Thursday, June 14, 2012

ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்த மாயாவதி





முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தான் முதல்வராக இருந்த போது தனது பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநில சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆளும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ரவிதாஸ் மல்ஹோத்ரா முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிரமாண்ட பங்களா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அபிஷேக் மிஸ்ரா கூறுகையில்,

மாயாவதி தான் முதல்வராக இருக்கையில் மால் அவென்யூவில் உள்ள பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார். அதிலும் எலக்ட்ரிக்கல் பணிக்கு மட்டும் ரூ.20.09 லட்சம் செலவு செய்துள்ளார். இது குறித்து இதுவரை எந்த புகாரும் வராததால் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்றார்.

5 ஏக்கரில் அமைந்துள்ள மாயாவதியின் பங்களாவை கட்ட அரசு கஜானாவில் இருந்து ரூ.86 கோடி எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

(தகவல் தட்ஸ்தமிழ்)

டிஸ்கி - இதைப் போய் பிரமாதமா சொல்றாங்க..60 கோடி ஃபோபர்ஸ் ஊழலுக்கு 200 கோடி செலவு செஞ்சு விசாரணைக் கமிஷன் அமைச்சவங்க நாங்க..


6 comments:

சிரிப்புசிங்காரம் said...

ரொம்ப பேசாதீங்கப்பா...அப்புறம் தலித்துக்கு எதிரா பேசுறதா கைது பண்ணுவங்கப்பா

Unknown said...

அர்பனுக்கு காலம் வந்த அர்த்த ராத்திரியில கொடபுடிப்பானாம்....

Unknown said...

அர்ப்பனுக்கு காலம் வந்த அர்த்தராத்திரியில குடைபிடிப்பானாம்.

Unknown said...

ஏழைகள் வாழும் நாடு மட்டுமல்ல நம் இந்தியா கோழைகள் அதிகம் வாழும் நாடு மாகும். எனவே இப்படிப்தான் இருக்கும் நண்பரே!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

ஏழைகள் வாழும் நாடு மட்டுமல்ல நம் இந்தியா கோழைகள் அதிகம் வாழும் நாடு மாகும். எனவே இப்படிப்தான் இருக்கும் நண்பரே!

புலவர் சா இராமாநுசம்

srinits78 said...

Vaazhga india