Wednesday, February 6, 2013

அமரர் டோண்டு ராகவன்..
மூத்த வலைப்பதிவர் டோண்டு சார்...அமரரான செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

ஒருவர் மறைவிற்குப் பின்னர் தான்...அவரைப் பற்றி அதிகம் பேசப்படும்..

..டோண்டு வும்..உயிருடன் இருந்தவரை..'சாதியத்தை' விடவில்லை.இதனால் கடைசிவரை பலமுறை சர்ச்சைப் பதிவுகள், கண்டனங்கள் ஆகியவற்றை அவர் அதிகம் சந்திக்க நேர்ந்தது.

முதன் முதல் அவர் என்னிடம் தொலைபேசிய போது..நீங்கள் எந்த காலேஜ்..எந்த வருடம் டிகிரி முடித்தீர்கள்? என்றார்.

நான் சொன்னேன், 'சார்..நேரிடையாகவே எனக்கு என்ன வயது என கேட்டுவிடுங்களேன்..' என்றதும்..

;நான் எதற்காகக் கேட்டேன் என புரிந்துக்கொண்டீர்களே!' என பதில் சொன்னதுடன் அல்லாது..நான் என்ன சாதி என்பதை அறிய , அடுத்த வார்த்தைகளைச் சொன்னார்..'இதுதான் நம்ம சாதிக்கான சூட்சமம்' என.

நான் விடாக்கண்டனாக அவருக்குக் கடைசிவரை என் சாதியத்தை வெளிப்படுத்தவில்லை.பின் கோவியாரின் ஒரு பதிவின் மூலம் என்னைப் பற்றி அறிந்தவர்..'நீங்கள் இப்படியெல்லாம் எழுதக் கூடாது' என என் சிலப் பதிவுகள பற்றி வாதிட்டார்.

எனது, 'மாண்புமிகு நந்திவர்மன்" நாடகத்தைப் பார்த்து, என்னைப் பாராட்டியதுடன்..தனிப்பதிவு ஒன்றே இட்டார்.

நான் வலைப்பதிவு பக்கம் வரக்காரணம் மூவர்..என நான் அடிக்கடி சொல்வதுண்டு.

டோண்டு ராகவன், கோவியார், தமிழச்சி ஆகியோர் அவர்கள்.

எனது சொல்லக் கொதிக்குது நெஞ்சம் நாடகத்தை ஃபிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்க்க வேண்டிய சூழல் உருவான போது, டோண்டுவைத் தான் அணுகினேன்.அவரும்..எனக்குத் தர வேண்டியதை கறாராகத் தந்துவிட வேண்டும் என்றார்.அவ்வளவு கறாரானவர் அவர்.(பின்னர் இந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது)

டோண்டுவின் எண்ணங்கள் எனக்கு உடன்பாடில்லை என்றாலும்...அவர் பிடித்த பிடி விடாது எழுதும் எழுத்தின் ரசிகன் நான்.அவர் யாருக்கும்..எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை.அதே நேரம் உண்மைகளை மறைத்ததுமில்லை.

அவரின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...

மணிகண்டன் said...

I felt sad on hearing the news. My his soul rest in peace.

வருண் said...

Sorry to know the sad news, TVR sir. I thought he outfought cancer and back to normal as he sounded re-energized recently! I will miss him!

உடன்பிறப்பு said...

மிகவும் வருத்தமடைய வைத்த செய்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Cinema Virumbi said...

திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.in

கவியாழி said...

அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்

பட்டிகாட்டான் Jey said...

எனது கண்ணீர் அஞ்சலி!

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வேகநரி said...

எனது அஞ்சலிகள்.

கோமதி அரசு said...

திரு டோண்டு ராகவன் அவர்களுக்கு அஞ்சலி.

அவர் குடும்பத்தினர்களுக்கு ஆறுதலை இறைவன் அருள வேண்டுகிறேன்.

enRenRum-anbudan.BALA said...

டோண்டு சார் அவர்கள் குறித்த என் இடுகையில் இந்த உங்கள் இடுகையின் இணைப்பை அளித்துள்ளேன். என் நீண்ட நாள் நண்பர் அவர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.. சே நல்ல மனுசன். அவரது இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று. அவரது ஆத்மா சாந்திடையவும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மனநிம்மதியையும் இறைவன் தந்தருள்வானாக.

Unknown said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

Unknown said...

ஆழ்ந்த இரங்கல்கள் !

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

சகாதேவன் said...

அவரது குடும்பத்தினருக்கு மனநிம்மதியை இறைவன் தந்தருள்வானாக.

சகாதேவன்

புரட்சி தமிழன் said...

டோண்டு ராகவன் பற்றி எனக்கு 2007 ல் இருந்து அறிகமுகம் ஒரு நல்ல பதிவர் நிறைய விமர்சனங்களுக்குட்பட்டவர் ஒரு மூத்த பதிவரை இந்த தமிழ் பதிவுலகம் இழந்துவிட்டது அன்னாரின் மறைவிற்கு என் கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி.

புரட்சி தமிழன் said...

டோண்டு ராகவன் பற்றி எனக்கு 2007 ல் இருந்து அறிகமுகம் ஒரு நல்ல பதிவர் நிறைய விமர்சனங்களுக்குட்பட்டவர் ஒரு மூத்த பதிவரை இந்த தமிழ் பதிவுலகம் இழந்துவிட்டது அன்னாரின் மறைவிற்கு என் கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி.