்க பத்திரமா வைச்சதெல்லாம் பாத்திரமா ஆயிடுச்சு

4.என்னை பொண்ணு பார்க்கவந்த அன்னிக்கே என் கணவர் கிரௌண்ட் வாங்கி இருந்தார்
எந்த ஏரியாவிலே?
அவர் தலையில்தான்.

5.என் கனவில் அவங்க கல்யணத்துக்கு முன்னாலே ஜோதிகா வந்துகிட்டு இருந்தாங்க.
இப்போ யார் வராங்க
அதற்கான தேர்வு நடத்திகிட்டு இருக்கேன்

6.அந்த எழுத்தாளரின் படைப்புகள் எல்லாம்..அற்புதமாய் இருக்கும்
நீஎதையாவது படிச்சு இருக்கியா?
அதுக்கு முன்னால அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு

Tuesday, June 3, 2008

அதிபுத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்

அண்ணாசாமிக்கு திடீரென ஒரு சந்தேகம்..நம் நாட்டு நிதித்துறைப் பற்றி.
அங்கு யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்கிறார்.
நிதி அமைச்சரைப் பார்க்கப் போகிறாராம்.
அவர் சந்தேகம் என்ன?
விவசாயிகளுக்காக 71000 கோடி கடன் ரத்து என்று சொல்கிறார்கள்.
நம் நாட்டில் மொத்த ஜனத்தொகை 112கோடி.
அவ்வளவு பேரும் விவசாயிகள் இல்லை.அவர்கள் விவசாயிகள்
என வைத்துக்கொண்டாலும்...அனைவருக்கும் ஒரு கோடி கடன் என்றாலும்
மொத்தம் 112 கோடிதானே கடன் இருக்கும்.ஆனால் நிதியமைச்சகம்
71000 கோடி என்று சொல்கிறார்களே...எங்கேயோ ஏதோ ஊழல் நடக்கிறதாம்..
நிதியமைச்சர் உடனே விசாரிக்க வேண்டுமாம்.

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

1.அதி புத்திசாலி அண்ணாசாமி,ஒரு சமயம் அமெரிக்கா போனார்.அங்கு ஒரு அமெரிக்கன் ஒரு இடத்தை அவரிடம்
தோண்டச் சொன்னான்.100 அடி தோண்டியதும் ஒரு சிறு wire கிடைத்தது.உடனே அமெரிக்கன் 100 வருஷம்
முன்னமே எங்களிடம் ஃபோன் இருந்தது.என்றான்.அந்த அமெரிக்கன் ஒரு முறை இந்தியா வந்தான்.அவனை
அண்ணாசாமி ஒரு இடத்தை தோண்டச்சொன்னார்.ஒன்றும் கிடைக்கவில்லை.உடனே'பார்த்தீரா..400 வருஷம்
முன்னரே எங்களிடம் wireless இருந்தது என்றார்.

2.ஒரு சமயம் அண்ணாசாமி வட இந்தியா சுற்றுலா சென்றார்.அவருடன் அவர் மனைவியும்,மகனும் சென்றனர்.
அண்ணாசாமிக்கு lower berth மனைவிக்கு middle berth மகனுக்கு upper berth கொடுத்திருந்தார்கள்.
ஒரு ஸ்டேஷனில் காபி சாப்பிட அவரும்.மகனும் இறங்கினர்.அச்சமயம் தமிழ் தெரியா வட இந்தியன் வண்டியில்
ஏறி upper berth தில் படுத்துவிட்டான்.ரயிலில் ஏறிய அண்ணாசாமி தன் மகனிடத்தில் வேறொருவன் படுத்திருந்ததைப் பார்த்தார்.உடனே tte ஐப் பார்த்து தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கூறினார்.'see sir..that man sleeping top of my wife is not giving birth to my child'

3.ஒரு ஆங்கிலேயர் கொடுத்த ஒரு partyக்கு அண்ணாசாமி தன் மனைவி,மகன்,மகளுடன் சென்றார்.அந்த
ஆங்கிலேயனுக்கு தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார்.
I annasaamy
she mywife
boy my kid
girl my kidney

4.ஒரு சமயம் அண்ணாசாமி லண்டன் சென்று திரும்பி வந்தார்.பின் மனைவியிடம்..நான் பார்க்க வெளிநாட்டுக்காரன்
மாதிரியா இருக்கிறேன்? என்றார்.
மனைவியோ 'இல்லயே" என்றாள்
பின் மகனைக் கூப்பிட்டு 'நான் பார்க்க வெளிநாட்டுக்காரன் மாதிரியா இருக்கிறேன்?' என்றார்.
அவனும் 'இல்லயே' என்றான்.
உடனே அண்ணாசமி'லண்டனில் எல்லாரும் பொய் சொல்கிறார்கள்.என்னைப்பார்த்து வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்கிறேன்னு பொய் சொல்றாங்க'என்றார்.

Monday, June 2, 2008

85 வயது இளைஞருக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழக முதல்வரின் 85ம் பிறந்த நாளான இன்று அவர் பல்லாண்டு நீடூழி வாழ இறைவனை(இயற்கையை?) வேண்டுவோம்.
இந்த இளைஞரின் இன்றைய நிகழ்ச்சியை பாருங்கள்.
காலை7 மணி - அண்ணா நினைவிடம்
7.15 -பெரியார் நினைவிடம்
8 மணிக்கு-கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்து பெறுதல்
(இதில் பல்வேறுஅரசியல் கட்சிகள் தலைவர்கள்,அரசு அதிகாரிகள்,திரைஉலக
பிரமுகர்கள் பலரும் வாழ்த்துவர்.)
9 மணிக்கு -அண்ணாஅறிவாலயம் -லட்ச்சக்கணக்காண தொண்டர்களை சந்திக்கிறார்
(இது 1 மணி வரை)
பின்னர் சி.ஐ.டி.காலனி வீட்டிற்கு செல்கிறார்
இரவு 7 மணிக்கு தீவுத்திடலில் பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடில் 3 இணை கமிஷனர்கள்,10துணைகமிஷனர்கள்,50 உதவி கமிஷனர்கள்
123 இன்ஸ்பெக்டர்கள்,182 சப் இன்ஸ்பெக்டர்கள்,1100போலீசார்,700 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
(உபரிச்செய்தி. நான் நீண்டநாள் வாழ ஆசைப்படக்காரணம்..இன்னும் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டிய து
பாக்கி இருக்கிறது என்று சொன்ன கலைஞர்'என் பிறந்தநாளில் யாசகம் கேட்கிறேன்..சேதுதிட்டத்தை நிறைவேற்றித்தாருங்கள்'என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.)

Sunday, June 1, 2008

வாய் விட்டு சிரியுங்க - 7

என் மாமனார் வீடு தரேன்னுட்டு என்னை ஏமாத்திட்டார்..
கல்யாணத்துக்கு முன்னாலே வீட்டோட மனைவியைத் தர்றதா சொன்னார்.
அப்புறம்தான் ஹௌஸ் ஒயிஃப்ங்கிறதை அப்படியே நேரடியா தமிழ்லே மொழி
பெயர்த்து சொல்லியிருக்கார்னு புரிஞ்சது

2.டாக்டர்- மக்கள் கிட்ட இப்ப எல்லாம் விழிப்புணர்ச்சி அதிகமாயிடுச்சு
நண்பர் - எப்படி சொல்றீங்க
டாக்டர்- தூக்கம் வரல்லேன்னு யாரும் இப்போ வர்ற்தில்லயே

3.காதலி- மழையே இல்லைன்னு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றியே ..ஏன்?
காதலன் -கழுதைக்கு கல்யாணம் பண்ணினா மழை வருமாமே

4.விட்டு விட்டு வயிறு வலிக்கிறதுன்னு டாக்டர் கிட்ட போனியே என்னாச்சு
இப்ப விடமா வலிக்கிறது

5.நடிகை-(நிருபரிடம்) எனக்கு இன்னும் 5 வருஷம் கல்யாணம் கிடையாது
நிருபர்-உங்க வீட்ல அடுத்த வாரம்..கல்யாணம் இருக்குன்னு சொன்னாங்களே
நடிகை-அது என் மகளோட கல்யாணம்

6.நம்ம டைபிஸ்ட் வீணா கல்யாணம் பண்ணிக்கப் போறாளாமே
வீணா அவளுக்கு எதுக்கு கல்யாணம்