அம்மா கோட நாடு போனதும்..அமைச்சர்கள் 32 பேரை காணவில்லை.இவர்கள் எங்கு போய் இருப்பார்கள் என சரடு நாளிதழ் புலனாய்வுப் பிரிவு தேடுதலில் இறங்கியது.
அப்போது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து அவர்கள் தில்லியில் முகாம் இட்டுள்ளதாகத் தெரிகிறது.
சரடு நிருபரிடம் ஒரு அமைச்சர் அகப்பட அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.அந்த அமைச்சர் கூறியதிலிருந்து....
'புதுக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில்..எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் டிபாசிட் இழக்க வேண்டும் என விரும்பியதாகவும்..ஆனால் எதிர்த்த வேட்பாளர் டிபாசிட் பெற்றதால் அம்மாவிடம்..அங்கு முகாமிட்டிருந்த அனைத்து அமைச்சர்களும்..அர்ச்சனை பெற்றதாகவும் சொன்னார்.
இந்நிலையில் அம்மா ஊரில் இல்லாத நிலையில்..அம்மாவின் நன்மதிப்பைப் பெற 32 அமைச்சர்களும் தில்லியில் முகாமிட்டுள்ளதாகவும்..குடியரசுத் தேர்தலில் அம்மாவின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டிபாசிட் இழக்க வைத்து..அம்மாவிற்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அமைச்சர்கள் குழு அளிக்கப் போவதாகவும் கூறினார்.
அடடா...இவர்களின் கட்சியின் பற்று..தம்மை மெய்சிலிர்க்க வைத்ததாக சரடு நிருபர் தெரிவிக்கிறார்.
இதனிடையே கலைஞர் தான் ஆதரிக்கும் வேட்பாளர் தோற்றால்..அதற்கான காரணம் என்ன சொல்லலாம் என அறிய செயற்குழு கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விஜய்காந்தோ..தேர்தலை தான் புறக்கணிக்கக் காரணம்..சோனியா தன்னை திராணி இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் எனக் கூறாததே காரணம் என்றார்.
1 comment:
நல்ல கற்பனை, அமைச்சர்கள் செஞ்சாலும் செய்வாங்க.
Post a Comment