வலைப்பதிவர்களுக்கு ஒரு சங்கம் வேண்டும் என எண்ணிய முதல் பதிவர் கேபிள் ஆவார்.பின்னர் அவர் பல பிரபல பதிவர்களுடன் சேர்ந்து குழுமத்தை ஆரம்பித்தார்.கோவை, ஈரோடு,திருப்பூர் என அனைத்து ஊர்களிலிருந்தும் பல பதிவர்கள் வந்திருந்தனர்., டிஸ்கவரி பேலஸில் கூட்டம் நடந்தது.
ஆர்வமுள்ள பதிவர்கள் அனைவரும்...கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாய் நடந்தும்..சில பதிவர்களின் ஈகோ வால்...ஆரம்பித்த நிலையிலே சங்கம் நிலைகொண்டு மேலே நகரவில்லை.
பின்..இப்போதுதான் மீண்டும் புதியதாக பதிவர் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது.
அன்று தொடங்கிய சங்கத்தையும்..அன்றைய நிர்வாகிகளையும் ஆலோசித்து..அதன் தொடர்ச்சியாக இந்த மாநாடு நடத்தப் பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.ஏனெனில்..அன்று இச் சங்கத்தை வளர்க்க பல கனவு கண்டவர்கள் அன்று கூட்டத்திற்கு பொறுப்புவகித்த பல மூத்த பதிவர்கள்.
உடனே..நான் குறை கூறுவதாக எண்ண வேண்டாம்..
மாநாடு சிறப்புற அமைய என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை..
சென்ற ஆண்டு நான் மேடையேற்றிய 'கருப்பு ஆடுகள்' நாடகத்திற்காக எனக்கு சிறந்த ஆல்ரவுண்டர் என்னும் விருதை மைலாப்பூர் அகடெமி நாளை வழங்க இருக்கிறது.
தவிர்த்து மாலை ஏழு மணி அளவில்..எனது புதிய திரில்லர் நாடகம் 'மழையுதிர் காலம்' நாரத கான சபாவில் நடைபெறுகிறது.
இக்காரணங்களால் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என எண்ணுகிறேன்..
மீறி, நேரம் கிடைக்குமாயின்..வந்து தலை காட்டலாம் என்ற எண்ணமும் உள்ளது.
மீண்டும் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து வரும் அனைத்து பதிவர்களுக்கும்..என் வாழ்த்துகள்.
6 comments:
sir, இப்போது நடத்தப்படும் பதிவர் மாநாடும் கலந்தாலோசித்தே நடத்தப்படுகிறது. நானும் சில கூட்டங்களிலும், தொடர்ந்து சினிமா வேலைகளால் தொலைபேசியிலும், அவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். எல்லோருடய ஆலோசனைகளையும் கேட்டறிந்தே செயல்படுகிறார்கள். நிச்சயம் இந்த பதிவர் சந்திப்பு மாநாடு சிறப்பான முறையில் நடைபெறும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அவர்களுக்கு என்னாலான உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் ஆசி என்றும் இருக்கும் என்கிற நம்பிக்கையோடு.
\\சென்ற ஆண்டு நான் மேடையேற்றிய 'கருப்பு ஆடுகள்' நாடகத்திற்காக எனக்கு சிறந்த ஆல்ரவுண்டர் என்னும் விருதை மைலாப்பூர் அகடெமி நாளை வழங்க இருக்கிறது.
தவிர்த்து மாலை ஏழு மணி அளவில்..எனது புதிய திரில்லர் நாடகம் 'மழையுதிர் காலம்' நாரத கான சபாவில் நடைபெறுகிறது.//
வாழ்த்துகள் ஸார்.
கேபிள் சொன்னதை வழிமொழிகிறேன்;
TVR ஐயா மாலை தான் உங்கள் விழா. பகலில் இந்த விழாவுக்கு நீங்கள் வரலாம் முயலுங்கள்
டீ.வீ.ஆர்.சார்,
//வலைப்பதிவர்களுக்கு ஒரு சங்கம் வேண்டும் என எண்ணிய முதல் பதிவர் கேபிள் ஆவார்.பின்னர் அவர் பல பிரபல பதிவர்களுடன் சேர்ந்து குழுமத்தை ஆரம்பித்தார்.கோவை, ஈரோடு,திருப்பூர் என அனைத்து ஊர்களிலிருந்தும் பல பதிவர்கள் வந்திருந்தனர்., டிஸ்கவரி பேலஸில் கூட்டம் நடந்தது.
ஆர்வமுள்ள பதிவர்கள் அனைவரும்...கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாய் நடந்தும்..சில பதிவர்களின் ஈகோ வால்...ஆரம்பித்த நிலையிலே சங்கம் நிலைகொண்டு மேலே நகரவில்லை.
பின்..இப்போதுதான் மீண்டும் புதியதாக பதிவர் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது.//
வரலாறு முக்கியம் சார், தெரிந்துக்கொள்ள இங்கே பார்க்கவும்,
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Total recall:2007 ஆகஸ்ட்-5 தமிழ்ப்பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை.
இப்போது மீண்டும் நடக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்,வெற்றிப்பெற வாழ்ந்த்துக்கள்.
தாங்கள் அவசியம் இருக்கவேண்டிய இரண்டு
விழாக்களும் சிறப்பாக நடைபெற
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தாங்கள் கலந்துகொள்ளமுடியாமை குறித்து
தாங்கள் வருத்தம் கொள்வதே
பதிவர் சந்திப்பில் கொண்டுள்ள
ஆவலைக் குறிக்கிறது
பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துகள்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment