சாதாரணமாகவே பொது மக்களிடம் அரசு ஊழியர்க்கு ஆதரவு கிடையாது.
எந்தக் காரியம் நடக்க வேண்டுமானாலும் சம்திங் சம்திங் கொடுக்க வேண்டும்.
இது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று.
கேட்டால் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களிடம் பலிக்காது.அப்படியே பலிக்கும் என்று சொல்பவர்கள் இருந்தால் ஒரு விழுக்காடு இருக்கலாம்.
இந்நிலையில், இந்த அரசின் காலம் முடியும் நேரத்தில், அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்களின் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் எல்லாம், தவறாகவே பார்க்கப்படும். இதனால் கொஞ்ச நஞ்ச ஆதரவு மக்களிடையே இருந்தாலும், அது மாறும்.
ஆகவே...அனைத்து சாராரும்...போராட்டங்கள் செய்வதையெல்லாம் நிறுத்திவிட்டு...இந்த அரசு பிடிக்கவில்லையெனில், ஜனநாயக முறைப்படி வரும் தேர்தலில் தூக்கி எறியட்டும்.
அதைவிடுத்து, போராட்டங்கள் செய்வதெல்லாம், அனுதாப அலைகளை உருவாக்கி, இந்த அரசுக்கு ஆதரவாகவே அமையும் .
No comments:
Post a Comment