Saturday, February 16, 2013

குழம்பிய நீரில் மீன் பிடிக்கும் ஊடகங்கள்...




ஊடகங்களின் பணி மக்களுக்கு செய்திகளை சரியாகத் தருவதுதான்.

சக்தி வாய்ந்த இந்த ஊடகங்களால், நாட்டில் அரசியல் மாற்றங்கள் மட்டுமன்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியும் ஏற்பட்ட காலங்கள் உண்டு.இப்படிப்பட்ட தலையாய, பொறுப்பான தகுதி ஊடகங்களுக்கு இருந்து வந்தது.

ஆம், ,வந்தது...ஏனெனில்..

இப்போதெல்லாம் ஊடகங்கள் நிலைப்பாடு அது அல்ல..

என்ன சொல்லி, என்ன எழுதி..தங்களின் சர்குலேஷனை அதிகமாக்கலாம் என்பதே..

அப்படிப்பட்ட நிலையில்...அதுவரை ஊறுகாய் போல சினிமா செய்திகளை வெளியிட்டு வந்த பத்திரிகைகளில்..சினிமா முழுதுமாக ஆக்கரமித்துக் கொண்டது.சினிமா பிரபலங்களின்  செயல்கள், வாழ்க்கைகளை ,ஏதோ..நாட்டிற்கு உழைத்த தலைவர்களின் வாழ்க்கையைப் போல வெளியிடத்   தொடங்கின.மக்களும் விரும்பிப் படிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில்...இல்லாததை இருப்பது போல எழுதினால் என்ன . என் ற எண்ணம் தோன்ற, 'இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம்' என்ற பெயரில்..மனதில் தோன்றுவதை, மோட்டுவலையைப் பார்த்து..அந்தந்த வாரத்திற்கு மக்க ளின் ஆவலைத் தூண்டும் விதமாக எழுதத் தொடங்க ஆரம்பித்தனர்.

இதற்குப் பிறகே..இதுவரை உண்மையாய் இந்த பத்திரிகைகள், பத்திரிகை சுதந்திரத்தை தவறாக பயன் படுத்த ஆரம்பித்தனர்.அடுத்த கட்டம், தலைவர்களின், தனிப்பட்ட வாழ்க்கையையும்..எது சொன்னால்,அவர்கள் கிளர்ந்து எழுந்து, எதிர் அறிக்கை கொடுப்பார்கள்..அதைவைத்து, தங்கள் பத்திரிகையை வளர்க்கலாம்..என வணிக ரீதியாக யோசிக்க ஆரம்பித்தனர்.

விளைவு,,

இன்று ஆங்காங்கு இன்று கூக்குரல் ஒலிக்கிறதே...அதுதான்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்..

'நீதிமன்றம், வழக்கு இது எல்லாம் சாதிக்க முடியாததை
..சாதிக்கக் கூடிய சக்தி ஒன்றுக்கு மட்டுமே உண்டு

அது, "மக்கள் சக்தி:"

ஆம்..

மக்கள், இனியேனும்..மஞ்சள் பத்திரிகையாக தரத்தில் வரும் பத்திரிகைகளை புறக்கணிக்க வேண்டும்.

அது மட்டுமே..இவர்களுக்கு புத்தி புகட்ட ஒரே வழி.


2 comments:

”தளிர் சுரேஷ்” said...

ஒன்று சொன்னாலும் நன்றாக சொன்னீர்கள்! இத்தகைய இதழ்களை புறக்கணிப்பது நல்லதே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி S suresh