மத்திய அமைச்சர் அன்புமணி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்..திமுக உடன் உறவு முறிந்தது பற்றியும்,தமிழக அரசியல் நிலை
குறித்தும் சோனியாவிடம் விளக்கியதாகக் கூறினார்.கூட்டணிகட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என சோனியா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
திமுக உடன் மீண்டும் சமரசம் ஆகும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அதை திமுக விடம் கேளுங்கள் என்றார்.
அதிமுக உடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு'அரசியலில் எதுவும் நடக்கலாம்'என்றார்..மேலும் அதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது என்றார்.அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
இதனிடையே..பா.ம.க.வை பி.ஜே,பி.க்கு அழைத்து திருநாவுக்கரசு சந்துலே சிந்து பாடி இருக்கிறார்.
2 comments:
arasiyalla ithellaam sakajamappa :)
வருகை புரிந்தமைக்கு நன்றி..விஜய்
ஒருமுறை..இது போன்ற சமயத்தில் ராமதாஸ் அவர்கள் சொன்ன ஒரு
விஷயம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
'கலைஞரிடம் போனால் கோமணத்தைகூட பிடுங்கிக்கொண்டு விட்டுவிடுவார்"
இப்போது எதை பிடுங்கிக் கொண்டார் என தெரியவில்லை
Post a Comment